செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மேயர் தேர்தலுக்காக புதிய திட்டங்கள் அறிவிப்பு !

மூன்று மாநகராட்சி மேயர் பதவிக்கு, இடைத்தேர்தல் வர உள்ளதால், அந்த மாநகராட்சி மக்களை கவரும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுதூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மேயர் விஜிலா சத்தியானந்த், ஆகியோர், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானதால், தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்தனர். கோவை மேயர் வேலுசாமி, கட்சி தலைமை உத்தரவை ஏற்று, தன் பதவியை ராஜினாமா செய்தார்.காலியாக உள்ள, மூன்று மாநகராட்சி மேயர் பதவிக்கு, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின், இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம், யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த 6ம் தேதி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மேயர் பதவிக்கு, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அன்றைய தினமே, மனு தாக்கல் துவங்குவதாகவும், செப்., 18ம் தேதி, தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஆனாலும் இவ்ளோ பதவி வெறி கூடாது. பப்பெட் ஷோ தான் ஆட்சியிலே அதிகம். இதுகளுக்கு ஜால்ரா தட்டும் பிரவீன்குமாரை முதல்ல நாடு கடத்தனும் இல்லே மிசாராமுக்கு துரத்தனும். அரசு அதிகாரிகள் ஜால்றாவாக இருக்கும்வரை இதே தொல்லைகளே தொடரும். டிவி சீரியல்கள் போல இலவசத்துக்கு பறக்கும் மக்கள் உள்ளவரை நாடு நாசமா தான் போவும் 

சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போதே, தேர்தல் அறிவிப்பு வெளியானது, அரசியல் கட்சியினரிடம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், அன்றைய தினமே, தேர்தல் கமிஷன், தன் தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற்றது. அதன்பின் தேர்தல் தேதி, இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க., மேயர் தேர்தலுக்கு, முழு வீச்சில் தயாராகி வருகிறது. மூன்று மாநகராட்சிகளிலும், மக்களை கவருவதற்காக, முதல்வர் ஜெயலலிதா, புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். நேற்று முன்தினம், கோவை மாநகராட்சியில், 2,378 கோடி ரூபாய்க்கு, புதிய திட்டங்களை அறிவித்தார். நேற்று, திருநெல்வேலி மாநகராட்சியில், 525 கோடி ரூபாய் மதிப்பிலும், தூத்துக்குடி மாநகராட்சியில், 320 கோடி ரூபாய் மதிப்பிலும், பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அறிவித்துள்ளார்.
புறக்கணிக்கும் யோசனை: மேயர் தேர்தலில், அதிக ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, முதல்வர் இத்திட்டங்களை அறிவித்துள்ளார். மேயர் வேட்பாளர் தேர்வையும், முடித்து விட்டார். எனவே, விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பாக, முதல்வர்பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பது, எதிர்க்கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதையே காரணமாக காட்டி, உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் யோசனையிலும் எதிர்க்கட்சியினர் உள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: