செவ்வாய், 26 ஜூலை, 2011

போர்க்குற்றவிசாரணை வேண்டாம் –சுமந்திரன் புத்திமதி!

லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் மூலம் நுழைந்தசுமந்திரன் உரையாற்றினார்.
புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தான் பிரித்தானியாவிலும் வேறு இடங்களிலும் சந்தித்த இராஜதந்திரிகள் விமர்சித்ததாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது பெரும்பான்மை சிங்கள சிங்கள மக்களால் ஏற்கக் கூடிய தீர்வாக அமைய வேண்டும் தனது உரையில் தெரிவித்தார்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசு பேச்சுவார்த்தையில் இறுதியாக நடைபெற்ற 3 பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றங்களை இருப்பதாகவும் தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன்,
போர்க்குற்றம் இரண்டு பகுதியினருக்கும் எதிராக இருப்பதால் அந்த விசாரணையைப் பயன்படுத்தி எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளப் போகின்றோமா? என்று கேள்வி எழுப்பிய சுமந்திரன் தனது உரையின் தொனியில் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பாமரத்தனத்தை சாடும் வகையில் உரை நிகழ்த்தியிருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கு தமிழரசுக்கட்சி முட்டுக்கட்டையாக இருக்கின்றதே எனக் கேள்வி எழுப்பிய போது நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய இரத்தினசிங்கம் என்பவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயத்திற்கு பதில் வழங்க முடியாது என்று சுமந்திரன் நழுவியிருக்கின்றார்.
புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என மீண்டும் வலியுறுத்திய சுமந்திரன் தெரிவித்த சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை நோக்கியே தாம் செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் மக்கள் எதுவும் அறியாதவர்கள், அவர்கள் அரசியல் ஞானம் அற்றவர்கள் போன்ற தொனியில் அவர் உரையாற்றியமை புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையினைத் தோற்றுவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: