திங்கள், 4 செப்டம்பர், 2017

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை முதல் வாகன ஒட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருப்பது கட்டாயம் என லாரி உரிமையாள்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் டிப்பர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இருவேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருப்பது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார். மேலும், இதுகுறித்த மற்றொரு வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வருவதால், செவ்வாய்க்கிழமைக்கு நடப்பு வழக்கை ஒத்தி வைப்பதாகவும், அதுவரை வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கக் கூடாதெனவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் வாகன ஓட்டிகள், நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. nakkeeran


கருத்துகள் இல்லை: