வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்் சித்திரவதை

வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பெண் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார் 
 மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய பெண் ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி தீக்காயங்களுடன் நேற்று வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன சந்திரசேகர தெரிவித்தார். கட்டார் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய மதுரங்குளி கணமூலையைச் சேர்ந்த 27 வயதுடைய அப்துல் மஜீது ஹில்மியா என்பவரே இவ்வாறு தீக்காயங்களுடன் நாடு திரும்பி சிகிச்சைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார். தான் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது தன்னால் ஏற்பட்ட தவறொன்றின் காரணமாக வீட்டு எஜமானிப் பெண் தன் மீது சுடுநீர் அடங்கிய பாத்திரம் ஒன்றை வீசி தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதனாலேயே தனக்கு இந்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தான் கடந்த 13ம் திகதி இத்தாக்குதலுக்குள்ளானதாகவும், நேற்று முன்தினம் நாடு திரும்பியதாகவும் அப்பெண் பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

கறடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் பாரிய வெடி விபத்து. 60 பேர் பலி

மட்டக்களப்பு கரடியனாறில் இன்று காலை பாரிய வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்றிப்பதாக தெரிவிக்கும் இராணுப் பேச்சாளர். அப்பிரதேச்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைகளுக்கு தேவையான வெடிபொருட்கள் கறடியனாறு பொலிஸ் நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தாகவும், சீன நிறுவனம் ஒன்றுக்கு தேவயான வெடிபொருட்களை அந்நிறுவனத்தின் சீனப்பிரஜைகளான இருவர் எடுத்துச் செல்லும்போது இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வெடிப்புச் சம்பவம் பொலிஸ் நிலையத்தினுள்ளளேயே இடம்பெற்றபோது அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வெடிபொருள் கொள்கலன்களும் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் பொலிஸ் நிலையத்திலிருந்த சுமார் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்புகின்றோம் அத்துடன் வெடிபொருட்களை எடுத்துச் செல்லவந்திருந்த சீனப்பிரஜைகள் இருவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அனுமானிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்பினால் பொலிஸ் நிலையம் முற்றாக நிர்மூலமாகியுள்ளதுடன் அண்மையில் உள்ள குடிமனைகள் கட்டிடங்களும் சேதமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குண்டுவெடிப்பில் 100 மேற்பட்டோர் காய மடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே நேரம் 9 பேர் மட்டக்களப்பு ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அத்துடன் கவலைக்கிடமான நிலை யில் 4 பேர் கொழும்பு தேசிய வைத் திய சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணத்தை வாங்கி காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள

காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக தினசரி செய்திதாள்களை புரட்டியபோது தினமும் குறைந்தது 3 புகைப்படங்களாவது கண்ணில் பட்டது. அந்த படத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் பூக்கள் நிரம்பிய தட்டுகளோடு எதிரும் புதிருமாக வரிசையில் நின்றுகொண்டு நடுவில் நடந்து வருபவர்களுக்கு மலர் தூவிக்கொண்டிருந்தனர்.

வேறு சில படங்களில் அதேபோல் வேறு பள்ளி மாணவ-மாணவிகள் சிலருக்கு பாதபூஜை செய்துக்கொண்டிருந்தார்கள்.
மலர் தூவி பாத பூஜை செய்யும் அளவுக்கு அந்த மிக முக்கியமானவர்கள் யார் என படத்தை உற்று உற்று பார்த்தபோதும் சம்பந்தப்பட்ட வி.ஐ.பிகள் யாரென்றே தெரியவில்லை. புகைப்படத்திற்கான செய்திகளை படித்தபோது தான் தெரிந்தது;அவர்கள் ஆசிரியர் பெருமக்களாம் செப்டம்பர் 5ந்தேதி ஆசிரியர் தினம். ஆசிரியர்களை பெருமைப்படுத்த மாணவ-மாணவிகள் தங்களது அன்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் எனச்செய்தி தெரிவித்தது ஆச்சர்யமாக இருந்தது.

நமக்கு தெரிந்த சில ஆசிரியர்களிடம் இதுபற்றி கேட்டபோது, ஆசிரியர் தினத்துக்கு இந்த மாதிரி விழா எடுக்கச்சொன்னாங்க. பசங்க வீட்டிலிருந்து பணத்தை வாங்கி வந்து இந்த மாதிரி விழா எடுத்தாங்க. இது நடந்தது எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் என்றார்கள். மாணவ சமுதாயத்துக்காக என்ன செய்துவிட்டது இந்த தனியார் பள்ளிகள். எல்.கே.ஜி சேர்க்க க்யூவில் நிற்க வைத்து பணத்தை பிடுங்க தொடங்கி வகுப்பில் சேர்த்த பின் யூனிபார்ம், நோட்-புக், ஸ்பெஷல் க்ளாஸ் என மாதாமாதம் பணத்தை கறப்பதோடு கட்டிட நிதி, அந்த நிதி, இந்த நிதியென ஆண்டுக்கு ஆண்டு பணத்தை கறக்கிறார்கள்.

கூடவே லீவு போட்டால் அபராதம், மதிய நேரத்தில் பள்ளியில் உள்ள பிள்ளைக்கு மதிய உணவு ஊட்ட வந்தால் அபராதம் என்று பணத்தை பிடுங்க புது <புது வழிகளை உருவாக்குகிறார்கள். பள்ளி நிர்வாகங்களுக்கு சலித்தவர்களில்லை இந்த ஆசிரியர்களும். வகுப்பில் பாடம் நடத்தாமல் வீட்டுக்கு டியூசன் வா என வரவைத்து மாதம் 200ரூபாய்க்கு குறையாமல் பீஸ் பிடுங்குகிறார்கள். பிராக்டிக்கல் மார்க் வேண்டுமா என் வீட்டுக்கு வந்து துணி துவை, வீடு பெருக்கு, காய்கறி வாங்கிவா, எச்சில் பாத்திரங்களை துலக்குவது என தங்களிடம் படிக்கும் பிள்ளைகளை வேலை வாங்குகிறார்கள். சம்பள உயர்வு, போனஸ், அரியர்ஸ் என செய்யும் வேலையை காட்டிலும் அதிகமாகவே அரசாங்கம் கொட்டி தந்தாலும் பேப்பர் திருத்த பணம் தா, மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுக்க பணம் தா என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்து ஊர்வலம் போகிறார்கள். வேலை நாட்களில் இப்படி பள்ளிக்கு போகாமல் தெருவுக்கு வந்து போராட்டங்கள் செய்கிறோமே மாணவர்களின் படிப்பு என்னவாவது என எந்த ஆசிரியராவது கவலைப்படுகிறார்களா?. 

      அதுமட்டுமா பள்ளியறையை படுக்கையறையாக மாற்றி சல்லாபம் புரிந்து மாட்டிக்கொண்ட ஆசிரியர்கள், மாணவிகளை சீரழித்து மாட்டிய ஆசிரியர்கள் தண்டனை எதுவும் பெறாமல் தொடர்ந்து பணிபுரிகிறார்கள். இவர்கள் மாணவ செல்வங்களுக்கு எதை கற்று தந்திருப்பார்கள். பதவிக்கும், பணத்துக்கும், சுகத்துக்கும் அலைபவர்களாக இருக்கும் இவர்களை போன்றவர் களுக்கு தான் சிறந்த ஆசிரிர்களுக்கான விருதே தரப்படுகிறது. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம் அந்தளவுக்கு அத்தனை கோல்மால்கள். 

      இப்படி தப்பு செய்வதையே நோக்கமாக கொண்ட பல ஆசிரியர்கள் தற்போது  தங்களது வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எங்களுக்கு பாதபூஜை செய், மலர் தூவு, காலில் விழு என நிர்பந்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
அரசியல்வாதிகள் பதவி சுகம் வேண்டியும், இருக்கும் பதவியை தக்க வைத்துக்கொள்ளவும் தான் தனது தலைவன் கால்களில் விழுகிறார்கள். பின் காலை வாருகிறார்கள். அந்த பழக்கத்தை நீங்கள் ஏன் வளரும் மாணவ செல்வங்களுக்கு கற்று தருகிறீர்கள்.
பிள்ளைகளை படிக்க தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். உங்கள் கால்களை கழுவி பொட்டு வைத்து, மலர் தூவி, காலில் விழ அனுப்பவில்லை. மரியாதை தரும் அளவுக்கு நீங்கள் சாதனையாளர்களும் அல்ல. மரியாதை என்பது கேட்டுப்பெருவதல்ல. அது ஒருவரின் செயல் பாடுகளை வைத்து மற்றவர்கள் தருவது. கேட்டு வாங்குவது என்பது பிச்சை எடுப்பதற்கு சமம். 

      வருங்கால தலைவர்களை உருவாக்க நீங்கள் என்ன செய்திர்கள்.  யாரோ எழுதி வைத்ததை படித்து விளக்கம் என்ற பெயரில் அவர்களுக்கு சொல்லி தருகிறீர்கள். மாணவர்களும் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பாஸ் செய்கிறார்கள்.

இதுவா கற்று தரும் முறை. நீங்கள் கற்று தந்த லட்சணத்தை சமீபத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி
விவரம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு வெளிவரும் மாணவ-மாணவிகளில் 70 சதவீத மாணவர்களுக்கு  ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை. கல்லூரியில் நுழைந்ததும் சிரமப்படுகின்றனர். 

      கணக்கு பாடத்தில்; 40 சதவித மாணவ-மாணவிகள் தோல்வியை தழுவுகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 30 சதவிதமானவர்கள் பார்டர் மதிப்பெண்ணில் வெற்றி பெற்றவர்கள் என குறிப்பிடுகிறது அந்த புள்ளி விபரம். பள்ளி படிப்பை முடித்து வெளியே வரும் 60 சதவிகித மாணவர்களுக்கு உலகத்தை பற்றி, நாட்டை பற்றி, அரசியலைப்பற்றி, ஏன் தாங்கள் படித்த படிப்பு பற்றிக்கூட எதுவும் தெரிவதில்லை. அப்பறம் என்ன நீங்கள் கற்று தந்தீர்கள். 

      கற்று தருவது என்பது புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை மட்டுமல்ல. உலகத்தை, நாட்டை, மக்களை, அரசியலை, அவர்களை சுற்றி நடப்பவற்றை கற்று தர வேண்டும். அப்போது தான் அந்த மாணவன் சிறந்த மனிதனாக உருவாகுவான்.
அவனுக்கு எதிராக பிரச்சனை நடக்கும் போது போராட முன் வருவான். தவறு செய்வதை தட்டி கேட்பான். அவர்களுக்கு போராட கற்று தர வேண்டும். அதை கற்று தருபவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். 

      தமிழகத்தில் எத்தனை ஆசிரியர்கள் அப்படி இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கிராமங்களில், நகரங்களில் உள்ள சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாணவர்கள் நலனுக்காக தங்களது வாழ்வையே அர்பணித்தவர்கள்.
தங்களது ஊதியத்தின் பாதியை மாணவர்களுக்காக செலவு செய்கிறார்கள். இலவசமாக மாலை நேரங்களில் வீட்டுக்கு வரவைத்து பாடம் நடத்துகிறார்கள். ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். சமுதாயத்தை பற்றி அவர்களுக்கு கற்று தருகிறார்கள். வாழ்க்கை பாடத்தை புரியவைக்கிறார்கள். 

      மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, இப்படி ஆசிரியராக செயல்பட்டு காட்டியவர் தான் மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன். அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர்க்கு குடியரசு தலைவர் பதவி தேடி வந்தது. அவரைப்போல மற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவரின் பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாக அறிவித்தார்கள். 

      அந்த நன்நாளில் சாதிக்க தூண்டுபவர்களின் கால்களை கழுவினால் சிறப்பாக இருக்கும். கல்வி என்ற பெயரில் பண கொள்ளை நடத்தி தங்களது வாழ்வை சுகபோகமாக மாற்றிக் கொள்ளும் நிர்வாகிகளின் கால்களையும், அதற்கு ஒத்து ஊதும் ஆசிரியர்களின் கால்களை கழுவினால் அந்த மாணவனுக்கு படிப்பு வராது இவர்களை போன்ற கீழ் தரமான புத்தி தான் வரும். 

      ஆசிரிய பெருமக்களே, இனி வரும் ஆசிரியர்கள் தினத்தில் ஒரு மாணவன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் முன் அந்த தகுதி தனக்குயிருக்கிறதா என ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியை தொட்டு கேளுங்கள். அதன் பின் முடிவு எடுங்கள்!

ஊழல் நீதிபதிகள்: மாஜி சட்ட அமைச்சர் வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு

டில்லி: ஊழல் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேரை கைது செய்து சிறையிலடைக்க கோரி மனு தாக்கல் செய்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல சீனியர் வக்கீலுமான ஷாந்தி புஷானன். பிரபல சீனியர் வக்கீலும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ஷாந்திபுஷானன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார். அதில் நீதித்துறையில் ஊழல்கள் பெருகிவிட்டன. ஊழல் நீதிபதிகளால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோட்டின் முன்னாள் நீதிபதிகள், அவர்களுக்கு பிறகு நீதிபதிகளாக வந்தவர்கள் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 16 பேர் ஊழலில் ஈடுபட்டதாகவும், அதில் 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல் புரிந்துள்ளதாகவும் அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்த ரங்கநாத்மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம். ஷர்மா, எம். வெங்கடாசலய்யா, ஏ.எம்.அகமது, ஜெ.எஸ். வர்மா, எம்.எம். பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி. பரூட்சா, பி.என். கிர்பால், ஜி.பி.பதக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லகோதி, வி.என். காரே, ஓய்.கே.சர்பர்வால் என பட்டியலிட்டு இதில் இரண்டு நீதிபதிகள் லஞ்சம் கொடுத்து நீதிபதிகளாக பதவிபெற்றதாக தன்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரியுள்ளார். கடந்த 1972-77-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் மொரர்ஜிதேசாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஷாந்தி புஷானன். இவரது மகன் பிரசாந்த புஷானன் பிரபல சீனியர் வக்கீல் ஆவார்.
G Sankaran - cupertino,யூ.எஸ்.ஏ
2010-09-17 06:49:37 IST
நீதிபதிகள் மீது பிரபல வழக்கறிஞர் முன்னாள் மத்திய மந்திரி ஊழல் புகார் கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. இவர்கள் கூறிய தீர்ப்புகள் எப்படி நியாமானதாக இருந்திருக்கும்? இந்தியாவை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்....
இந்த சாந்தி பூஷன்தான் முன்பு இந்திரா காந்திக்கு எதிராக அலகபாத்தில் வெற்றிகரமாக தேர்தல் மோசடி வழக்கை நிருபித்தவர். அந்த வழக்கின் தோல்வியை தாங்க முடியாமல் இந்திரா அம்மையார் எமெர்ஜென்சியை கொண்டுவந்தார். இப்படியாக இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிய அந்த வழக்கின் வீரர் சாந்தி பூஷன் இந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது வரவேட்கத்தக்கதே .

மாவீரர் கிராமத்தில் ரங்கா :பிரபாகரனின் தேவைக்காக தம் உயிரை அர்ப்பணித்தவர்களின்

பிரபாகரன் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப்பார்க்க வேண்டும் பூநகரி மாவீரர் கிராமத்தில் ரங்கா எம்.பி உரை

வன்னியை முப்பது வருடங்களாகத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரபாகரன் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கோ,அங்கு வாழ்கின்ற மக்களின் மேம்பாட்டுக்கோ எதுவும் செய்யவில்லை.மாறாக பிரபாகரனிட மிருந்து மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது அழிவுகள் மாத்திரமே.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார்.பிரபாகரனின் தேவைக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த வர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கூட இன்று அரசாங்கமே மேற் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேசத்திலுள்ள மாவீரர் கிராமத்திலிருக்கும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

பிரபாகரனின் தேவைக்காக தம் உயிரை அர்ப்பணித்தவர்களின் உறவினர்களது ஐநூறு குடும்பங்கள் இருக்கிராமத்தில் வசிக்கின்றன.இக்கிராமம் ஏற்கனவே முத்தப்பன் கிராமம் என அழைக்கப்பட்டது.இந்நிகழ்வில் எம்.பி. நாமல் ராஜபக்ஷ பாடசாலை உகரணங்களைப் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் எம்.பி.ரங்கா தொடர்ந்தும் உரையாற்றுகையில்,வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒரு வருட காலமாக பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.ஆனால் தமிழ் மக்களின் தலைவர் என்று கூறிய பிரபாகரன் கடந்த முப்பது வருடங்களாக வட பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப் பார்க்க வேண்டும்.

அவர் இப்பிரதேசத்தை தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தபோது ஒரு பாடசாலையையே, குளத்தையோ அபிவிருத்தி செய்தாரா?இல்லவே இல்லை.தமது மக்களின் வாழ்வையே இவர் அழித்து நாசப்படுத்தினார்.அந்த அழிவுதான் தமிழ் மக்களுக்கு எஞ்சியுள்ளது.தமது மக்களுக்கு மரணத்தைப் பெற்றுக்கொடுத்து அவர் தம் மக்களுக்கு வழங்கிய விடுதலை தான் என்ன.

நான் அரச சார்பு எம்.பி.அல்ல.ஆனால் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்யும் சேவைகளைப் பார்த்தே நான் அரச பக்கம் சார்ந்தேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை இருபது வருடங்களுக்கும் மேல் ஆட்சி செய்ய வேண்டும்.இந்தக் காலப் பகுதியில் அவர் முழு நாட்டிலும் குறிப்பாக வட பகுதியிலும் சுபிட்சத்தை ஏற்படுத்தித் தருவார்.அதனால் எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதில்லை.நாட்டுக்கென்று உயிரை மாய்த்துக்கொள்வதும் அவசியமில்லை. மாறாக நாட்டுக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக இப்பிள்ளைகள் மாறவேண்டும்.

அதற்குத் தேவையான கல்வியையோ,தொழிற் பயிற்சியையோ பெற்று தம்மை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.இதற்குத் தேவையான வேலைத் திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என்றார்.

இந்நிகழ்வில் எம்.பிக்களான உதித லொக்குபண்டார,ஷெஹான் சேமசிங்க,கணக ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்

சினேகா நேற்று நீதிபதிமுன் கண்ணீர் மல்க சாட்சி அளித்தார்.

சென்னை: ‘திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று பெங்களூர் வாலிபர் விடுத்த கொலை மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த சினேகா நேற்று நீதிபதிமுன் கண்ணீர் மல்க சாட்சி அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இவருக்கு கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவர் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி, ‘என்னை திருமணம் செய்யாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று மிரட்டினார். அதிர்ச்சி அடைந்த சினேகா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்தார். ராகவேந்திராவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சாட்சி சொல்ல பகல் 2 மணிக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கோர்ட் வளாகத்தில் காத்திருந்தார் சினேகா. 3.30 மணிக்கு விசாரணை தொடங்கியது.

நீதிபதி ஸ்ரீராம் விசாரித்தார். அவர் முன்பு ஆஜரான சினேகாவின் தந்தை ராஜாராம், ‘இந்த வழக்கில் என் மகள் சினேகா சாட்சி சொல்ல அனுமதிக்க வேண்டும்’ என்றார். அனுமதி வழங்கப்பட்டது. பிறகு கண்கலங்கியபடி சினேகா சாட்சி அளித்தார். ‘2008ம் ஆண்டில் எனது தந்தையை சந்தித்த ராகவேந்திரா ‘ஆட்டோகிராப் பார்ட் 2’ எடுக்கப் போவதாக கூறினார். அவரை தந்தை திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து எனது செல்போனுக்கு 50 மிஸ்டுகால், 20 எஸ்.எம்.எஸ் அனுப்பி டார்ச்சர் செய்தார் ராகவேந்திரா.

அவரை யார் என்றே எனக்கு தெரியாது. என் செல்போன் எண்ணை மாற்றினேன். அதையும் தெரிந்துகொண்டு மீண்டும் எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ‘உன்னை திருமணம் செய்வேன்.. இல்லாவிட்டால் முத்தமாவது கொடுப்பேன். என்னுடன் செல்போனில் பேசாவிட்டால் குடும்பத்தையே தொலைத்து விடுவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்னையால் எனது குடும்பமே இன்று கோர்ட்டில் நிற்கிறது’ என்றபடி கதறினார். அதைக்கண்டு அவரது அம்மா பத்மாவதி, தந்தை ராஜாராம், அக்கா சங்கீதா ஆகியோரும் கதறி அழுதனர்.

வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதத்துக்கு நீதிபதி ஸ்ரீராம் தள்ளிவைத்தார். இதற்கிடையே, நீதிபதி முன்பு சினேகா கதறி அழுத தகவல் நீதிமன்றம் முழுக்க பரவியது. வக்கீல்களும் பொதுமக்களும் சினேகா இருக்கும் இடம் தேடி திரண்டனர். ‘எந்த தவறும் செய்யாத நிலையில், யாரோ ஒருவர் கொடுக்கும் டார்ச்சரால் கேஸ், கோர்ட் என அலைக்கழிக்கப்படுவது பொறுக்க முடியாமல்தான் அனைவரும் கண்கலங்கி விட்டனர்’ என்று சினேகா தரப்பில் கூறினர். இதனால் நேற்று நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

’அசின்:அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’என்று

இலங்கை விவகாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்:
விஜய் பங்சனில்  அசின் கன்டிஷன்
இலங்கை செல்லக்கூடாது தமிழ்த்திரையுலகம் உத்தரவு போட்டிருந்தும் நடிகை அசின் இலங்கை சென்றார். இதனால் விஜய் - அசின் நடித்த காவலன் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிடுவதி சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது.
என்ன நடந்ததோ தெரியவில்லை.   திடீரென்று சரத்குமார்  அசினுக்கு ஆதரவு தெரிவிக்க, சூழ்நிலையே மாறிப்போனது.
அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின.
தமிழகத்திலும், தமிழ்த்திரையுலகிலும் அசின் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆனால்  இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவர் நடித்த படங்களைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. 
இந்தப் படத்தின் நாயகி அசின் மீது தமிழ் சினிமா  அமைப்புகள் என்ன நடவடிக்கை  எடுத்தன என்பதை தெரிவித்தாக வேண்டும் என்றும், அப்படி நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் இனி இலங்கை தமிழர் விவகாரத்தில் சரத்குமார் சினிமாக்காரர்கள் தலையிடுவதற்கு அருகதையற்றவர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று இரவு சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் காவலன் பட விசயமாக நடிகர் விஜய்,நடிகை அசின், நடிகர் வடிவேலு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
  செய்தியாளர்கள் சந்திப்பு என்று சொல்லிவந்திருந்தாலும் விஜய்,  வாயையே திறக்கவில்லை. சில கேள்விகளுக்கு மட்டும் வாயை திறந்தார்.  ‘’இந்தப்படம் செப்டம்பரில் ரிலீசாகுது’’ என்று சொன்னார்.
நடிகை அசினிடம் இலங்கை சென்றுவந்த விவகாரம் பற்றி கேட்டபோது,  ‘’அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’என்று கோபமாக கூறினார்.

EPRLF துரைரத்தினம்:வெளிநாட்டு கம்பனிக்கு காணிகளை வழங்க வேண்டாம்;

மேய்ச்சல் காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்க வேண்டாம்;  இரா.துரைரத்தினம் கிழக்கு முதலமைச்சருக்கு கடிதம்
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பகுதிகளை  வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்குவதற்காக செங்கலடி, பெரிய புல்லுமலை, கோப்பாவெளி வவுணதீவு போன்ற போன்ற இடங்களை   பார்வையிடப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியதாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவருமான இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதத்திலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற பிரதேசப் பகுதிகளில் நீண்ட காலமாக அதிகமான காணிகளில் பெரும்பாலானோர் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் கால்நடைகளாக பசு மாடுகள் 174,000 எருமை மாடுகள் 81,500 மொத்தமாக 255,500  கால்நடைகள் அண்ணளவாக உள்ளன.

கால்நடைகளின் மேய்சல் தரையாக காடுகள், மலைகள் அற்ற கிட்டத்தட்ட  75,000   மேற்பட்ட மேய்ச்சல் தரை காணிகள் தேவையாக உள்ளது.

இருந்தும்  கிட்டத்தட்ட 50,000  ஏக்கர் மேய்ச்சல் தரை காணிகளே  தற்சமயம் அளவை செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு  நடவடிக்கை எடுத்த அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், அனைத்து அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், சங்கங்கள், அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் இன்னும் செங்கலடி, வவுணதீவு பிரதேசங்களில் 15,000 ஏக்கர் மேச்சல் தரைக்காணி தேவையாக உள்ளது. குறிப்பாக,
    1.அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, நற்பட்டிமுனை,நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் மேய்ச்சல் தரை இல்லை. இதன் காரணமாக கால்நடைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசத்தை நோக்கி நீண்டகாலமாக வந்து மேய்கின்றன.
    2 .பிரதேச செயலகப் பிரிவுகளான  வெல்லாவெளியில் 780 ஏக்கர்  பட்டிப்பளை பகுதியில் 5958 ஏக்கர் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில்   காணி இல்லாத காரணத்தால் மிகக் குறைந்தளவே காணியே மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
    3. அம்பாரை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, நற்பட்டிமுனை, நாவிதன்வெளி, மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகப்பிரிவுகளான  வெல்லாவெளி, பட்டிப்பளை பகுதிக்கான கால்நடைகள்  சுமார் 75,000ஐ தாண்டும். இப்பகுதிக்கான கால் நடைகள் அனைத்தும் வவுணதீவு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளி தான் வழக்கமாக மேய்ச்சலுக்கு வருவதுண்டு.
    4. இவைமட்டுமின்றி சிலர் மேய்ச்சல் தரையில் மேட்டு நிலப்பயிர் செய்கையில்  காலத்திற்கு காலம் பயிர் செய்வது வழமை. இவர்களை உடனடியாக வெளியேற்றி இவர்களுக்கும் மேய்ச்சல் தரை அல்லாத காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.  இல்லாத பட்சத்தில் மாவட்டத்தில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டினியை எதிர்நோக்குவர்.
    5.மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட காணிகளில்   மலைகள், காடுகளும் உள்ளடங்கும்.
    6.விவசாய செய்கை அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் கால்நடை வளர்க்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். எனவே தனிப் பண்ணை முறையில் தான் மாடுவளர்க்க வேண்டியேற்படும். இதற்காக கால்நடை வளர்ப்போர் ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் குறைந்தது  தலா 5 ஏக்கருக்கு மேல் மேய்ச்சல் தரைக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.
எனவே வவுணதீவு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் இன்னும் மேலதிகமாக 15000 ஏக்கருக்கு  மேற்பட்ட காணிகளை மேய்ச்சல் தரைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

இந்நிலையில் இது தொடர்பாக 2.8.2010 அன்று செங்கலடி பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் எமது பிரதேசவாசிகளுக்கு வழங்குவதற்கு காணி இல்லாத நிலையில் வெளியாருக்கு காணி வளங்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது. அப்படி முடிவெடுத்திருந்த நிலையில் 11.9.2010  விவசாயக் கூட்டத்திலும் இப்பிரச்சனை முன்வைக்கப்பட்டு அதிகமாக மேய்சல் தரைக்கு காணிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அதேதினம்  மாலை மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட வேண்டுமென தீர்மானித்த பகுதிகளை  வெளிநாட்டு கம்பனிக்கு வழங்குவதற்காக செங்கலடி, பெரிய புல்லுமலை, கோப்பாவெளி, வவுணதீவு கழிக்குளம் போன்ற பிரதேச செயலகப் பிரிவுப் பகுதியில்  இடங்களை   பார்வையிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இப்பகுதிகளில் குறிப்பாக 1000 ஏக்கர் காணிகளை வழங்க முயற்சிகள் நடப்பதாக தெரிய வருகின்றது. இது முற்றிலும் தவறானதாகும். இதனால் கால்நடைவளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.

எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்படுவர். எமது மாவட்டத்தில் உள்ள மக்கள் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சுய பொருளாதார வளங்கள் முடமாக்கப்பட்டு இன்னும் திட்டமிட்டவாறு அபிவிருத்தி வேலைகளிலும், சுயமுயற்ச்சிகளிலும், சுயதொழிலிலும், ஈடுபடுத்த முடியாமல் மெது மெதுவாக முயற்ச்சி செய்ய ஆரம்பிக்கும் வேளையில் வெளிநாட்டவர்களுக்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகம் எனும் போர்வையில் எமது இயற்கை வளமுள்ள சொத்துக்கள் சில தனிநபரின் நலன் கருதி விற்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. நாம் எதிர்காலத்தில் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

இதை வழங்க முற்படுகின்றவர்களுக்கு எமது வளத்தின் வலிமையும், சமூகத்தின் வலியும் தெரியாது என நினைக்கின்றேன்.  எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்பேர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் கூடுதலாக தேவையான மேய்ச்சல் தரைகாணிகளை வழங்கநடவடிக்கை எடுக்குமாறும் மேய்ச்சல் தரை பகுதியில் காலத்திற்கு காலம் காணியில்லாமல் மேட்டு நிலப்பயிர்செய்யும்  காணிகள் அற்ற வறிய குடும்பங்களுக்கும் மேய்ச்சல் தரை அல்லாத காணிகளை பயிர் செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கமாறும் கேட்டுக்கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,  கால்நடை திணைகள உதவிப் பணிப்பாளர், வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி ஆகியவற்றின்  பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற சபைக்கு சுமந்திரனின் பெயர் எதிர்க்கட்சி தலைவரால் சிபார்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு
அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபைக்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள் ளது. அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அத்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்படும் பாராளுமன்ற சபையில் அங்கம் வகிப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருப் பதாக அக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. எம். சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது அனுமதியைப் பெறாமல் இச்சபைக்குத் தமது பெயரைப் பிரேரித்துள்ளார். இதனை ஊடகங்கள் மூலம் தான் நான் அறிந்துகொண்டேன். என்றாலும் இந்நியமனத்தை நாம் ஏற்கமாட்டோம் என்றார். அரசியலமைப் புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அடங்கலாக ஐவர் அங்கம் வகிப்பர். இதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகிய மூவரும் பதவிநிலை உறுப்பினர்கள். ஏனைய இருவரும் பிரதமரினாலும், எதிர்க் கட்சித் தலைவராலும் நியமிக்கப்படும் உறுப்பினர்களாவர்.

MV.Sunsea விவகாரம்; நான்கு பெண்களின் விடுதலைக்கு கனடா இடைக்கால தடை

‘சன் சீ’ கப்பல் மூலம் கனடா சென்ற இலங்கை அகதிகளில் நான்கு பெண்களை தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை தற்காலிகமாக நிறுத்திவைக்க கனேடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘சன் சீ’ கப்பலில் சென்ற மூன்று தாய்மார் மற்றும் ஒரு தனிநபர் என நான்கு பெண்களை விடுவிப்பதற்கு கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகளுக்கான சபை கடந்த செவ்வாய்க்கிழமை காலை முடிவு செய்திருந்தது. எனினும் கனேடிய அரசாங்கம் சமஷ்டி நீதிமன்றத்தில் இவர்களின் விடுதலைக்கு எதிராக தாக்குதல் செய்த மனுவொன்றை அடுத்தே இந்த நான்கு பேரினதும் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பின்னிரவு சமஷ்டி நீதிபதி ஒருவர் மூன்று தாய்மாரை விடுவிப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவை தொலைபேசி மூலமாக உரிய அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளார். அதேவேளை புதன்கிழமை நண்பகல் வன்கூவர் டவுன்ரண் நீதிமன்ற நீதிபதி மற்றொரு பெண்ணின் விடுதலைக்கான இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த அகதிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மேலதிக கால அவகாசம் தேவை என்று கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது

இளையராஜா:நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமே தேசிய விருது

நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே தேசிய விருதைக் கருதுகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

நான்காவது முறையாக இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார் இளையராஜா. மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் எப்போதுமே விருதை எதிர்பார்த்து வேலை செய்வதில்லை. எப்போதும் போலவே பணியாற்றுகிறேன். பழசிராஜா படத்துக்காக கூட நான் கடுமையாக வேலை செய்யவில்லை. கதையைக் கேட்டதும் 2 நாள் டைம் கொடுங்கள் என்று மட்டுமே கேட்டேன். அந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதை மட்டுமே கொடுத்தேன்.

படத்தில் சரத்குமாரும், மம்முட்டியும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மிகப் பொறுமையாக அதில் நடித்த நடிகர், நடிகைகளை இயக்குநர் நடிக்க வைத்திருந்தார்.

எனக்கு இப்போது கிடைத்திருக்கும் விருது, நல்ல இசைக்கு கிடைத்துள்ள விருதாகவே கருதுகிறேன். இதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

அரசாங்கத்திடமிருந்து வந்துள்ள இந்த விருதை மரியாதையோடு ஏற்றுக் கொள்கிறேன் என்றார் இளையராஜா.

இத்தாலி கீதானந்தா ஆச்சிரமத்தில் தொடரும் கோஷ்டி மோதல்கள

புலம்பெயர் நாடுகளில் தொடரும் கோஷ்டி மோதல்கள்
இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களில் இருவர் படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எஸ்.நிருஜன்(வயது 24), ஏ.சுதர்சன்(27) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆவர். இருவரும் அங்கு Genoa நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு காதல் விவகாரமே மோதலின் காரணம் என்று பொலிஸார் நம்புகின்றனர். இம்மோதலில் கத்திக் குத்துக்கள் இடம்பெற்றன. ஏனைய இரு இலங்கையர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சம்பவம் இடம்பெற்றபோது ஆச்சிரமத்தில் 500 பக்தர்கள் வரை திரண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்துக்கு ஆச்சிரம நிர்வாகிகள் மன வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

நிவித்திகலையில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவம

்

நாட்டில் தோன்றியுள்ள அமைதி காரணமாக மக்கள் தங்கள் கட மைகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட் டுள்ளதுடன் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்குச் சென்று வருவதற்கும் அனைத்து இன மக்களும் பேதமின்றி அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் ஆங்காங்கே நிகழும் ஓரு சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் இனங்களிடையே குரோத உணர்வுகளையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளியெறியாதுபோனால் முறுகல் நிலையே அதிகரிக்க வழிவகுப்பதுடன் மக்கள் மத்தியில் அநாவசியமான பதற்றத்துக்கும் வழிசெய்வதாக அமையும்.
குறிப்பாக நிவித்திகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேல தோட்டத் தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இரு வீடுகள் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 10க் கும் மேற்பட்ட வீடுகளின் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. குடியிருப்புக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேல குக்குலகல பிரிவு தோட்டத்திலேயே இந்த விபரித சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இதற்கான பின்னணி என்ன என்று பார்க்கையில், கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் உள்ள தோட்ட பெரும்பான்மையின காவற்காரர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதனைத் தொடர்ந்து திங்களன்று சடலமாக அவர் கர விட்ட திம்மியாவ எனுமிடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்தே குக்குலகல பகுதியிலுள்ள சில வீடுகள் மீது இனந்தெரியாதோர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அன்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் தேல மேற்பிரிவு தோட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பெரும் பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தோட்டத் தில் இருவேறு பிரிவுகளில் கடந்த திங்கட் கிழமை மாலை இடம்பெற்ற இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து சுமார் 100 குடும்பங்கள் அச்சம் காரணமாக இப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 16 செப்டம்பர், 2010

வாகன உற்பத்தியில் 7 வது இடத்தை வகிக்கிறது இந்தியா என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த 'ஃபிக்கி' நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அரசின் கனரகத் தொழில்கள் துறை செயலாளர் பிஎஸ் மீனா கூறுகையில், "கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு 'ஆட்டோ மிஷன் பிளான்' எனும் திட்டத்தை வகுத்தது. அதன்படி வரும் 2016ம் ஆண்டில் வாகன உற்பத்தியில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாக வரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இப்போதே அந்த நிலையை இந்தியா எட்டிவிட்டது.
வரும் 2020-ம் ஆண்டு உலகின் 5 வது பெரிய வாகன உற்பத்தி நாடாக இந்தியா மாறியிருக்கும்....", என்றார்.இன்றைய நிலவரப்படி வாகன உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2009-2010-ம் ஆண்டில் இந்தியாவின் வாகன உற்பத்தி 1,40,49,830 ஆகும். இதற்கு முந்தைய ஆண்டு உற்பத்தி 11,172,275 ஆக இருந்தது.கடந்த நிதி ஆண்டில், வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் முறையே 32, 49 மற்றும் 31 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

போனில் மிரட்டல்... வீட்டில் கல்வீச்சு... இதெல்லாம் படம் ஓடுவதற்காக சாமி

சிந்துசமவெளி படம் வெளிவருவதற்கு முன்பு ஆரம்பித்த சர்ச்சை படம் வெளிவந்த பிற இருமடங்கு, மும்மடங்குன்னு உயர்ந்து விட்டது. போனில் மிரட்டல்... வீட்டில் கல்வீச்சு... இதெல்லாம் படம் ஓடுவதற்காக சாமி போட்ட திட்டம்... இப்படி பல வம்பு வழக்குகளின் பரபரப்புகள் எழுந்து ஓய்தும் விட்டது. இயக்குனர் சாமியும் அடுத்தப் படத்தை தொடங்கும் வேலையில் மும்முரமாகிவிட்டார்.
 
ஏன் இப்படி சர்ச்சைக்குறிய படங்களையே எடுக்குறீங்க...? என்ற கேள்வியை மட்டும் சாமியிடம் யாரும் கேட்டால் போதும், சும்மா,‘கொதிக்கிற எண்ணையில் கொட்டிய கடுகாக’ பொறிகிறார் சாமி.

“ஏற்கனவே உயிர், மிருகம் படங்கள் சர்ச்சைக்குறிய படங்களாக இருந்ததால், இனியும் அந்த மாதிரி இருக்கக் கூடாதென்றுதான் ‘சரித்திரம்’ படத்தை இயக்கினேன். இது தமிழனின் தற்காப்பு கலைகள் பற்றி சொல்கிற படம். ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே நிற்குது. பத்து ரீல் எடுத்தாச்சு. இன்னும் மூணு ரீல்தான் பாக்கி. முப்பது நாட்கள் படப்பிடிப்பு மட்டும் நடந்தால், பிரமாதமான படமாக ‘சரித்திரம்’ வெளிவரும். 
அந்தப் படம் நின்றதாலதான் ‘சிந்து சமவெளி’ எடுக்க வேண்டிய சூழ்நிலை. விபச்சார தொழில் செய்யுறவங்க, திருடர்கள், கொலைக்காரங்க கூட நிம்மிதியா இருக்கதான் நினைப்பாங்க. அவங்களே அப்படி நினைக்கும் போது நான் நினைக்க மாட்டேனா...?

நான் எங்கே போனாலும் உயிர் மாதிரி படம் பண்ணிக் கொடுங்கன்னுதான் கேட்கிறாங்க. இந்தத் தயாரிப்பாளர்கிட்ட கூட நான் நாலு கதைகள் சொன்னேன். அவரு தேர்ந்தெடுத்த கதைதான் ‘சிந்துசமவெளி’.

இப்போது எனது அடுத்தப் படம் தயாரகிவிட்டது. இது நிச்சயமாக சர்ச்சையான கதையாக இருக்காது. இது பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட குடும்பக் கதையாகும். படத்திற்கு “சதம்” என்று பெயர். மூனு நாலு தயாரிப்பாளர்கள் வந்து படம் பண்ண கேக்குறாங்க. இனிமேதான் தாயரிப்பாளர் யாருன்னு முடிவாகும். அதற்கு பிறகுதான் நடிகர்கள் தேர்வு. கூடிய விரைவில் ‘சதம்’ படம் தொடங்கப்பட்டுவிடும்”. என்று தனது ஆதங்கத்தையும், ஆவேசத்தையும் வெளிப்படுத்துகிறார் சாமி.  

“கே.பாலசந்தர் படங்கள் மாதிரிதான் எனது படங்கள். அவர் இப்போது படம் பண்ணுவதில்லை. அதான், நான் அவரின் இடத்தை நிரப்புறேன்” என்று கூறிவரும் சாமி,‘சதம்’ குடும்பப்பாங்கான கதை என்று சொல்லியிருப்பது யோசிக்க வைக்குது. இதில் மூனு நாலு தயாரிப்பாளார்கள் போட்டி வேற போடுறாங்கலாம்.

ம்ம்ம்...பொறுத்திருந்து பார்ப்போம் சதம் நல்ல பதமான படமான்னு.

ஆசிரியையை கைது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை

நெல்லூர்: தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியையை கைது செய்துள்ளனர் போலீஸார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவர் இறந்து விட்டார். 6 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நாகேஷ் என்பவருக்கும், சைதன்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. ஆனால் மகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்தார் சைதன்யா, இதனால் அவள் மீது கோபம் மூண்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். குழந்தை [^]கதறித் துடித்து அழும்போது டிவி [^] வால்யூமை அதிகரித்து விடுவார். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு எதுவும் கேட்காது. ஆனால் அடிக்கடி திடீர் திடீரென டிவி சத்தம் அதிகமாக கேட்டதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது சிறுமி உடல் முழுவதும் தீக்காயத்துடன் காணப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் [^] விசாரணையில், சைதன்யா, தனது குழந்தையை சித்திரவதை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சைதன்யாவை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்காதலன் நாகேஷும் கைது செய்யப்பட்டார்.
பதிவு செய்தவர்: முன்திர்
பதிவு செய்தது: 16 Sep 2010 10:05 pm
இப்பெல்லாம் செய்திகளை பாக்கும்போது கள்ளக்காதலை தடுப்பதற்கென்றே தனி சட்டம் கொண்டுவரணும் போல. இல்லை என்றால் இது நாய்க்காதலுக்கு சமம் என்று சட்ட அங்கீகாரம் கொடுக்கவேண்டும்.

பதிவு செய்தவர்: Manithan
பதிவு செய்தது: 16 Sep 2010 7:54 pm
கடந்த சில நாட்களாக இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். குழந்தை கதறித் துடித்து அழும்போது டிவி வால்யூமை அதிகரித்து விடுவார். - KOUDMAI ROMBA KOUDMAI.. NO REASON TO DO THIS.
 

“முரண்”சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிப்பில 90 நிமிட திரில்லர்

90 நிமிட திரில்லர் “முரண்”சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வளர்ந்துவரும் படம் முரண். மிஷ்கினின் உதவியாளர் ராஜன் மாதவ் இயக்கும்இப்படத்தில் கதாநாயகன்கள் சேரன், பிரசன்னா.வித்தியாசமான கதையம்சமுள்ள படங்கள் தருபவர் மிஷ்கின். அவரைப் போலவே அவரது சிஷ்யனும் சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார்.முரண் படத்தை மொத்தமாகவே 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய வகையில் உருவாக்கி வருகிறார் ராஜன் மாதவ். இது பற்றி அவர், “தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக 90 நிமிடங்களில் படம் முடியும் வகையில் எடுக்கிறோம். இந்தப் புதுமையை ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  தனிப்பட்ட இரண்டு நபர்களைச் சுற்றி நடக்கும் திரில்லரான சம்பவங்கள் தான் முரண்” என்றார்.மேலும் சேரன் மற்றும் பிரசன்னா பற்றி கூறும் போது<“சேரன் சினிமாவை நேசிக்கிறார் எனபதை விட சினிமாவைதான் சுவாசிக்கிறார்என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகச் சிறந்த இயக்குனர் அவர். பிரசன்னா எனக்கு நல்ல நண்பர். அவரை வைத்து ஒரு படமாவது இயக்கனும் என்பது எனது லட்சியமாகவே நினைத்திருந்தேன். அது எனது முதல் படத்திலேயே நிறைவேறிவிட்டது. சேரன், பிரசன்னா இருவருடன் பணியாற்றுவதில்எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் ராஜன் மாதவ்.  

பெண்கள், மந்திரவாதிகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இருவரும் எரிந்து சாம்பலாயினர்

2 மந்திரவாதிகள் எரித்து கொலை: 62 பெண்கள் கைது

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அடுத்த நலகொண்டா மாவட்டம் கைதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லையா (70), சிமென்ட் பைப்கள் தயாரிக்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா (65), ஆடு மேய்ப்பவர். நண்பர்களான இருவரும் மந்திரம் மற்றும் செய்வினை செய்து வந்ததாக கூறப்படுகிறது
சமீபத்தில் கிராமத்தை சேர்ந்த சிலர் உடல்நலம் குன்றி இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கு செய்வினைதான் காரணம் என கருதிய பெண்கள், இனிமேல் ஊருக்குள் எந்த மந்திரங்களும் செய்யக்கூடாது என இருவரையும் எச்சரித்துள்ளனர்.

அதை கேட்காமல் எல்லையாவும் நரசிம்மாவும் தொடர்ந்து செய்வினை, மந்திரம் செய்து வந்தார்களாம்.
இந்நிலையில், நேற்று கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் மந்திரவாதி எல்லையா மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழத்தை வைத்து மாந்த்ரீகம் செய்துள்ளார்.

இதைப் பார்த்த மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். வலிதாங்க முடியாமல் அலறிய எல்லையா, ‘நான் மட்டும் செய்யவில்லை, நரசிம்மாவும் சேர்ந்துதான் மந்திரம் செய்தோம்’ என்றார்.
இதையடுத்து, அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நரசிம்மாவையும் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் இருவரையும் கை, கால்களை கட்டி 2 கி.மீ. தூரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு இழுத்துச் சென்றனர். “எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் ஊரை விட்டே சென்றுவிடுகிறோம்” என இருவரும் கதறினர்.
அதை ஏற்காத பெண்கள், மந்திரவாதிகள் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இருவரும் எரிந்து சாம்பலாயினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நலகொண்டா எஸ்.பி. ராஜேஷ்குமார் மற்றும் சாட்டப்பல் போலீசார் சென்று விசாரித்தனர். ‘எங்கள் கிராமத்துக்கு கேடு விளைவித்த 2 மந்திரவாதிகளை நாங்கள்தான் எரித்துக் கொன்றோம்’ என பெண்கள் கூறினர்.
இதையடுத்து 62 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

அங்குரார்ப்பண நிகழ்வுகளை முடித்துவிட்டால் அந்த திட்டமே நிறைவடைந்து

அங்குரார்ப்பண நிகழ்வுகளோடு அடங்கிப்போகும் அபிவிருத்திப் பணிகள்
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நடந்தே றிய அபிவிருத்தித் திட்டங்கள் யாவை என்பதைப் பகிரங்கப்படுத்துவது பொதுமக்கள் அறிந்து கொள் வதற்கு உதவுவதாக அமையும். வடக்கின் வசந்தத்தை மக்கள் தெரிந்து கொள் ளும் வகையில் அந்தத் திட்டங்கள் பொது மக்களை வந்தடையவில்லை என்பதை கூறித் தானாக வேண்டும்.
அந்த நேரத்து உடைந்த தார் வீதிதான் இப் போதும் இருக்கிறது. வீதியில் உள்ள கிடங்குகள் அடையாளச் சின்னங்களாகக் காட்சி தருகின் றன எனில், வடக்கின் வசந்தம் என்று எதைச் சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது நியாய மானதே. ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது உட் கட்டுமானப் பணிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.அவ்வாறாயின் வீதிகள், பாலங்கள், போக்குவரத்துப் பாதைகள், துறைமுகங்கள் என்பவற்றின் புனரமைப்பு- புது நிர்மாணம் என் பன முக்கியமானவையாக அமையும்.
ஆனால், இவை எதுவும் வடக்கில் சாத்திய மானதாகத் தெரியவில்லை. காங்கேசன்துறை சுண்ணக்கல் கப்பல் ஏறுகிறது.மாவிட்டபுரத்தை கடல் ஆக்கிரமிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
மண்டைதீவுக் கடல் அணையை கட்டத் தவறி யதால் நெல் விளைநிலங்கள் கடலின் உவருக்குப் பலியாகிப் போயிற்று. அந்த ஊருக்காக இருந்த ஒரே ஒரு வைத்திய சாலையின் உடைந்த கட்டடங்கள் மட்டும் வானத் தைப் பார்த்த வண்ணம் தன் சாட்சியத்தை சொல்வதற்கு யாருமில்லாமல் காத்திருக்கிறது. அந்தக் கட்டடத்திற்குத் துணையாக இருந்த இரும்புக் கேடர்கள் கிலோக்கணக்கில் விற்றுத் தீர்க்கப்பட்டுவிட்டன.
நிலைமை இதுவாக இருக்கும்போது வடக் கின் வசந்தம் என்பதற்குப் பொருள் கொள்வது எங்ஙனம்? ஆக, வடக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் அங்குரார்ப்பண நிகழ்வுகள் மட்டுமேநடந்தேறுகின்றன.அங்குரார்ப்பண நிகழ்வுகளை முடித்துவிட்டால் அந்த திட்டமே நிறைவடைந்து விட்டதான நினைப்பு.
என்னசெய்வது! நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு இடப்பட்ட தாருக்குப் பின்னர் தாரைக் காணாத தலைவிதி நம் வீதிகளுக்கு. முன்பு – ஏ-9 பாதை பூட்டப்பட்டிருந்த போது தாரை எடுத்து வருவதில் கஷ்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. கப்பலால் தாரைக் கொண்டு வருவதன் மூலம் அதிக செலவை தாரைவார்க்கவேண்டும் எனக் கூறினார்கள்.
ஆனால், இப்போது ஏ-9 பாதை திறக்கப்பட்டு விட்டது. இங்கிருந்து பஞ்ச உலோகங்களும் ஏ-9 கடந்து தென்பகுதிக்குச் செல்லும்போது தென்பகுதி யில் இருந்து தாரை எடுத்துவருவதில் இருக்கக் கூடிய கடினங்கள் தான் என்ன?
எல்லாமே செப்படி வித்தை. வடக்கின் வசந்தம், அபிவிருத்தி என்ற வெற்றுப்பேச்சுக்களின் மத்தியில், மக்களோ வீதியில் விழுந்து புரண்டு எழுந்து செல்கின்றனர்.வசந்தம் வீசட்டும்! எங்கள் விதியை நாங்கள் அனுபவிப்போம்.

ராகுல:் தமிழகத்தில் காங்., ஆட்சி அமைக்க முடியுமா ? : நிறைய முயற்சி செய்ய

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக முயற்சி செய்ய வேண்டியிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் மேற்குவங்கத்தில் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார் .  மேற்குவங்கத்தில் இளைஞர் காங்கிரஸ் குறித்து விழிப்புணர்வு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் .  அவர் நிருபர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
மம்தாவுக்கு தலைவணங்க முடியாது :  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீது மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்தார். அதே சமயத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி தலை வணங்க முடியாது என்றார். மேற்குவங்க ஏழைகளுக்கு என ஒரு பிரிவாகவும், இடதுசாரிகளுக்கு என ஒன்றாகவும் பிரிந்திருக்கிறது என்றார்.

ஏழைகளின் மேற்குவங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ப‌தே காங்கிரசில் லட்சியம் என்றும். இந்த கொள்கைக்கு ஒத்துழைப்பு நல்கும் பட்சத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார். மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தெரிவித்தது கண்டனத்துக்குரியது . மேற்குவங்கத்தில் ஒரு நல்ல, மக்களின் மரியாதைக்குரிய கூட்டணி அமைய வேண்டும் என்பதே தனது நோக்கம்.

ஒமருக்கு ஆதரவு : காஷ்மீரில் அமைதி திரும்ப இளைஞர்களை மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் இணைக்க வேண்டும். விரைவில் காஷ்மீருக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளயிருப்பதாகவும் கூறினார். காஷ்மீர் பிரச்னையில் அரசு முழு நேர கவனம் செலுத்த வேண்டும். ஒமர் அப்துல்லாவுக்கு ஆதரவு  அளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் 14 லட்சத்து 50,000 இளைஞர்கள் : தமிழக காங்கிரஸ் நிலை குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பியதற்க அவர் பதில் அளித்த போது : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உருவாக நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. முதன் முதலில் தமிழகத்தில் இளைஞர்கள் காங்கிரசுக்காக உறுப்பினர்களை சேர்க்கும் போது 35,000 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 14 லட்சத்து 50,000 பேராக அதிகரித்துள்ளது.

இது சாதாரண விஷயம் இல்லை. இளைஞர் காங்கிரசில் பல்வேறு தரப்பிலிருந்தும் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இளைஞர்கள் இதற்கு ஒரு சான்றாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு ராகுல் கூறினார்.
kamalanathan - rajmundry,இந்தியா
2010-09-16 20:56:40 IST
ஆந்திராவை சுருட்டியது போதும் .தமிழ்நாட்டை சுருட்ட வேண்டாம்....
dhanaraj - thungapuram.,யுனைடெட் கிங்டம்
2010-09-16 20:38:55 IST
ராகுல் கல்யாணம் பண்ணுங்க. அப்புறம் யோசிக்கலாம்....
k.Nagarajan Vice indian youth congress - panagudi,இந்தியா
2010-09-16 20:15:17 IST
மூன்றாவது அணி அமைக்க வேண்டும். அதில் பாமக,தேமுதிக, சமக மற்றும் சில கட்சிகளை சேர்க்க வேண்டும்...
Dindigul Ramaraj - Dindigul,இந்தியா
2010-09-16 19:58:18 IST
Please change Tamil Nadu Presedent. Mr. Rahul do it fast...????????????...
ராஜேஷ்.m - nellai,இந்தியா
2010-09-16 19:14:27 IST
திரு.ராகுல் அவர்களே kandippaka ஆட்சி அமையும்...
வெ ம வினோத் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-16 19:09:31 IST
நாட்டை குட்டிசுவராகிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். நீங்கள் பிரதமர் ஆகாமலேயே உங்க கட்சி மத்திய அமைச்சர்கள் இப்படி ஊழல் செய்கிறார்கள். நீங்கள் வந்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்....
2010-09-16 19:07:31 IST
உயர் திரு ராகுல் காந்தி அவர்களே வணக்கம் . என்ன தமிழ் நாடு மக்கள் உங்கள் குடும்பத்தை மறக்க மாட்டார்கள். ஆனால் கச்சதீவை விட்டு கொடுத்தது இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக தமிழன் படுகொலைக்கு காரணமானவர்களை எப்போதும் மறக்க முடியாது. சீனா காரன் சிறிலங்காவில் ராணுவத்தில் உள்ளார்கள் என்று தெரிந்தும் நாட்டை பற்றில்லாம் கவலை படாமல் தங்கள் இனம் தான் சிங்களர்கள் என்பதை நிருபித்து விட்டீர்கள். போதும் சாமீ தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே என்ற ஹிட்லரை வளர அனுமதி கொடுத்து உள்ளீர்கள். நீங்கள் வாழ்க. உங்கள் குலம் வாழ்க. ஆனால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து சாவட என்பதே பழமொழியாக்கி விட்டீர்கள். ஆனால் ஒன்று சொல்கிறேன். ஒட்டு மொத்த தமிழ் நாடும் மீனவர்களும் சேர்ந்து பார்லிமெண்டரி தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழன் யார் என்று தெரியும். நன்றி தினமலர் ஆசிரியர் அவர்களே....
ஜோதி - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-16 18:49:54 IST
நிச்சயம், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறுபடியும் அமைக்கும் . ஜெய் ராகுல் ஜி...
elango - Sharjah,இந்தியா
2010-09-16 18:26:07 IST
A person who gets elected is not a leader, but a follower of those electing him. Also a leader is captivated by the vision and operates with everyone to make his vision come true....
jothi - கோயம்புத்தூர்,இந்தியா
2010-09-16 18:06:39 IST
நிச்சயம், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறுபடியும் அமைக்கும் . ஜெய் ராகுல் ஜி...
Velmurugan - Madurai,இந்தியா
2010-09-16 17:48:46 IST
ராகுல் நீங்கள் சின்ன பிள்ளை தனமா பேச வேண்டாம். உங்கள் தமிழ்நாடு கனவு பலிக்காது. கொஞ்சம் ஓய்வு எடுக்கவும்...
சா. ரவி - Jaipur,இந்தியா
2010-09-16 17:41:48 IST
ராகுல் ஜி முதலில் தமிழ்நாட்டில் தொண்டர்களை உருவாக்குங்கள். தமிழ் நாட்டிலே தொண்டன் இல்லாத ஒரே கட்சி காங்கிரஸ் தான். எல்லோருமே தலைவர்கள். பஹுஜன் சமாஜ், சிவ சேனா (மும்பாயில் தமிழர்களை அழிக்க உருவான கட்சி) இவற்றுக்கு கூட தமிழகத்திலே தொண்டன் உண்டு....
c.ramasamy - tup,இந்தியா
2010-09-16 17:36:00 IST
நீங்க ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் தொண்டர்கள் வேண்டும்...உங்கள் கட்சியில் தலைவர்கள் தானே இருக்கிறார்கள்...அதுவும் கோஷ்டியோடு.......
rpsenthilan - riyadh,சவுதி அரேபியா
2010-09-16 17:22:34 IST
திருவாளர் கே.விஜயராகவன் - சென்னை,இந்தியா, அவர்களது கருத்தை ஆமோதிக்கிறேன்.,...
Kim - TN,இந்தியா
2010-09-16 17:08:03 IST
14 லட்சம் காங்கிரசு உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு திராவிட கட்சியில் மற்றொரு உறுப்பினர் அட்டை இருக்கும். நல்லா தேடி பாருங்க ராகுல் !!...
johnson.t - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-16 16:56:53 IST
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி. தமிழகத்தில் அடுத்த ஆட்சி காங்கிரஸ். அதை யாராலும் மாற்ற முடியாது....
KOPALAN - LONDON,யுனைடெட் கிங்டம்
2010-09-16 16:46:52 IST
THANGABALU இருக்கும் போது காங்கிரஸ் நோ கவலை பா. அவருக்கு அவரு காலேஜ் ரொம்ப முக்கியம். வடிவேலு பேக்கரி வாங்கின கதைய விட கேவலம்பா...
நல்லதம்பி - Tirupur,இந்தியா
2010-09-16 16:28:08 IST
தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க கண்டிப்பாக விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லை எனில் ஆட்சிக்கு வரவே முடியாது.அது அவர்களது கனவாகவே ஆகி விடும்.... 
காவிரி யை பற்றி தெளிவாக சொன்னால் ராகுலுக்கு வோட் கிடைக்கும். தமிழ் நாட்டின் உயிரான காவேரி யை எதிபார்க்காதிர்கள் என்று சொன்ன ராகுலுக்கு என்ன கிடைக்கும், அடுத்த தடவை பேசினால் தர்ம அடி கிடைக்கும், ௦...
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
2010-09-16 15:29:22 IST
அப்துகலாம் நெறைய கனவு காண சொன்னார்!!அதை ராகுல் நிறைவேற்றி வருகிறார்.இரண்டு கோடி வன்னியர் இருப்பதாக கூறும் பாமக கூட்டணிக்கே திண்டாடும் போது ஐம்பதாயிரம் ஆட்களை வைத்து கொண்டு என்னமா கூத்தடிக்கிரானுவோ?...
லக்ஷ்மினரயணன்.r - கேம்ப்சென்னை,இந்தியா
2010-09-16 15:23:15 IST
வேலை செய்யாத தமிழ் நாட்டு தலைவர்கள் காங்கிரசில இருக்கற வரைக்கும் தமிழ் நாட்டுல காங்கிரஸ் ? அப்புறம் யாரு யாரு தொண்டருநு ராகுல் வந்து சொல்லட்டும், ஏன்னா எல்லோரும் தலைவருங்கோ...
esspee - trichi,இந்தியா
2010-09-16 15:22:03 IST
தமிழக காங்கிரசில் முதலில் அடுத்தவர் வேட்டியை உருவாமல் பார்த்துகொண்டால் அதுவே நல்லது. எப்போ எப்போ காங்கிரஸ் மீட்டிங் நடக்குதோ அன்னைக்கெல்லாம் ஆம்புலன்சும், செருப்பு வியாபாரிக்கும் நல்ல வியாபாரம். கட்சியில் இருகிறதே பத்து பேர். அதுல பதினஞ்சு குரூப்., இருவத்தஞ்சு அடியால்.இது எப்படி விளங்கும் . ஊத்தி சங்கு ஊத வேண்டியது தான்...
veera - chennai,இந்தியா
2010-09-16 14:58:04 IST
First be bold enough to cut ties with DMK .Keep alliance with DMDK PMK Let Sonia and Rahul visit entire Tamilnadu right from now .Congress man will be the CM next time...
கே.விஜயராகவன் - சென்னை,இந்தியா
2010-09-16 14:55:16 IST
ஏன்?இந்தியாவை சீரழிப்பது போதாதா?தமிழகத்தில் அந்த வேலையைத்தான் கலைஞர் தாத்தா சிறப்பாக செய்துகொண்டிருக்கிறாரே. உங்களுக்கு அடிமைகள் தான் பிடிக்கும். மக்கள் செல்வாக்கோட ஒருத்தர் வளர்ந்துட்டா பொறுக்காதே. அவரை மொதல்ல ஓரம் கட்டி, மட்டம் தட்டினாத்தான் உங்களுக்கு தூக்கமே வரும். உங்க பாட்டி இந்திரா, காமராஜ் செல்வாக்கு பிடிக்காம, அவரை ஒழிக்க, காங்கிரசை பிளந்தார். அன்று பிடித்தது ஏழரை சனி. உங்கள் நேரு குடும்பத்துக்கே இந்தியா உங்களின் ஏக போக சொத்து என்று நினைப்பு. மத்தியில் வேறு எவரையும் ஆட்சியில் அமர விடமாட்டீர்கள். உங்கள் நரி புத்தியை பயன்படுத்தி, அந்த ஆட்சியை கவிழ்த்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பீர்கள். மாநிலங்களிலும் உங்கள் கட்சி தலைவர்களை வளர விடாமல் கோஷ்டிகளை நீங்களே வளர்த்து விட்டு, வேடிக்கை பார்ப்பீர்கள். உங்கள் குடும்பத்தால் இந்த நாடு படும் கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா? வேண்டாம் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி. கழகங்களால் மக்கள் வரிப்பணம் தான் பாழாகிறது. ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை பிரித்து, அடித்துக்கொள்ள வைத்து விடுவீர்கள். பெயரளவிலாவது இப்போது தமிழகத்தில் ஒற்றுமை இருக்கிறது. உங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியால் அதுவும் போய் தமிழகம் காஷ்மீராகி விடும். நீங்கள் மத்தியில் இருந்தே ஒழிய வேண்டும் என்பது தான் உண்மையான தேச பக்தர்களின் பிரார்த்தனை. அது பலிக்கட்டும். தமிழகம் பிழைக்கட்டும்....
புகழேந்தி சா - bangkok,தாய்லாந்து
2010-09-16 14:22:52 IST
திராவிட கட்சிகள் இருக்கும்வரை ஆட்சி என்பது வெறும் கனவு....
மணி - சென்னை,இந்தியா
2010-09-16 14:22:45 IST
இவரின் அப்பா ராஜீவ் தனியாக ஜெயித்துக்காட்டுகிறேன் எனக்கூறி, 13 முறை தமிழகம் வந்து சாக்கடைப் பாலத் திறப்பு விழா வரை கலந்து கொண்டு, கடைசியில் 26 (13x2?) சீட் வாங்கினார்! பல ஊரில் டெபாசிட் வேறு காலி!.இத்தனைக்கும் தூர்தர்சன்(சன் டிவி வருவதற்குமுன்) ரேடியோ கூட இவர்களுக்காக முழுநேரம் உழைத்தன! அவருக்குத் தெரியாதது என்னவென்றால், தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனை விலைக்கு வாங்குவது மிகச் சுலபம்!...
காதர் - கோலாலும்பூர்ன்,மலேஷியா
2010-09-16 14:13:47 IST
தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ராகுல் காந்தி போன்ற நாலு தலைவர்கள் வேண்டும்...
முகமது - ரியாத்,இந்தியா
2010-09-16 13:41:24 IST
Bismillah/In the name of God, I think, after some years, DMK and ADMK will join together or go for Alliance against Congress. Let congress also come to power in Tamil Nadu....
balaji - Delhi,இந்தியா
2010-09-16 13:13:13 IST
காங்கிரஸ் ஆட்சி அமைக்க முதலில் ராகுல் தமிழ் பேச முயற்சிக்க வேண்டும்.தமிழ் பேசினால் தமிழ் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் .சோனியா மேடம் கூட தமிழ் பேசி 231 தொகுதிகளை பார்த்து மக்களை சந்திக்க வேண்டும் ..ஆல் தி பெஸ்ட் ராகுல் .....
கணேஷ் - சென்னை,இந்தியா
2010-09-16 13:11:54 IST
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...
solomon - kovilpatti,இந்தியா
2010-09-16 12:38:28 IST
தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்கும்வரை ஆட்சி என்பது வெறும் கனவு. யார் தோளிலாவது ஏறிக்கொண்டு சீட் பிடிக்கலாம். தனித்து நின்றால் டெபாசிட் காலி....
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-16 12:32:52 IST
ஆசை இருக்கு. ஆனால் காமராஜ், கக்கன், சி.சுப்ரமணியன், வெங்கட்ராமன் போன்ற செயல் திறன்மிக்க தமிழ் தலைவர்கள் இல்லையே? அப்படியே ஆட்சியை பிடித்தாலும் எதிர் கட்சியே தேவையில்லை இப்போ இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு....
KIm - TN,இந்தியா
2010-09-16 12:31:16 IST
ஹ ஹ ஹ ஹ !! ராகுலுக்கு தமிழ் நாடு வரலாறு தெரியவில்லை. காமராஜர் தோற்றதுக்கு காரணம் அவர் காங்கிரசில் இருந்ததுதான் ! காங்கிரசு மற்ற மாநிலங்களில் குப்பை கொட்டலாம். தமிழ்நாட்டில் ஒரு ஜீரோ !! முதலில் தனித்து நின்றால் வேட்பாளர் மனைவி வோட்டு காங்கிரசுக்கு விழாது ஹ ஹ ஹ் !ராகுல் பையா நீ பேசியது கல்கத்தாவில் OK. ஆனால் தமிழ்நாட்டில் இது பெரிய காமடி தெரியுமா !!பொய் இல்ல நீ வேண்டுமானால் தங்கபாலு சிதம்பரம் அல்ல இளங்கோ கிட்ட கொஞ்சம் கேட்டு பாரு !சிதம்பரத்த ஜெய்க்க வைக்க பெரும்பாடாகி விட்டது !! திமுக மத்தியில் பவர் தேவை. அதுக்காக காங்கிரஸ் தேவை. இது தான் உண்மை. கேட்டுபாரு கண்ணு !! அண்ணா காங்கிரசுக்கு சங்கு ஊதி 43 வருஷம் அகுது !!தினமலர் தேங்க்ஸ்...
வி கே.லோகநாதன் - REDHILLS,இந்தியா
2010-09-16 12:15:35 IST
சுய பலம் தெரிந்த பின் பேட்டி கொடுப்பது நல்லது. காரணம் ஒற்றுமை என்றால் என்ன என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாது....
ர.ராஜேந்திரன் - Chennai,இந்தியா
2010-09-16 12:08:08 IST
ராகுல் காந்தியின் நண்பர் ஓமர் அப்துல்லாவிடம் ஆட்சியை பிடித்து கொடுத்து இன்று ஜம்மு காஷ்மீரில் நிலவும் வன்முறை நிலைமை தான் தமிழ்நாட்டில் வர வேண்டும் என்கிறாரா ராகுல்????...
krishna - chennai,இந்தியா
2010-09-16 11:59:04 IST
இருநூறு இடங்களில் டெபாசிட் போகும், அஞ்சு இடங்களில் ஜெயிக்கும்.அதுவும் ரொம்ப கஷ்டம்

சிறுவன் பலி! பேருவளையில் பொலிஸார்-கொள்ளையர் துப்பாக்கி சமர


பேருவளை நகரில் நேற்று புதன்கிழமை பிற்பகல் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக்குமிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சமரின் போது, இடையில் சிக்கி எட்டு வயதுச் சிங்கள சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சமரின் இடையில் சிக்கி பேருவளை மொறகல பகுதியைச் சேர்ந்த சுதில் நிலுபுல் (8 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
கொள்ளைக் கோஷ்டியொன்று பேருவளை நகரில் நடமாடுவது தொடர்பான தகவலொன்றையடுத்து மஹரகமவிலிருந்து சென்ற பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டிக்குமிடையிலேயே இந்தத் திடீர் மோதல் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்களை அடையாளம் காட்டுவதற்காக அங்கு சென்ற பொலிஸாருடன் சந்தேகநபர் ஒருவரும் சென்றுள்ளார். கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றிவளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸார் அங்கு சென்றபோது பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே துப்பாக்கிச் சமர் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் பெருமளவில் இருந்த வேளையில் இந்தத் துப்பாக்கிச் சமர் வெடித்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்து நாலாபுறமும் சிதறியோடினர். இதன்போது, அப்பகுதியில் ஆட்டோ ஒன்றினுள்ளிருந்த எட்டு வயதுச் சிறுவனொருவன் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன.
சிறுவன் உடனடியாக பேருவளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்திய பின் அவர் மேலதிக சிகிச்சைக்காக நாகொட ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட போதும் அங்கு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சிறுவனின் தந்தையும் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவாறு அந்தக் கொள்ளைக் கோஷ்டி காரொன்றிலேறி தப்பிச் சென்றுள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக நான்கு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தயா மாஸ்டர்: உள்நாட்டு யுத்தம் வீணானது! அது மனித உயிர்களை காவுகொண்டது:

அப்படி போடு போடு போடு  தன்னாலே
 
உள்நாட்டு யுத்தம் வீணானது! அது மனித உயிர்களை காவுகொண்டது: தயா மாஸ்டர்
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது வீணாக மனித உயிர்களை காவுகொண்டதெனவும் தமிழர்கள் அதனை விரும்பவில்லை எனவும் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். தொலைபேசியூடாக பிபிஸிக்கு அளித்த சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"யுத்தம் வீணானதொன்று. தமிழர்கள் அதனை விரும்பவில்லை. தமிழர்களின் முக்கிய நோக்கம் கல்வி. அது பணத்தினை வீண்விரயம் செய்தது எனக் கூறியுள்ளார்.
அவர் யாழ்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றில் கடமைபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
அதனோடு தான் இலங்கை அரசுடன் எவ்வித தொடர்பையும் பேண வில்லையெனவும் தான் கே.பியை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ஆவர்.  அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது சகாவான மொழிபெயர்ப்பாளர்  ஜோர்ஜ்  அவர்களுடன் இராணுவத்திடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
comments:
அண்ணே இந்த ஞானோதயம் கொஞ்சம் முன்னாடி வந்திருந்த இவ்வளவு அழிவும் வந்திருக்காதே? ம்ம் உங்களுக்கு புலிவழியும் சரி ராஜபக்ச வழியும் சரி துட்டு வந்தால் சரிதானே?  புலிவாலுப்பில்லைகள் எல்லோரும் உங்களைப் போலத்தான்

இந்திய மாணவர்களை விட நன்றாகப் படிக்க வேண்டும்: ஒபாமா

அமெரிக்க பள்ளி மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் போட்டியை சமாளிக்கக் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூட மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

உலக நாடுகள் அனைத்தும் முன்பை விட தற்போது அமெரிக்காவுடன் அதிகமாக போட்டி போடுகின்றன. வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவிலும், சீனாவிலும் உள்ள மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கின்றனர்.

இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க மாணவர்களும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து ஏராளமான தொழில் துறை அறிஞர்களை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் உலக அரங்கில் அமெரிக்கா தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

பள்ளிகளில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறீர்களோ, அந்த அளவு வாழ்க்கையிலும் முன்னேறுவீர்கள். பள்ளியில் பெறும் வெற்றி மாணவர்களின் வாழ்க்கையில் பெறப்போகும் வெற்றியை மட்டும் தீர்மானிப்பதன்று. அது தான் அமெரிக்காவின் வெற்றியையும் தீர்மானிக்கும். எனவே, நீங்கள் முன்பை விட நன்றாகப் படித்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை: கோட்டாபாய ராஜபக்‌ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்‌ஷ இந்தியாவின் தி ஏசியன் ஏஜ் (The Asian Age) பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் முக்கியமாக தெரிவித்திருந்த சில விடயங்களாவன;
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை. அதனால் தான் தோற்கடிக்கப்படுகின்றமைக்கு முதல் நாள் கூட புலிகள் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தித் தப்பிச் செல்கின்றமைக்கு முயற்சித்தனர்.
அவர்கள் சரண் அடைந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
படையினர் ஏராளமான இழப்புகளுக்கு மத்தியில் உக்கிரமாகப் போரிட்டு வெற்றியை தொட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இறுதி நிமிடத்தில்தான் புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு தயார் என்று தூது அனுப்பினார்கள்.
ஆகவேதான் அக்கோரிக்கையை நாம் நிராகரிக்க வேண்டி ஏற்பட்டது. புலிகள் சரண் அடைய வருகின்றார்கள் என்று எமக்கு எவரும் அறிவித்து இருக்கவில்லை. நாம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் பற்றுறுதியாக செயற்பட்டமையாலேயே புலிகளை தோற்கடிக்க எமக்கு காலம் எடுத்தது.
பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட்டிருக்காவிட்டால் 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே புலிகளின் இடத்தைப் பிடித்திருப்போம். ஆனால் எமக்கு அந்த இடத்தைப் பிடிக்க இரு மாத காலம் எடுத்துள்ளது.
ஆகவே நாம் எதிர்கொண்டிருந்த சவால்களை சர்வதேச சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நாடுகள் இலங்கையை கட்டாயம் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுதல் வேண்டும்.
அரச படையினர் மனிதாபிமானத்தை ஒரு கரத்திலும், ஆயுதத்தை இன்னொரு கரத்திலும் ஏந்திக் கொண்டுதான் சண்டையிட்டனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்‌ஷ அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சத்தீஷ்கரில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகளும், கொடூரமான ராணுவ என்கவுண்டர்களும் அப்பகுதியின்

சத்தீஷ்கர் மற்றும் பாஸ்டார் பகுதிகளின் துன்பக்கதைக்கு காரணம், அங்கு  நிறைந்துள்ள கனிம வளங்களே! இந்தியாவின் மொத்த இரும்புத்தாது வளத்தில் ஐந்தில் ஒரு பங்கு, சுமார் 2336 மில்லியன் டன் இரும்புத்தாது அப்பகுதியில் உள்ளது. தந்தேவடா, கான்கர், ராஜ்நந்த்கான், பாஸ்டார், துர்க் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் இரும்புத்தாதுவில் அதிகபட்ச அளவான 68% இரும்பு உற்பத்தி செய்ய முடியும்.  பாஸ்டார் பகுதியில் இரும்புத்தாதுவுடன், சுண்ணாம்புக்கல், பாக்ஸைட், (அணுசக்தி தயாரிக்க பயன்படும்) யுரேனியம், வைரம் ஆகிய கனிம வளங்களும் ஏராளமாக உள்ளன.  சத்தீஷ்கர் என்ற மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டபோது அம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி ஏற்ற அஜித் ஜோகி, ‘செல்வ வளமு’ள்ள அந்த நிலப்பகுதியில் வறுமையில் வாடும் மக்கள் வசிப்பதாக குறிப்பிட்டார். ‘செல்வவளம்’ மிக்க இந்தப் பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்தது. இந்தப் பகுதிகளுக்கு செல்வதற்கான வழிகள் அமைக்கப்படாதிருந்த அந்த சமயத்தில் ‘செல்வ வளம்’ மிக்க அந்தப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏழை மக்களுக்கு எந்த சவாலும், பிரசினையும் இல்லை. ஆனால் உலக மயச்சூழலில் பெருகி வரும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயனாக, நடைமுறையில் உள்ள காலனியாதிக்க போக்கின் விளைவாக ‘செல்வ வளம்’ மிக்க அந்த பகுதி மீது அப்பகுதியில் வசித்த ஏழை மக்கள் கொண்டிருந்த கட்டுபாட்டிற்கு பெரும் சவால் ஏற்பட்டது.
சத்தீஷ்கரின் வனப்பகுதியில் இருந்த வனவளங்களும், கனிம வளங்களும், அவற்றின் மதிப்பும் தெரியவந்த பின்னர் இப்பகுதி மீதான இறையாண்மையை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசு அமைப்புகளின் மிக முக்கியமான கடமையானது. அப்பகுதியில் ஏராளமான வன வளங்களும், கனிம வளங்களும் இருப்பதை கண்டறியாதவரை செயலற்று இருந்த அரசு அமைப்புகள், அப்பகுதியில் இருந்த வளங்களை கண்டறிந்த பின்னர் தங்கள் அதிகாரங்களை அப்பகுதியில் நிறுவத் தொடங்கின. மேலும் வளம் மிகுந்த அந்த நிலப்பகுதிகளை பன்னாட்டு நிதி மூலதன அமைப்புகளான டாடா, எஸ்ஸார், லாஃபார்ஜ், ஹோல்சிம் உள்ளிட்ட தொழில் கழகங்களிடம் ஒப்படைப்பதில் இந்திய அரசு அமைப்புகள் ஆர்வம் காட்டின. சாமானிய மக்களிடம் இருந்து கையகப்படுத்திய வளம் மிக்க நிலங்கள் தொழிற்கழகங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்காக கிராம சபை உள்ளிட்ட அமைப்புகள் போலியாக செயல்படுத்தப்பட்டன. சட்டங்கள் மீறப்பட்டன.

ஆனால் இந்தப்பணி அரசு நினைத்தது போல எளிதானது அல்ல என்பது விரைவில் விளங்கியது. எஸ்ஸார் மற்றும் டாடா நிறுவனங்களுக்காக நில ஆர்ஜிதம் செய்வதற்கு பாஸ்டாரின் தெற்குப் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பான்சி பகுதியில் ஆயுதப்படையினரின் துப்பாக்கி முனையில் நிலம் கையகப்படுத்தல் பணி நடைபெற்றபோது, லோகண்டிகுடா பகுதியின் பல கிராமங்களிலும் டாடா நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தலுக்கு பலத்த எதிர்ப்பு நிலவியது. பல கிராம சபைகள் நிலத்தை கையளிக்க ஒப்புதல் அளிக்க வில்லை.

மாநிலத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களை மிகுந்த ஆயுத பலத்தோடு அரசு ஒடுக்க முயற்சித்தாலும், மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும், பரவலாகி வரும் போராட்டங்களையும் அடக்குவது அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதில் பாஸ்டார் பகுதிக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. சொத்துரிமையை வரையறை செய்வதிலும், உருவாக்குவதிலும் பாஸ்டார் பகுதியில் நிலவிய நடைமுறைக்கும், இந்தியாவின் மற்றப் பகுதியில் நிலவிய நடைமுறைக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. இப்பகுதியில் ஆட்சிபீடத்தில் இருந்தவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கல் அனைவரும், அரசின் அதிகாரங்களை வரையறை செய்வதில் காலனியாதிக்க மனநிலையிலேயே இருந்தனர். இந்தச் சூழ்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்ட தோல்வி, லஞ்ச-ஊழல், மிக மோசமாக உருவெடுத்த “வளர்ச்சி” ஆகியவை இந்தப் பகுதியில் ஆயுதங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்தன. பாஸ்டார் பகுதியில் மாவோயிஸ்ட் பிரசினையை எதிர்கொள்வதற்கு பல ஆண்டுகள் முன்னதாக பாஸ்டார் பகுதியை ஆட்சி செய்து வந்த மக்களின் அபிமானத்திற்கு உரிய தலைவரான ப்ரவீர் சந்திர பான்ஜ் டியோ, மத்திய பிரதேசத்தின் தலைநகரிலிருந்து வந்த உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த நேரத்தில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்றின் மூலமாக கொல்லப்பட்டார். நக்ஸலைட் வன்முறைக்கு எதிரான ஆதிவாசி மக்களின் தன்னெழுச்சியான எதிர்வினையே சல்வா ஜூடும் என்ற ஆயுதம் தாங்கிய படை என்று அப்போதைய சத்தீஷ்கார் மாநில அரசும், அதன் ஊதுகுழல்களாக விளங்கிய மீடியாக்களும் சித்தரித்தன.
இன்று கடந்த சில மாதங்களாக பச்சை வேட்டை என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாஸ்டார் பகுதி யுத்த முனையாக காட்சி அளிக்கிறது. அப்பகுதி மக்கள் உரிமை இழந்து, தனிமைப்படுத்தப்பட்டு, பீதியில் உறைய வைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகளும், கொடூரமான ராணுவ என்கவுண்டர்களும் அப்பகுதியின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தி வருகின்றன.
வளர்ச்சி என்று கூறப்படும் இத்தகைய நடவடிக்கைகளில் வீடிழந்து, வாழும் இடத்திலிருந்து துரத்தியடிக்கப்படும் மக்கள் இனம், அவர்களது நிலமும், வளங்களும் கொள்ளையடிக்கப்படுவதை வன்முறையற்ற – ஜனநாயக வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது என்ற கசப்பான உண்மைகளை புரிந்து கொள்கிறார்கள். இது மிகவும் மோசமான சூழலாகும்! ஏராளமான கல்வியாளர்களையும், படிப்பாளிகளையும் கொண்ட நர்மதா பச்சாவ் அந்தோலன் போன்ற மக்கள் போராட்டக்குழுக்களும்கூட நிர்வாக மற்றும் நீதித்துறை அமைப்புகள் மூலமாக பூர்விக குடிமக்களின் நிலங்களும், இயற்கை வளங்களும் கொள்ளை போவதை தடுக்க முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்கின்றனர்.  தற்போதைய நிலையில் மக்கள் ஒற்றுமை மற்றும் பலப்பிரயோகத்தின் மூலமாக மட்டுமே இதுபோன்ற பிரசினைகளை எதிர்கொள்ள முடியும். இதன் காரணமாகவே கலிங்கா நகர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் செய் அல்லது செத்துமடி என்ற நிலைக்கு மக்கள் செல்கின்றனர். இயற்கை வளங்களும், நிலமும் கொள்ளை போவதை தடுப்பதில் இந்த போராட்டங்களே முன்மாதிரியாக திகழ்கின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், எதை விலையாக கொடுத்தாலும் சரி: தங்கள் பகுதியில் அரசு அதிகாரிகளின் கால்கள் படக்கூடாது என்று நினைக்கின்றனர். இந்தச் சூழலில் அரசுத் தரப்பில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் வன்முறைகள் வெடிக்கலாம்.”