ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

காஞ்சி ஜெயேந்திரர் மீதான கொலைவழக்கு மேல்முறையீடு பயனற்றது மத்திய அரசு தலைமை வக்கீல் கருத்து !

புதுடெல்லி
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வது பயனற்றது என்று மத்திய அரசு தலைமை வக்கீல் கருத்து தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3–ந் தேதி கோவில் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார். சங்கரமடம் பற்றி புகார் கடிதங்கள் எழுதியதால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் ஜெயேந்திரரின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை புதுச்சேரி கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  அதாய்ன் ஊத்தி மூடிட்டாகளே இனியும் இனியும் அதை கிளற பைத்தியமா பிடிச்சுருக்கு ? அவரு சுத்த நம்மவா ! பிரேமானந்தா நித்தியானந்தான்னா சட்டம் தயவு தாட்சண்யம் பார்க்காம கடமையை செய்யும் அவா சூத்ரா இதுதான் பாலபாடம் !

கவர்னர் உத்தரவு இந்த வழக்கில் 2009–ம் ஆண்டு முதல் 2012–ம் ஆண்டு வரை 189 சாட்சிகள் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். இதில் 83 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். இந்த வழக்கில் புதுச்சேரி கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் 21 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் அப்போதைய புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியா இந்த வழக்கில் சங்கராச்சாரியார்கள் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு மத்திய உள்துறை மூலம் மத்திய அரசின் தலைமை வக்கீல் (அட்டார்னி ஜெனரல்) கருத்தை கேட்டிருந்தது.
மேல்முறையீடு பயனற்றது இதுகுறித்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது பயனற்றது என்று கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி, விடுதலைக்கான 20 முக்கிய காரணங்களை விளக்கி உள்ளார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற விதம் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே இதில் மேல்முறையீடு செய்வதால் ஐகோர்ட்டின் கண்டனங்களை தான் பெற வேண்டியதிருக்கும் என்றும் அவர் கூறியதாகவும் தெரிவித்தனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை: