ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சூப்பர் ஸ்டாரிலிருந்து சும்மா ஸ்டார் வரை யாருமே எட்டிப் பார்க்கவில்லை அவரது இறுதிச் சடங்கின்போது. அன்றைய



எழுதுபதுகளின் இறுதியில் வண்டிச் சக்கரம் படம் மூலம் தமிழ் சினிமா [^]வில் அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்ற சொல்லுக்கான இலக்கணத்தையே அடியோடு மாற்றிய பெருமை சில்க் ஸ்மிதாவுக்கு உண்டு.

ஒரு ஹீரோயினுக்கும் மேலான அந்தஸ்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவைக் கலக்கினார் ஸ்மிதா.

ரஜினி, கமல், சிவாஜி என யார் நடித்த படமாக இருந்தாலும் அதில் சில்க்கின் ஒரு கவர்ச்சிப் பாடலும், சில சிணுங்கல் காட்சிகளும் இருந்தே தீர வேண்டும் என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார்கள் தமிழ் விநியோகஸ்தர்கள்.

திரை வாழ்க்கை வண்ணமயமாக இருந்தாலும், சில்கின் நிஜ வாழ்க்கை எத்தனை சோகமானது என்பதை அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாள், ராயப்பேட்டை மருத்துவமனை பிணக் கிடங்கில் தேடி வந்து பார்த்து அழக் கூட யாருமற்ற நிலையில் அவர் சடலம் கிடந்தபோதுதான் உணர முடிந்தது.

சூப்பர் ஸ்டாரிலிருந்து சும்மா ஸ்டார் வரை யாருமே எட்டிப் பார்க்கவில்லை அவரது இறுதிச் சடங்கின்போது. அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த், வடிவுக்கரசி, மனோரமா, கங்கை அமரன் என வெகு சிலர் மட்டும்தான் அவரது சடலம் சுடுகாடு வரை செல்ல துணை போனவர்கள்.

திரையில் கவர்ச்சி ராணியாகவும் நிஜத்தில் சோக நாயகியாகவும் திகழ்ந்த சில்க்கின் வாழ்க்கைதான் இப்போது தமிழ் - இந்தியில் சினிமாவாக வருகிறது.

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலனுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். ஏக்தா கபூர் தயாரிக்கிறார். இன்னும் இறுதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை: