சனி, 16 மே, 2020

தமிழினியின் கூர்வாள் மீது சேறு பூசிய ஆனந்த விகடன் .. கேள்வியும் பதிலும்

ஆனந்த விகடனில் வெளி வந்த  கூர்வாளின் நிழலில் நூலுக்கு விமர்சனத்திற்கு மறுப்பு! வணிக நோக்கம் ஒன்றையே குறிக்கோளாய் ஆதாரமற்ற  அவதூறு கட்டுரையை வெளியிடுவது மூத்த பத்திரிக்கைக்கு அழகல்ல
வளன்பிச்சைவளன் : எமது மறுப்பு  கூர்வாளின் நிழலில் உள்ள   உண்மைகள் ஆனந்தவிகடனில் கட்டுரை என்ற பெயரில் திரித்து, மறைத்து வெளியிட்ட செய்திகளுக்கான உண்மை செய்திகள்.
மறுப்பு ( 1)
எமது பாடசாலையில் பெரிய வகுப்பு மாணவர்களு க்கு அடிக்கடி இயக்க பிரதிநிதிகள் கூட்டங்களை நடாத்துவது வழக்கம் ஆனால் அந்த கூட்டங்களில் எனது வகுப்பு பிள்ளைகளை சேர்த்து கொள்ளமாட்டார்கள்  
 நாங்கள்
சத்தம் போட்டு க்கொண்டிருப்போம் எனக் காரணம் காட்டி துரத்தி விடுவார்கள். ஆனால் அங்கு என்ன நடைபெறுகிறது எனப் பார்பதற்கு எங்களுக்கு இருந்த ஆவல் காரணமாக வீட்டுக்கும் போகாமல் பாதிச் சுவரில் தொடங்கிய படி எட்டிப் பார்த்துக் கொண்டு இருப்போம். ஒவ்வொரு நாளைக்கும் புதிய பெயர் கொண்ட இயக்கத்தின் அண்ணன்மார்கள் வந்து கூட்டம் வைப்பார்கள் கோபத் தோடு ஆக்ரோசமாய் உரையா ற்றுவார்கள். எமது பாடசாலை யின் பெரிய வகுப்பு அண்ணன்மார், அக்காமாரும் அவர்களிடம் கேள்வி கேட்பார் கள். சில நாட்கள் பெரிய சத்த மாக வாதாட்டமும் நடக்கும். இவைகள் எல்லாம் எமக்கு புரியாவிட்டாலும் அவர்கள் கொண்டு வரும் ஆயுதங்களும் அவர்களுடைய சிந்தனை வயப் பட்ட முகங்களும் மனதின் ஆழ்மனதில் பதிந்து போயின
இதுவே நூலில் உள்ள செய்தி. இதை விகடனில் எப்படி கூறியிருக்கிறார்கள் என ஒப்பிட்டுக் கொள்க
மறுப்பு ( 2)
பரந்தன் கரடிப்போக்கு ஆகிய இரு ஊர்களுக்கிடையே வட பிராந்தியத்திற்குரிய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பிரமாண்டமான களஞ்சிய கூடங்கள் மற்றும் ஊழியர்களின் விடுதிக் கட்டடங்களில் இந்திய இராணுவ த்தினர் பாரிய முகாம் ஒன்றை அமைத்து இருந்தனர் .

நாங்கள் அதுவரையிலும் கேட்டிறாத பல மொழிகளில் பேசினார்கள் நீண்ட தலைமுடியும் தாடியுமாக பஞ்சாபியரும் மஞ்சள் நிறமும் குள்ளமான தோற்றமுமாக கூர்க்கா படையினரும் பாட புத்தகங்களில் படித்திருந்த இந்தியா வை எமது கண்களுக்கு முன்பாக நிறுத்தி இருந்தார்கள் சயன்ஸ் சென்ரர் எனப்படும் ரியுசன் சென்ரர் கரடிப் போக்கில் அமைந்து இருந்தது குமரபுரம் மற்றும் பரந்தனிலிருந்து மாணவர்கள் கூட்டமாக செல்வது வழக்கம். பெண்பிள்ளைகளை கண்டதும் "ஏய் குட்டி ஏய் குட்டி" "கல்யாணம் கட்டுவமா "இன்னும் ஏதேதோ மொழிகளில் சொல்லி கத்துவார்கள் தலையை திரும்பி பார்க்கவே பயமாக இருக்கும்
இப்படியாக சிறிது காலம் இருந்த நிம்மதியான வாழ்வு மீண்டும் குழம்பத் துவங்கியது. விடுதலைப் புலிகள் இந்திய படையினருடனான போரைத் தொடங்கி விட்டதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இளவயது பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலமாக உருவெடுத் திருந்தது யாழ்பாணத்தில் சில இடங்களில் இளம் பெண்கள் மீது இந்திய படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மக்கள் பரவலாக பேசிக் கொண்டார்கள். கிளிநொச்சியிலும் அப்படியான சம்பவங்கள் நடந்ததா என்பது எனக்கு தெரியாமல் இருந்தது ஆனால் எனது பெரியம்மாவின் மகளான எமது அக்காவை தமது வீட்டிலே வைத்து இருப்பது பாதுகாப்பு இல்லையென இரவோடிரவாக அவரை கூட்டி வந்த பெரியப்பா எமது வீட்டில் விட்டுச் சென்று இருந்தார் பாடசாலைக்கும் ரியுசனுக்கும் பெண் பிள்ளைகளை அனுப்புவதும் பெரியவர்களுக்கு பெரும் போராட்டமாக இருந்தது அப்போது க பொ த சாதாரண பரிட்சைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன்
ஒரு நாள் எமது பாடசாலை நேரத்தில் பயங்கரமான சூட்டுச் சத்தங்கள் கேட்க துவங்கின பரந்தன் பிரதேசமே சுற்றி வளைக்கப் பட்டிருந்தது மாணவர்களாகிய நாம் பயத்துடன் மேசைக்கு கீழே பதுங்கிக் கொண்டு இருந்தோம் சற்று நேரத்தில் எமது பாட சாலை அதிபரிடம் என்னவோ விசாரித்து அவரை அடிக்க தொடங்கினார் கள் எம்மால் பெரிதும் மதிக்கப்படும் எமது அதிபர் எங்களுக்கு முன்பாக அடிவாங்கி உதடுகள் வீங்கி இரத்த காயத்துடன் நின்ற கோலத்தை கண்டு மாணவர்கள் வாய்விட்டு அழத்தொடங்கினார்கள் சற்று நேரத்தில் ஊர் மக்கள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் கைகளை தூக்கிய படி பாடசாலை மைதானத்திற்கு அழைத்து வரப் பட்டது டன் முழங்காலில் மண்டியிடுமாறு நிறுத்தி வைக்கப் பட்டனர் இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு ஒடிச் சென்ற விடுதலைப் புலிகளைத் தேடும் அந்த நடவடிக்கை மாலை வரை நீடித்தது.
தினசரி பாடசாலை க்கும், மாலை வகுப்புகளுக்கும் சென்று வருவது நெருப்பின் மீது நடப்பது போல இருந்தது இந்திய இராணுவத்தினருக்கு உதவியாக இருந்த சில தமிழ் இளைஞர்கள் ஊரிலே பல இளைஞர்களைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்று பயிற்சிகள் கொடுப்பதையும் அறியமுடிந்நது அதனால் எமது வகுப்புகளில் படித்த ஆண் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தி விட்டுக் காணாமல் போகத் தொடங்கியிருந்தார்கள். நெற்றியில் சிவப்பு துணிகளை கட்டியிருந்த தமிழ் இளைஞர்களும் இந்திய படையினரும் வீதி நீளத்திற்கும் நிற்பார்கள் அவர்களுடைய பார்வைகளையும் கேள்வி களையும் காணும் போது மனதுக்குள் ஆத்திரமும் கோபமும் கொப்பளித்துக் கொண்டிருக்கும் ஆனாலும் அதை சகித்துக் கொண்டு இருப்பதை தவிர மாணவர்களாகிய எமக்கு வேறு வழி யிருக்க வில்லை காடுகளுக்குள்ளே மறைந்து இருந்து தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் உருவானது அவர்களால் மட்டும் தான் இத்தகைய துன்பங்களுக்கு எல்லாம் ஒரு விடியலைக் கொண்டு வர முடியும் எனக் கனவு காணத் தொடங்கினோம்.
இதில் அவர் சிறுமி அவர் அன்று கேள்வி பட்டதை யும் அவரது பெரியப்பா மகளை பாதுகாப்பு கருதி இங்கே கொண்டு வந்து விட்டதையும் தெரிவிக்கிறார் எனில் என்ன நிலைமை பெண் குழந்தைகளு க்கு பாதுகாப்பு இல்லை என்பது தானே
மேலும் இந்திய அமைதி ப்படை பெண்பிள்ளைகளிடம் நடந்து கொண்டவிதமே இதற்கு விடியல் விடுதலைப் புலிகளால் கிடைக்கும் என கனவு காண்போம்.
இது அங்கு விமர்சன பொருளாக உள்ளது விடுதலைப் புலிகளை குறை கூறியதாக கட்டுரையாளர் கூறுவது உள் நோக்கம் கொண்ட அவதூறு
மறுப்பு - ( 3)
அந்த காலக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இயக்கத்திற்குள் ஏற்பட்டு இருந்த இந்த விடயம் மக்கள் மத்தியில் பெரிய விடயமாகப் பேசப்பட்டது எங்களைப் போன்ற இளநிலை போராளிகளுக்கு எதுவுமே புரியாத குழப்ப நிலையாக இருந்தது ஆனால் அவர் அண்ணைக்கு (பிரபாகரன்) துரோகம் செய்து விட்டார். இந்தியாவின் "றோ" கையாளாக மாறியதுடன் தலைவரை கொலை செய்து விட்டுச் தானே இயக்கத்தின் தலைவராக செயல் படுவதற்கு முயற்சித்தார். என எமது மூத்த போராளிகள் விளக்கம் தந்து இருந்தனர்.
இயக்கத்தின் இரகசியங்களை வெளியில் சொல்பருக்கு நூறு கசையடிகளும் கேட்பவருக்கு ஐநூறு கசையடிகளும் கொடுக்கப் படும் என்பது பரவலாக இருந்த கருத்தாகும் எனவே போராளிகள் கூடியிருந்து தேவையற்ற கருத்துக்களை பேச பயந்தனர்.
அரசியல் துறையினரால் நடாத்தப்படும் சம காலகருத்தருங்குகளில் மாத்தையா தொடர்பான பிரச்சனை பற்றி பல கேள்விகள் மக்களால் எழுப்பப் பட்டன பல இடங்களில் மாத்தையா எங்கே? என கேட்டு மக்கள் கோபத்துடன் வாதிட்டார்கள் தலைவருக் கெதிரான சதி நடவடிக்கை ஒன்றின் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப் பட்டு விசாரணை நடை பெறுவதாக மக்களுக்கு விளக்கம் கூறும் படி எமக்கு விளக்கம் தரப்பட்டிருந்தது 1992 - 1993 காலப் பகுதிகளில் நான் கலந்து கொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்வி கணைகளை த் தொடுப்பார்கள் "ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப் பட்டார்கள்?
ஏன் ஏனைய இயக்க போராளிகள் புலிகளால் அழிக்கப் பட்டார்கள்?
என்பன போன்ற இளநிலை போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன உண்மையில் அந்த கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்து இருக்க வில்லை
மறுப்பு (4)
"தமிழினியக்கா, உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா"
"எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எதற்காக கேட்கிறீர்கள்" என்று நான் கேட்ட போது
"இண்டை க்கும் கிளிநொச்சி யிலிருந்து வெளிக்காட்ட ஒரு வாகனத்திற்கு அடி விழுந்துட் டுது அதான் கிளியர் பண்ண எடுத்த நாங்கள், நீங்கள் தொடர்போடு இருங்கோ கொஞ்சத்தால் எடுக்கிறோம் "
இறுதியாகப் பொலன் நறுவை நகரப் பகுதியில் கௌசல்யனுடைய வாகனத்தை பிரிந்து வந்தது நினைவுக்கு வந்தது. உடனே கௌசல்யனுடன் தொடர்பு ஏற் படுத்த முயற்சி த்தேன் அழைப்பு சென்றது யாரும் எடுக்கவில்லை சற்று நேரத்தில் மீண்டும் கிளிநொச்சியில் இருந்து அழைப்பு வந்தது "கௌசல்யன் போன வாகனத்துக்குத் தான் வெளிக்கத்தை ரோட்டில் வைச்சு அடி விழுந்திருக்கு ஒருத்தரும் தப்பயில்லை, அம்பாறை தமிழ் எம் பி சந்திரநேருவும் வாகனத் தில் இருந்தார் அவரும் சரி"
கிளிநொச்சியில் இருந்து ஒன்றாக புறப்பட்ட பயணம் முடிவதற்குள்ளாகவே உடன் வந்த போராளிகளின் மரணம் என் மனதை உலுப்பியது
காரைத் தீவு, கல்முனை பகுதிகளில் வேலை செய்து கொண்டு இருந்த பெண் போராளிகள் மூன்று பேர் என்னை சந்திக்க திருக்கோவிலூர் வருவதாக அறிவித்து இருந்தார்கள்.
சற்று நேரத ஒரு இளைஞன் எமது முகாமுக்கு ஓடி வந்து அவசரமாக ஒரு செய்தியை தெரிவித்தான்
"மூன்டு இயக்க அக்காமாரை யாரோ தம்பட்டை ரோட்டிலே சுட்டுப் போட் ஓடிட்டானுகள் அவங்களை இப்ப திருக் கோவிலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தாச்சு"
உடனடியாக முகாமில் இருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினேன் ஒரு போராளி மாத்திரம் சுயநினைவோடு பேசக் கூடிய வளாக இருந்தாள் அவர்களை அக்கறைபற்று மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸில் ஏற்றி இருந்தார்கள்.
அவர்கள் ஆட்டோ ஒன்றில் திருக்கோவில் பகுதிக்கு வந்து கொண்டு இருந்த போது சைக்கிளில் வந்த ஒரு இளைஞன் தமிழினி யக்கா எனக் கூப்பிட்டு இருக்கிறான் அதில் வந்த போராளியின் பெயரும் தமிழ் எனத் தொடங்கு ம் பெயர் எனவே யாரோ தன்னை கூப்பிடுவதாக கருதி ஆட்டோவை நிறுத்தும் படி கூறி இருக்கிறாள் ஆட்டோ வேகம் குறைந்ததும் அந்த இளைஞன் தன் பையில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து மூன்று பேரையும் நோக்கி சரமாரியாக சுட்டு இருக்கிறான் அதில் பொறுப்பாக வந்த போராளிக்கு நெஞ்சுப் பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட குண்டுகள் தீர்க்கப் பட்டிருந்தன. பயத்தினால் ஆட்டோ சாரதியும் ஓடி விட்டார். அதிக நடமாட்டம் இல்லாத அந்த வீதி சென்ற பொதுமக்கள் வாகனமொன்றில் அந்தப் போராளிகளை ஏற்றி மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்.
அவர்கள் அக்கறைபட்டு மர்த்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதும் அவர்களுக்கு உடனடியாக இரத்தம் தேவைப் படுவதாக கூறப்பட்டது. எமது போராளிகள் மருத்துவ மனைகளுக்கு செல்வதற்கு முன்பாகவே அக்கறைப்பற்றில் இருந்த சில இளைஞர்கள் இரத்த தானம் செய்திருந்தார்கள் அவர்களது மூவரறது நிலைமைகள் மோசமாக இருப்பதாலும் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாலும் வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அரசியல் பொறுப்பாளருக்கு அவசர செய்தி அனுப்பி விட்டு பதிலுக்காக காத்திருந்தேன்.
போர் நிறுத்தம் நடை முறையில் இருந்த காரணத்தால் சமாதானச் செயலகத்தின் மூலம் மேற்கொள்ள ப் பட்ட ஏற்பாடு களின் படி அரசாங்கத்தின் அனுசரணையுடன் அவர்களை கொழும்புவுக்கு எடுத்துச் செல்வது எனத் தீர்மானிக்கப் பட்டது. விசேடமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இலங்கை விமானப் படைக்கு சொந்தமான அவ்ரோ விமானத்தில் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புவுக்கு கொண்டு செல்லப் பட்டார்கள் அப்படி ஒரு அவசர சிகிச்சை வழங்கப் பட்டிருக்கா விடில் அந்தப் போராளிகள் உயிர் பிழைத்து இருக்க முடியாது
இப்பகுதியில் எங்கும் பிரபாகரன் பற்றி பின்னதாகவும் குறிப்பிட வில்லை
தமிழினி மயிரிழையில் உயிர் பிழைத்ததாக கட்டுரையா ளர் கூறியுள்ளார்.
செஞ்சோலை
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டு கொண்டு இருந்த மக்கள் தற்காப்புப் பயிற்சிகள் மக்கள் படை கட்டுமானப் பயிற்சிகள் போன்றவற்றின் ஒரு கட்டமாக மாணவர்களுக்கான பயிற்சி களும் நடத்தப் பட்டன. புதுக் குடியிருப்பு, வல்லுபுனம், செஞ்சோலை வளாகத்தில் நூற்றுகும் அதிகமான மாணவி களுக்கு தற்காப்பு மற்றும் போர்கால முதலுதவி பயிற்சி கள் மேற்கொள்ளப் பட்டிருந்த போது அந்த இடம் விமான த் தாக்குதலு க்குள்ளீகியது. அத் தாக்குதலில் ஐம்பதிற்கும் அதிகமான உயர்தர வகுப்பில் படித்த பள்ளி மாணவியர் உயிரிழந்தனர் பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி இருந்தா ர்கள் மாணவர்களுடைய பாதுகாப் பை பற்றிய போதிய திட்ட மிடல் களோ முன்னேற்பாடுகளோ இல்லாமல் அவசர கதியில் இயக்கம் முன்னெடுத்த மக்கள் படைபயிற்சியினால் ஏற்பட்ட அவலம் மிகக் கொடூரமானது.
இது எதிரி யை கணித்து செய்யப்பட வேண்டிய செயல் அவசர கதி செயல்பாடு பாதுகாப்பு குறைபாடுகளுக்கு வழிவகுத்தது என்பதே.
விகடன்
பிரபாகரன் விருப்பு வெறுப்புகளுக்கு இணங்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வழிநாடத்தப் பட்டு இத்தகைய இன அழிவை ஏற்படுத்தி இருக்கிறது "-தமிழினி
பிரபாகரனின் தவறான முடிவுகள் இறுதி வரை அவர் பல சந்தர்ப்பங்கள் இருந்தும் தவறவிட்டார் என்பதே சிங்கள இராணுவம் இன த்தின் இன அழிப்பு நடவடிக்கை களை தவிர்த்து இருக்க முடியும் அவரின் தவறான முடிவுகளால் அதை தடுக்க முடியவில்லை என்பதே
கட்டுரையாளர் ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு இன அழிவை செய்தது சிங்கள இராணுவம் இல்லை பிரபாகரன் தான் என்று பொருள் கற்பித்து எழுதியிருப்பது கடைந் தடுத்த அயோக்கியத்தனம்
இசைப்பிரியா
அவரை கடைசியாக சந்தித்தற்கு பிறகு அவருக்கு நிகழ்ந்த அவலங்களை கண்டிக்க வில்லை என உணர்ச் சியை தூண்டும் யுக்தியை கையாள் கிறார் அவர் தான் நேரடிய சந்தித்த நிகழ்வுகளை பதிவு செய்து உள்ளார்.
இதையும் தமிழினிக்கு எதிராக கட்டமைத்து இருப்பது அறிவு நாணயமற்ற செயல்.
விமர்சகர் இதை மறந்ததேன்
2002 மன்னார் மாவட்டத்தில் புலிகளின் கட்டுப் பாட்டு பிரதேசமாக இருந்த முழங்காவில் நாச்சிகுடா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் நீராவிப்பிட்டி யாழ்பாணம் ஐந்து சந்தி ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கும் கிடைத்தன கடலை நம்பியும், நிலத்தை நம்பியும் வாழ்ந்தவர்களான மிகவும் சராசரி வாழ்க்கைத் தரத்தை கொண்டிருந்த போது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. அடக்குமுறைக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொண்ட எமது இயக்கம் இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்கு முறைக்குள்ளாக்கிய நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாமலிருந்தது
தமிழினியின் ஆதங்கம்
இறுதிப் போருக்கான முடிவை தலைமை எடுத்த போது எனது சிறிதான அறிவுக் கெட்டிய வகையில்தான் அது ஒரு சிறந்த முடிவாகப் படவே யில்லை. அதன் பின்னரான காலக் கட்டத்தில் வெல்லப் பட முடியாத யுத்தமொன்றுக்காகப் போராளிகளுடைய உணர்ச்சி களும் கையாளப் பட் ட விதங்கள் மக்களுடைய நம்பிக்கையை பொய்யாக்கிய செயல் பாடுகள் எனக்கு மட்டு மல்ல பல போராளிகள் பொறுப் பாளர்கள் மற்றும் தளபதி களுக்கும் உடன் பாடானதாக இருக்கவில்லை ஆனாலும் தலைமையின் கட்டளைக்கு கீழ்படிந்து செயல்படுவதே எமது கொள்கை பிடிப்பிற்கும் இயக்க விசுவாசத்திற்கான அடையாள மாயிருந்தது அப்படி யான ஒரு இராணுவ பண்பாட்டின் அடிப்படையில் தான் நாம் வளர்க்கப் பட்டிருந்தோம். புதுக்குடியிருப்பில் நடந்த இறுதியான சந்திப்பில் பொட்டு அம்மன் கூறியது போல தலைவர் ஒரு அதிசயம் நிகழ்த் துவார் என்று நம்பிக் கொண்டு அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து செயற் படுவதை தவிர எமக்கு வேறு வழி இருக்க வில்லை.
#ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்
நடேசன் தமிழ் நாட்டில் இருக்கும் ஆதரவு சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை பேணி வந்தார். அவர்களது அரசியல் செயற்பாடுகள் இயக்கத்தை நெருக்கடி நிலையில் இருந்து காப்பாற்றும் என்ற பெரு நம்பிக்கை அவரிடம் இருந்தது.2009ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் அவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் உடனடியான ஒரு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான ஒரு சாத்தியம் உருவாகும் என்ற கருத்து புலிகளின் தலைமைக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
அந்த அளவிற்கு நடேசன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு இருந்தார் ஆனால் அப்படி ஒரு உடனடி மாற்றத்தை தமிழ் நாட்டில் இருக்கும் ஆதரவு சக்திகளால் ஏற்படுத்தக் கூடிய தாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்க வில்லை அவர்களுடைய உணர்ச்சிகரமான பேச்சுக்களும் முத்துக்குமார், செங்கொடி போன்ற உறவுகளின் தீக்குளிப்பு தியாகங்களும் இந்திய அரசின் கவனத்தை திருப்புமென எதிர்பார்க்க முடிய வில்லை
தமிழ் நாட்டில் மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களின் தேர்தல் காலத்து ஈழத் தமிழர் ஆதரவு கோஷம் தமது வாக்கு பெட்டிகளை நிரப்புவதற்காக மட்டும் தான் பயன் படுத்தப் படும் என்பதைக் கூட மறந்து அலை கடலில் ஒரு துரும்பே னும் அகப்படாதா என்ற அங்கலாய்புடன் இறுதிப் போரின் தோல்விகளுக்கு தனித்து விடப்பட்டு இருந்தார் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

விகடன் :    ஆனந்த விகடன் கட்டுரை
கூர்வாளின் நிழலில்’ புத்தக ஆசிரியரான புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினி, புத்தகம் சொல்லும் செய்தி மற்றும் கருத்துக்களை தன் வரலாறு என்று தலைப்பிட்டிருந்தாலும், அவர் போராளியாக இருந்த 18 ஆண்டு கால இயக்கத்தின் வரலாற்றையே அதிகம் பேசிச் சென்றிருக்கிறார்.
புத்தகத்தின் பின் அட்டையின் தமிழினி சொல்வதாக இப்படி வந்திருக்கிறது: “இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிடமுடியாது” ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தை முடக்கின்ற வகையிலேயே, புத்தகம் முழுக்க தமிழினியின் வாழ்க்கைப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் இருந்தவர், என்ன காரணத்திற்காகவோ அந்த இயக்கத்தின் குறைகளை தேடித் தேடி சுட்டிக் காட்ட முயல்கிறார். இந்த முயற்சியில் சில இடங்களில் வெற்றியும் பல இடங்களில் தோல்வியும் அடைந்திருக்கிறார். புத்தகம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க தமிழினி உயிருடன் இல்லை. 30 ஆண்டு காலமாக போராடிய ஓர் இயக்கத்தின் மீதான அவரது விமர்சனத்தை வாசித்துவிட்டு, அமைதி காக்கவும் முடியாது. புத்தகத்தில் முரண்பாடான பல கருத்துகள் முன்னின்று தொந்தரவு செய்கின்றன. அந்த முரண்பாடுகளை முடிந்தவரை வரிசைப்படுத்துவது, புலிகளின் போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த என்னைப் போன்றவர்களின் கடமை.
புத்தகம் முழுக்க பல இடங்களில், புலிகள் யாருக்காக போராட முனைந்தார்களோ அந்த மக்கள், புலிகளை வெறுத்தார்கள், அவர்களின் பல கேள்விகளுக்குப் புலிகளிடம் பதிலில்லை என்று தமிழினி ஆதங்கப்படுகிறார்.
( 1)
இவரது பள்ளிப் பருவத்தில் பாடசாலைக்கு வரும் இயக்கப் பிரதிநிதிகள், பெரிய வகுப்பு மாணவர்களிடம் கூட்டங்களை நடத்துகிறார்கள். அப்போது, தமிழினி உள்ளிட்ட சிறுவயது மாணவர்களை பொருட்டாக மதிக்காமல் துரத்தியிருக்கிறார்கள். குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது குறித்து புலிகளுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியை இது உணர்த்தவில்லையா?
( 2)
தமிழினியின் பள்ளிப் பருவத்தில், இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வருகிறது. அது பற்றி எழுதும்போது தமிழினி, “இந்திய அமைதிப்படை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக பேசிக் கொண்டார்கள்” என்கிறார். அமைதிப்படை தமிழ்ப் பெண்களிடம் நடந்த விதம் உலகம் அறிந்த உண்மை. ஆனால் தமிழினி தனக்கு எதுவுமே தெரியாததது போல, “பேசிக் கொண்டார்கள்” என்று மழுப்பலாக எழுதியிருப்பது நெருடலாக உள்ளது. ஒரு பெண்ணாக மட்டுமல்ல, விடுதலைப் புலி இயக்கப் போராளியாக அமைதிப்படையின் அத்துமீறல்கள் பற்றி மேலதிகத் தகவல்களை அறிந்திருப்பார்தானே? ஆனால் புத்தகத்தில் எங்குமே அதைப்பற்றி பேசவில்லை!!
இந்திய அமைதிப்படை, இவரது பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பாடசாலை அதிபரை தாக்கியிருக்கிறது. மாணவர்களை வெளியேற்றி, மைதானத்தில் பல மணிநேரம் மண்டியிடச் செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறது. இதைக் கூறும் போதும் கூட, இந்திய ராணுவத்தைத் தாக்கியவிட்டு ஓடிச்சென்ற விடுதலைப்புலிகளை தேடும் நடவடிக்கையாக அது நடந்தது என்கிறார், தமிழினி. அமைதிப் படைகளால் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும் புலிகளே காரணம் என்று சொல்லாமல் சொல்வதாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.
( 3)
மாத்தையா மீதான புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்குப் பின், அவர் என்ன ஆனார் என்ற கேள்வியோடு, “ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம்” என்று வர்ணிக்கிறார். அத்துடன், “இயக்கத்தின் ரகசியங்களை பற்றி கதைப்பதும், எமக்குத் தரப்பட்டிருந்த வேலைகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களை ஆராய்வதும் போராளிகளின் செய்யத் தகாத காரியங்களாக இருந்தன” என்கிறார்.
“விடுதலைப் புலிகள் இயக்கம், கெரில்லா இயக்கம் என்பதைக் கடந்து மரபு வழி ராணுவம் என்ற நிலைமையை அடைந்திருந்தது” என்று இந்தப் புத்தகத்தில் தமிழினியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியெனில் எந்த நாட்டின் ராணுவத்திலாவது அதில் உள்ள வீரர்கள், அந்த ராணுவத்தின் ரகசியங்களை பேசுவதும், தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிடுவதும் அனுமதிக்கப்படுமா? போராளிகள் அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையாக இருந்து கொண்டு ஒரு போராட்ட இயக்கத்தை வழிநடத்த முடியுமா? அது சாத்தியமா?
“பெண் போராளிகள் நீதிபதிகளாகவும், சட்டவாளர்களாவும், நிதிச் செயல்பாடுகளில் ஈடுபடுவோராகவும் ஊடகப் பிரிவுகளான நிதர்சனம், புகைப்படப் பிரிவு, பத்திரிகை, வானொலி ஆகிய துறைகளில் செயல்படுவோராகவும் இருந்தனர். பெண் போராளிகளில் பலர் சிறந்த இலக்கிய கர்த்தாக்களாகவும், ஆயுதப் போராட்டத்துக்கு அப்பால் அரசியல், சமூகம் பற்றிய தளங்களில் பரந்து விரிந்து தேடல் உள்ளவர்களாகவும் இருந்தனர்” என்று சொல்லிக் கொண்டே, “ஆனாலும் இயக்கத்தின் போராட்டக் கருத்தியலின் எல்லைக்கு வெளியே செல்லாமல், போராட்டத்தின் நியாயங்களை வலுப்படுத்தும் வகையிலேதான் அவர்களது படைப்பாற்றல்களும் வெளிப்படுத்தல்களும் அமைந்திருந்தது” என்று குற்றம் சாட்டுகிறார். தமிழினி என்ன சொல்ல வருகிறார்? ஓர் அமைப்பில் உள்ள நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அந்த இயக்கத்தின் கருத்தியலோடு சம்பந்தப்பட்டவர்கள் இல்லையா?
(4)
2004 -ம் ஆண்டு சுனாமியின் போது நடந்த நிவாரணப்பணிகள் குறித்து பேசுகிறார். போர் நிறுத்தம் அமலிலுள்ளது. அப்போது கிளைமோர் தாக்குதலில் ஒரு ஆண் பொறுப்பாளர் உயிரிழந்ததுடன், பெண் போராளி பலத்த காயமடைகிறார். சுனாமி நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்த அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் அம்பாறை தமிழ் எம்பி சந்திரநேருவும் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடன் போராளிகள் சிலரும் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நல்வாய்ப்பாக தமிழினி உயிர்ப்பிழைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆட்டோவில் சென்ற மூன்று பெண் போராளிகள் சுடப்படுகிறார்கள். அவர்கள் கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிர்ப் பிழைக்கிறார்கள்.
மேற்கண்ட தாக்குதல்கள், போர் நிறுத்த நேரத்தில் சுனாமிக்குப் பின்னர் நடந்து கொண்டிருந்த நிவாரணப்பணிகளின் போது போராளிகள் மீது நடத்தப்பட்டன. இவ்வளவையும் கூறிவிட்டு, இலங்கைத் தீவில் போரா சமாதானமா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி மிக்க மனிதராகத் திகழ்ந்தார் பிரபாகரன் என்கிறார்.
மேற்கண்ட சம்பவங்களில், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய இலங்கை ராணுவம் பற்றி புத்தகம் முழுக்க எந்த இடத்திலும் தமிழினி பதிவு செய்யவில்லை என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, இறுதிக்கட்டப் போரின் போது கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதை தவறான நிலைப்பாடு என்று சொல்கிறார். அப்போது, கட்டாய ஆள் சேர்ப்பு வேலையை தமிழினி செய்ய மறுத்திருக்கிறார். உடனே அந்தப் பணியிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
கட்டாய ஆள் சேர்ப்பு தவறான முடிவு என்றாலும் கூட, அதை எதிர்த்த தமிழினிக்கு அந்தப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை பக்குவப்பட்ட ஜனநாயக நடவடிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது.
இறுதிக்கட்டப் போரின் தொடக்க காலத்தில், செஞ்சோலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் மீதான இராணுவத்தின் தாக்குதலை மறக்க முடியுமா? 50க்கும் அதிகமான பள்ளிமாணவிகள் அதில் உயிரிழந்தனர் என்று சொல்லும் தமிழினி, அங்கேயும் விடுதலைப்புலிகளையே குற்றம் சுமத்துகிறார். மாணவர்களுடைய பாதுகாப்பைப் பற்றிய போதிய திட்டமிடல் இல்லாததால் இந்த அவலம் நேர்ந்ததாக சொல்கிறார். ராணுவத்தினர் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது என்று ஒரு வார்த்தை கூட தமிழினி பதிவு செய்யவில்லை.
இறுதி கட்டப் போரின் போது, அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டபின் பொறுப்பேற்ற நடேசன், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு தலைவர்களுடன் நெருக்கமாக இருந்ததைக் குறிப்பிட்டு, 2009-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா முதல்வர் ஆனதும், மைய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என்ற கருத்து புலிகளிடம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறுகிறார். இந்தக் கருத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும் தமிழினி கூறுகிறார்.
யாருக்குத்தான் இருக்கும்? ஏனெனில், இந்தியாவில் 2009-ம் ஆண்டு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் ஜெயலலிதா முதல்வர் ஆவது சாத்தியமா? அதே போல் முத்துக்குமார், செங்கொடி உறவுகளின் தீக்குளிப்புத் தியாகங்களும் இந்திய அரசின் கவனத்தைத் திருப்பும் என எதிர்பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார். முத்துக்குமார் போர் நிறுத்தம் வேண்டி தீக்குளித்தார் என்பது சரி. முள்ளிவாய்க்கால் பேரவலம் அரங்கேறிய ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில்போட எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தவர் செங்கொடி. செங்கொடிக்கும் போர் நிறுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?
இதுபோன்ற தவறான தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வது? இந்தியா-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ள தவறுகளை உறுதியாக நம்மால் சுட்டிக்காட்ட முடிகிறது. அப்படியென்றால் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விஷயங்களில் இன்னும் என்னென்ன தகவல்கள் தவறுதலாக இருக்கிறதோ?
2009 மே மாதம், போரின் இறுதி நாட்களில் கடற்புலி தளபதி ஸ்ரீராமை சந்தித்தாகவும், அவர் மனைவி இசைப்ரியாவுக்காக காத்திருந்ததாகவும் தமிழினி கூறியிருக்கிறார். அதன்பின்பு இசைப்ரியாவுக்கு ஏற்பட்ட கதி நம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அதைப் பற்றி புத்தகத்தில் வேறு எங்கேயும் தமிழினி பேசவில்லை என்பது மிக வருத்தப்படக் கூடிய செய்தி.
மே பதினாறாம் தேதி தமிழினியும் சில போராளிகளும் வெளியேறுகிறார்கள். முல்லைத்தீவு மைதானத்தில், இலங்கை ராணுவத்தின் முன்பு மக்களோடு மக்களாக இவரும் பிற போராளிகளும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது ராணுவத்தினர் தண்ணீர் போத்தல்களும் உணவுப் பொட்டலங்களும் வழங்குகின்றனர். சரணடந்தால் என்ன நடக்குமோ என போராளிகள் பயந்திருக்கும்போது, ராணுவத்தினர் மும்முரமாக மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர் என்கிறார், தமிழினி!!
ராணுவத்தினர் பற்றி தமிழினி கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அந்த இறுதி நாட்களில் இசைப்ரியா போன்ற பெண் போராளிகள் பலருக்கும் ஏற்பட்ட அவலத்திற்கு இலங்கை ராணுவம் காரணம் இல்லையா? அது பற்றி தமிழினி சொல்லாமல் சாதாரணமாகக் கடந்து செல்வது அறமா? இதை எல்லாவற்றிற்கும் மேலாக “நந்திக் கடல் நீரேரியை சிறு படகு மூலம் கடந்து தப்பிச் செல்ல பிரபாகரன் திட்டமிட்டு இருந்த"தாக கூறுகிறார். அத்துடன், “தோல்வியைக் கற்பனை செய்தபடிதான் தலைவர் இறுதி யுத்தத்தை ஆரம்பித்தாரோ” என்று தமிழினி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மே 19-ம் தேதி தமிழினி, பொதுமக்களோடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில், நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக புகைப்படம் வெளியான செய்தித்தாளைக் காட்டிய தமிழ் இளைஞர்(!), “உங்கள் தலைவர் செத்துப் போனார். எல்லோரும் அழுங்கோ” என்று கேலி செய்து அழுது காட்டியதாக சொல்கிறார்.
தமிழினி சொல்வது போல, அல்லது கேள்விப்பட்டது போல பிரபாகரனுக்கு போரின் முடிவு முன்னரே தெரிந்திருக்கும் பட்சத்தில், நந்திக் கடல் வழியாக தப்பிச் செல்ல திட்டமும் இருந்திருக்கும் பட்சத்தில், பேரழிவுக்கு முன்பாக அவர் எளிமையாக தப்பித்திருக்க முடியுமே? குறைந்தபட்சம் அவரது குடும்பத்தாரையாவது தப்பிப் பிழைக்கச் செய்திருக்க முடியுமே? பாலச்சந்திரனுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காதே?!
தமிழினி, “பிரபாகரனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின் படி இயக்கம் வழிநடத்தப்பட்டது இத்தகைய இனஅழிவை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார். இந்த வார்த்தைகள் மூலம், தமிழின அழிப்பை செய்தது, இலங்கை ராணுவம் அல்ல பிரபாகரன் என்று தமிழினி நிறுவ முயல்கிறார்.
ஒட்டுமொத்த இயக்கத்தின் மீதும் குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் தமிழனி, இலங்கை ராணுவத்தைப் பற்றி கூறும்போது, 'சுனாமியின்போது நிவாரணப் பணிகளை சிறப்பாகச் செய்தார்கள்; தஞ்சமடைந்த தமிழ் மக்கள், சரணடைந்த போராளிகள் ஆகியோரை நல்ல முறையில் நடத்தினார்கள்' என்று நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இதற்கு அவர்கள் தகுதியானவர்களாகவே இருக்கட்டும். ஆனால் சுட்டிக்காட்ட அவர்களிடம் எந்தத் தவறுமே இல்லை என்று தமிழினி நினைத்து விட்டார் போலும்!! அதை வாசகனையும் நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
சரணடைந்த பின்பு, “நாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய பெண்களின் நிலை இன்று சமூகத்தில் எவ்வளவு மோசமானதாக ஆகிவிட்டது. ஒரு நாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது” என்று தமிழினி தன் இறுதி நாட்களில் வேதனைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.
உண்மைதான். நாட்டின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய குற்றத்திற்காக இன்னும் எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளுக்கு பிரபாகரனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஆளாக நேரிடுமோ?
'ஒரு கூர்வாளின் நிழலில்' புத்தகத்தின் பின் அட்டையில், தமிழினி கூறியதாக வெளியான கருத்தை சொல்லியே இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
“இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது!

கருத்துகள் இல்லை: