ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

இன்டர்‌லாக் சிஸ்டத்தில் அம்மி கல்லையும் குழவி கல்லையும் அடுக்கி வைத்துள்ள அழகு..

திராவிட தமிழன் பூபதி - ChockalingamSelva : நண்பர்களே...!இன்று வேலூர் 

சத்துவாச்சாரியில் கோர்ட் தாண்டி செல்லும்போது என் கண்ணில் பட்ட காட்சியை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.ரோட்டு ஓரத்தில் அம்மிக் கல் விற்கிற ஒரு ஏழை தொழிலாளி, மலையில் இருந்து தான் வெட்டி எடுத்து வந்த பாறாங்கல்லில் இருந்து அம்மி கல்லையும் குழவி கல்லையும் (அரைவை செய்கிற கல்) கொத்தி தயார் செய்து அடுக்கி வைத்துள்ள அழகு என்னை பிறம்மிக்க வைத்தது.
சாதாரண கண்ணோடு பார்த்தால் வியாபாரம் செய்கிறான் என்று சொல்லிவிடுவோம். ஆராய்ச்சி கண்ணோடு கலை கண்ணோடு பார்த்தால் ஒரு ஏழையிடம் இப்படி ஒரு திறமையா என வியக்க வைத்தது. 2 பிரிவாக அம்மி கற்களை அடுக்கி வைத்துள்ளார்.
ஒன்றில், தரையொடு ஒரு செவ்வக வடிவில் அம்மிகல், அதன் மீது உருளை வடிவில் குழவிகல், அதன் மீது மறுபடியும் ஒரு செவ்வக வடிவில் அம்மி கல் ... அது லேசாக கூட ஆடாமல் அசையாமல் நிற்க... அதின் மேலே மீண்டும் ஒரு குழவி கல்... மீண்டும் அதின் மீது சிறிதாக ஒரு மிளகு சீரகம் இடிக்கிற உரல், அதின் மீது ஒரு இடிக்கிற சிறிய கல், இப்படி எல்லாமே மேஜிக் போல் ஆடாது அசையாது நிற்பது ஆச்சர்யம்..அதிசயம்...
காற்று வேகமாக வீசினாலே போதும். மேலே குழவி மேல் இருக்கும் அத்தனை கற்களும் கீழே சரிந்து விழுந்து விடும். இந்த கற்களை தயாரித்த ஏழை சிற்பியிடம், இது எப்படி அந்தரத்தில் சாயாது நிக்கிது என கேட்டால் சிரிக்கிறான்.
இதில் மேஜிக் இல்ல... பொது மக்களின் கவனத்தை ஈர்க்க ஒன்றன் மேல் ஒன்று வைத்தேன். அது நின்னுகிச்சு... அவ்வளவு தான் சார் என்கிறார் அந்த தொழிலாளி

 திராவிட தமிழன் பூபதி : நான்கு கற்களின் எடை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும். அடிக்கல் எடை அதிகம் அதற்கு மேல் இருக்கும் கல் அதைவிடக் குறைவு அதற்கு மேல் இருக்கும் கல் அதன் எடையை விட அதற்கு கீழ் இருக்கும் குழவியின் எடையை விடக் குறைவு.. இப்படி தான்! 

இதனை விளக்க இவர்களுக்கு தெரியாது என்பது தான் . அருமை ஆனால் சந்தேகம் எங்கே வருகிறது என்றால் , சமதளத்தில் இருக்கும் கல்லில் உருளை நிற்பது , உருளையில் சமதளம் நிற்பது தான்..! 

 சமதள கல்லில் வெட்டப்படுள்ள புள்ளிகள் இதில் முக்கிய பங்காற்றுகின்றன நண்பரே! இதனைமறைமுகமாக இன்டர் லாக் என்றும் கூறலாம். இந்த இன்டர்‌லாக் சிஸ்டத்தில் கட்டப்பட்டது தான் 

தஞ்சைபெரியகோயில் மற்றும் பல பிரிட்டிஷ் கார்களின் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள். உதாரணமாக பழைய பிரிட்டிஷ் கட்டிடங்களில் பல கற்களால் அமைக்கப்பட்ட ஆர்ச் போன்ற வடிவமைப்பு இந்த தொழில்நுட்ப முறையில் தான். இதற்கு #திராவிட கட்டிடக் கலை என்று பெயரும் உண்டு

கருத்துகள் இல்லை: