செவ்வாய், 28 ஜூன், 2016

இட்லி – தோசை – ரஜினிதான் தருண் விஜயின் தமிழ்ப் பற்று !

MP-Tarun-Vijay
வழக்கமாக நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிங்கப்பூர் டால்ஃபின் சர்க்கஸுக்கோ, டோக்கியோ வாண வேடிக்கைக்கோ, அமெரிக்காவில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கோ சென்று வந்தால் என்ன நடக்கும்? மீனம்பாக்கத்திலிருந்து கார்டன் அல்லது தோட்டம் அல்லது தாயகம் அல்லது பவன் செல்லும் வழிகளில் “டால்ஃபின் கண்டு களித்த தங்கத் தாரகை, டோக்கியோ வென்று வந்த புரட்சிப் புயல், அமெரிக்காவில் ஆரோக்கியத்தை மீட்டெடுத்த தளபதி” இன்னபிற லித்தோ சுவரொட்டிகள் கண்ணைக் குத்தும்! தமிழகத்தைப் பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் வானரப்படை அனைத்தும் தமிழின விரோத கூரூப்பாகவே மக்களால் மதிப்பிடப்படுகிறது. என்ன செண்ட் போட்டாலும், என்ன சாயம் பூசினாலும் அவர்களை அவாள் கட்சியாகவும், ஹிந்தி வாலாக்களாகவும்தான் நமது மக்கள் ஃபீல் பண்ணுகின்றனர்.

இதை மாற்ற என்னென்னமோ செய்கிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத்தை இந்து முன்னணியாக ரிலீஸ் செய்தார்கள். தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆக வாலண்டியராக வண்டியேறியிருக்கும் சீமானை “தமிழகத்தின் ரைசிங் ஸ்டாராக” பாராட்டுகிறார்கள் (ஸ்வராஜ்ஜியா இணைய தளத்தில்).
அந்தபடிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் மெகா திட்டப்படி உத்தர்காண்ட் எம்.பி தருண் விஜய், மீனம்பாக்கம் டூ கமலாலயம் ரூட்டில் “தமிழ் காத்த தங்கமகன்” போஸ்டு மற்றும் போஸ்டர் டூட்டிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமயத்தின் அடிவாரத்தில் சம்சா, ஜிலேபி, ராமன் – கிருஷ்ணா காம்பினேஷனில் காலம் தள்ளிய இவரை திடீரென்று தமிழைக் காதலிக்கும் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரமாகச் சுடச்சுட இறக்கியிருக்கின்றனர். இவரது முயற்சியில் வடக்கே திருக்குறளை முதன் முறையாக ஏதோ “திருட்குரல்” என்றாவது உச்சரிக்கிறார்களாம். ஹரித்வாரில் திருவள்ளுவரை ஏதோ ஹிந்து ரிஷி என்று மக்கள் நமஸ்கரிக்கும் வண்ணம் சிலை நிர்மாணமும் செய்திருக்கிறார்களாம். எப்படியோ மதச்சார்பில்லாமல் இருக்கும் பார்ப்பனிய எதிர்ப்பு தமிழ் மரபை கீதை மரபில் கலக்க வைப்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம்.
இருப்பினும் குரங்கிற்கு புலி பெயிண்ட் அடித்தாலும் குற்றாலத்தில் அடிக்கும் மெல்லிய ஆனி ஆடிச் சாரலிலேயே கலர் கலைந்து சேட்டை தெரியுமல்லவா!
“எனது தமிழ்க் காதலுக்கு உள்நோக்கம் ஏதுமில்லை” என்று பரம்பூஜனிய தருண் விஜய் ஜி அவர்கள் 22.06.2016 தேதியிட்ட ஹிந்து ஆங்கில நாளிதழில் நேர்காணல் கொடுத்திருக்கிறார்கள். கிளைமேக்சில் அவரது தமிழ்க் காதலின்  விசுவரூப தரிசனம் கண் ததும்பும் காட்சியாக திகழ்கிறது. படியுங்கள்.
கேள்வி: தமிழையும், தமிழ்நாட்டையும் அறிந்த பிறகு உங்களது வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது?
தருண் விஜய்: ஏதோ ஒரு தமிழ் சினிமாவைப் பார்க்காமல் எனது மகனது நாள் முடிவதில்லை. அவன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனும் கூட. எங்களது சமையலறையில் இருந்த ரொட்டியை அகற்றிவிட்டு இட்லியும், தோசையும் வந்து விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
இட்லி தோசை சுட்டுத் தின்றபின்
ரஜினி சினிமாவில் மூழ்குக!   – இதுதான் தமிழ்க் காதலின் சாதனை என்றால் “திருவள்ளுவரே இந்தப் பாவிகளின் மச்ச அநியாயங்களை பார்க்காமல் மரித்துப் போன நீர் பாக்கியம் செய்தவர்!”.  வினவு.காம்

கருத்துகள் இல்லை: