வியாழன், 30 ஜூன், 2016

ஆங்கிலம் இனி தேவையில்லை : ஐரோப்பிய ஒன்றியம் முடிவு


லண்டன் :ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளதால் தங்களின் அலுவல் மொழிகளின் பட்டியலில் இருந்து ஆங்கிலத்தை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் உறுப்பு நாடுகளிலும் இனி ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்காது என கூறப்படுகிறது.
இது குறித்து ஐரோப்பிய பார்லி.,ன் அரசியலமைப்பு விவகார குழு கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் அவர்களின் மொழியான ஆங்கிலம் எங்களுக்கு தேவையில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் அனைத்திற்கும் தங்களின் முதன்மை மொழியை தேர்வு செய்யும் உரிமை உண்டு. ஆனால் பிரிட்டனை மட்டுமே ஆங்கிலத்தை தங்களின் முதன்மை மொழியாக பதிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணங்கள் மற்றும் சட்ட பதிவுகள் 24 ஆட்சி மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதனால் ஆங்கிலம் தனது அந்தஸ்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: