செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக


வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க அவருக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவையாற்றிய தமிழ் பிரதி அமைச்சர் ஒருவர் தேவை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி குறித்தவருக்கு வழங்கப்பட வேண்டும் என இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இத்தமிழ் உறுப்பினர் கிசோரா? அன்றில் கனகரெட்னமா? ஏன்பது தெரியவில்லை. முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த 75சதவீதமானவர்கள் இன்னமும் நிவாரண கிராமங்களிலும் நண்பர்கள் உறவினர்களுடனும் தங்கியுள்ளனர் இவர்களுடைய மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் அதேநேரத்தில் புத்தளத்தில் உள்ள இடம்பெயர்ந்த முஸ்லிம்மக்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் மீளவும் குடியமர்த்த வேண்டும் என்பதே தமிழ்மக்களுடைய கோரிக்கையாக அமைந்துள்ளது பல இன்னல்களுக்கு மத்தியில் வடபுல முஸ்லிம்கள் புத்தளத்திலும் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்துவருகின்றனர் யுத்தம் முடிவடைந்துள்ளதால் அவர்களுடைய மீள்குடியேற்ற விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என நிவாரண பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை: