செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மவுலி வாக்கம் கட்டிட விபத்து இயற்கை பேரிடராம்? ஊத்தி மூட ஆயத்தம் !

சென்னை, மவுலிவாக்கத்தில், 61 பேரை பலி கொண்ட அடுக்குமாடி கட்டட விபத்தை, இயற்கை பேரிடராக வகைப்படுத்தும் விதமாக, விசாரணை கமிஷனின் பரிந்துரைகள் அமைந்துஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனத் தால் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம், ஜூன், 28ம் தேதி இடிந்து விழுந்ததில், கட்டுமான பணியாளர்கள், 61 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய, 27 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணங்கள், தவறுகளுக்கு பொறுப்பானவர்கள், வருங்காலங்களில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசாரித்து பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜூலை, 3ம் தேதி அமைக்கப்பட்டது. மவுலி வாக்கம்  , அப்படி பார்த்தால் சென்னையில் உள்ள பாதி கட்டிடங்கள் இது போன்ற இடியில் விழுந்திருக்க வேண்டும்... இங்கெல்லாம் 30~40 மாடிகள் சர்வசாதாரணம்..100%சுத்தமான உண்மை என்ன வென்றால் மௌலிவாக்கம் பில்டர்கள் ஏடிஎம்கே வோட பினாமிகளே என்பது உறுதியா தெரியுது. அவாளை தப்பிக்க வைக்கவே அரசு நாடகம் போடுது. ஏழைகளின் வோட்டு மட்டுமே வேண்டும். உசிரு போனால் நோ ப்ராப்ளம்
கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள், தீயணைப்புத் துறை என, பல்வேறு துறை அதிகாரிகளிடம், நீதிபதி ரகுபதி விசாரணை நடத்தினார்.


அறிக்கை தாக்கல் :
விசாரணை முடிந்து, நேற்று காலை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். விசாரணை அறிக்கை, 523 பக்கங்களைக் கொண்ட, மூன்று புத்தகங்களாக உள்ளது. முதல் புத்தகம், 186 பக்கங்களைக் கொண்டது. இதில், 186 பேரிடம் நடத்திய, விசாரணை அறிக்கை இடம் பெற்றுள்ளது.இரண்டாவது புத்தகம், 192 பக்கங்களைக் கொண்டது. இதில், விபத்தில் இறந்தவர்களின், உடல் பரிசோதனை அறிக்கை, விபத்து நடந்த இடத்தின் மண் ஆய்வு, விபத்திற்கான காரணங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. மூன்றாவது புத்தகம், 145 பக்கங்களைக் கொண்டது. இதில், இனிமேல், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமலிருக்க, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் கட்டட நிபுணர்களின் கருத்து இடம் பெற்றுள்ளது.


இயற்கை பேரிடரா?
மவுலிவாக்கம் கட்டட விபத்து இயற்கை பேரிடர் போன்று வகை படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே, அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கும் நடைமுறைகள், சி.எம்.டி.ஏ., துவங்கப்பட்ட போது இருந்த நிலையிலேயே, இப்போதும் உள்ளன. இதை மாற்றுவதற்கான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக, பொது கட்டட விதிகø ள அமலாக்கலாம் என்றும், அடுக்குமாடி திட்ட அனுமதி பெறும் கட்டுமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பரிந்துரைகள் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான பதில் மனு தயாரிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.


நியாயமா? :
பெயர் வெளியிட விரும்பாத நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: இந்த சம்பவத்தை இயற்கை பேரிடராக பார்த்தால், இதற்கு காரணமான நபர்கள், சட்டத்தின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே வழிவகுக்கும். இந்த சம்பவத்தின் பாதிப்பு வேண்டு மானால், இயற்கை பேரிடருக்கு நிகராக இருக்கலாம். ஆனால், மனித தவறுகளே இச்சம்பவம் நிகழ காரணம் என்று பிரித்து பார்த்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


53 நாளில் அறிக்கை தாக்கல் :
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் நடந்த முறைகேடு, தர்மபுரி இளவரசன் மரணம் ஆகியவை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், குறித்த காலத்திற்குள், விசாரணையை முடிக்காத நிலையில், மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஒரு நபர் விசாரணை கமிஷன், 53 நாட்களில், அறிக்கை தாக்கல் செய்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் :
விசாரணை அறிக்கை தயாரிப்பில் அலுவல் ரீதியாக யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள, கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.இந்த விவகாரத்தில், இடிந்து விழுந்த கட்டடத்துக்கு சாலை அகலம், பக்கவாட்டு காலியிடம் போன்ற சில விதிகளை தளர்த்த, அரசுக்கு பரிந்துரைத்து, அதன் அடிப்படையில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் திட்ட அனுமதி அளித்ததாக, புகார் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், விசாரணை கமிஷனின் அறிக்கை தயாரிப்பு பணியின் போது, சி.எம்.டி.ஏ.,வின் அடுக்குமாடி திட்ட அனுமதி பிரிவை சேர்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும் உடன் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.


சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கு :
'மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த, 5ம் தேதி நடந்த விசாரணையின் போது, நீதிபதி ரகுபதி கமிஷன் குறித்து, தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இவ்வழக்கு விசாரணையை, ஆக., 28ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், '28ம் தேதிக்குள், மவுலிவாக்கம் கட்டட விபத்து மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களையும், அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர். இந்நிலையில், நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நமது நிருபர்dinamalar.com

கருத்துகள் இல்லை: