சனி, 2 மே, 2020

கொரோனா தொற்று வவ்வால் மூலம் பரவாது- ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்று வவ்வால் மூலம் பரவாது- ஆய்வில் கண்டுபிடிப்புமாலைமலர் : : வவ்வால்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என்று மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கூறினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறை வவ்வால் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 35 மாணவர்கள் வவ்வாலின் குண நலன்கள் தொடர்பான டாக்டர் பட்ட (பி.எச்.டி) ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

ஆய்வு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், தேசிய விஞ்ஞான கழகத்தின் கவுரவ விஞ்ஞானியுமான மாரிமுத்து கூறியதாவது:-
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை வவ்வால்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது. கொரோனா குறித்து வவ்வால்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆல்பா வைரஸ், பிளா வைரஸ், வெஸ்க்யூ வைரஸ், ஆர்.பி. வைரஸ் போன்றவை வவ்வாலிடம் கண்றியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று பரவாது. அதற்கான உயிரியல் ஆதாரங்கள் இல்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் வவ்வால்களை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: