திங்கள், 15 ஏப்ரல், 2019

யோகி , மாயாவதிக்கு பிரச்சார தடை!. யோகிக்கு 72 மணி நேரமும், மாயாவதிக்கு 48 மணி நேரமும் தடை

மின்னம்பலம் : யோகி , மாயாவதிக்கு பிரச்சாரம் செய்ய தடை!தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஏப்ரல் 16ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி நேரமும், மாயாவதிக்கு 48 மணி நேரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற பிரச்சாரத்தால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக ஏப்ரல் 11ஆம் தேதியன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், இஸ்லாமியர்களால் மிகவும் மதிக்கப்படும் அலிக்கும், இந்துக் கடவுளான ஹனுமனுக்கும் நடைபெறும் போட்டிதான் மக்களவைத் தேர்தல் என்று யோகி ஆதித்யநாத் பேசினார். ஹனுமன் மீது பாஜகவுக்கு நம்பிக்கையிருப்பதால் தேர்தலில் வெற்றிபெறுவோம் எனவும் யோகி ஆதித்யநாத் பேசினார். இதைக் காரணமாக காட்டி தேர்தல் ஆணையம் அவர் பரப்புரை நடத்த தடை விதித்துள்ளது.

கட்சிகள் பணத்தை வாரி இறைக்கின்றன ... புலம்பும் உ.பி.க்கள்!

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அனுப்பிய பணம்- புலம்பும் உ.பி.க்கள்!“மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் மார்ச் 11 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே துரைமுருகன் சில மாவட்டச் செயலாளர்களை தனித்தனியே கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு சில எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து தொகுதி எப்படி இருக்கு என கேட்டுக் கொண்டிருந்தார். ‘அண்ணே... போன சட்டமன்றத் தேர்தல்லயே நாம துட்டுக்கொடுத்திருந்தோம்னா இந்நேரம் ஆட்சியில இருந்திருக்கலாம்ணே.... துட்டு கொடுக்காமயே 90 தொகுதி ஜெயிச்சோம். அதனால இப்பவாச்சும் செலவு செய்யணும்னே’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் பேசி முடித்த பிறகு துரைமுருகன் பேசும்போது, ‘இந்த கட்சியில நாங்கள்லாம் ஒரு நாளைக்கு நாலு டீ குடிச்சுட்டு தேர்தல் வேலை பாத்திருக்கோம். உங்களை அப்படி பாக்க சொல்லலை. என்கிட்ட நீங்க வந்து சொன்ன சில முக்கியமான விஷயங்களை பொருளாளர்ங்குற முறையில தலைவர்கிட்ட சொல்லிட்டேன். .

சசி தரூர் படுகாயம்.. நேர்த்திக்கடன் செலுத்தியபோது தராசு கொக்கி தலையில் விழுந்தது வீடியோ


மாலைமலர் :மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் இன்று துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தியபோது தராசின் கொக்கி அறுந்து தலையில் விழுந்ததால் படுகாயமடைந்தார். திருவனந்தபுரம்: நாடு முழுவதும் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மக்கள் இன்று ‘விஷு’ எனப்படும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், திருவனந்தபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் மந்திரியுமான சசி தரூர் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவி கோவிலில் தனது எடைக்கு எடை வாழைப்பழங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி ‘துலாபாரம்’ செலுத்த வந்திருந்தார். ‘துலாபாரம்’ தராசின் ஒரு தட்டில் வாழைப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட, மற்றொரு தட்டில் சசி தரூர் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தராசு முள்ளில் மேல்பகுதியில் இருந்த கனமான இரும்பு கொக்கி சசி தரூர் தலையின் மீது வேகமாக விழுந்தது.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்த சசி தரூர் தடுமாறியவாறு கீழே சாய்ந்தார்.

ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜகவினருக்கு அளிக்கிறார் மோடி .. வீடியோ


மாலைமலர் : ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜக பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார்.

அமராவதி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன. அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள். 2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர்.
பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது. அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது. அதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

தரக்குறைவான மேடைப் பேச்சு: திமுக பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்

tamil.thehindu.com : பிரதமர் மோடி, பிரேமலதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் குறித்த திமுக பேச்சாளரின்  தரக்குறைவான மேடைப் பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (ஏப்ரல் 15) முடிவடைகிறது. இதனால் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் பேச்சாளர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். சமீபத்தில் தென்சென்னையில் நடைபெற்ற திமுக சார்பான பொதுக்கூட்டம் ஒன்றில் பேச்சாளர் ஒருவர் பேசிய வீடியோ பதிவு பெரும் வைரலானது. அதில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேச்சாளர் ஒருவர் பேசினார். அவர் பேசிய வார்த்தைகள் மிகவும் கொச்சையாக இருந்தது.

ரபேல் பிரதமரை திருடன் என்பதா? - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என்பதா? - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
மாலைமலர் : ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றம் சாட்டும் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
புது டெல்லி: பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.56 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் முறை கேடுகள் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி வாக்காளர்களுக்கு டோக்கன்.. தடுக்க போன கலைஞர் மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு

tamil.news18.com : அ.ம.மு.க கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியினர்
வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததால், ஏற்பட்ட தகராறு தொடர்பாக தி.மு.க முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் மகள் செல்வி மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நேற்று மாலை சூளைமேடு பகுதியில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்
அப்போது அ.ம.மு.க கூட்டணிக் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெகலான் பாகவியை ஆதரித்து அக்கட்சியைச் சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் ஆகிய இரு பெண்கள் அதே பகுதியில் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் வாக்காளர்கள் பட்டியல் வாங்கி டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது செல்வி உட்பட தி.மு.கவினர் அதை தட்டிக் கேட்டதால், இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.கவின் 108-வது வட்டச் செயலாளர் திருமலை என்பவர் சூளைமேடு காவல் நிலையத்திலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தார்.

எடப்பாடியின் பி எஸ் கே நிறுவனத்தில் வரிச் சோதனை 14 கோடி ரூபாய் மற்றும் ஆவணங்கள் .. பியுஸ் போன கோயல்?

எடப்பாடியை எகிறிய கோயல்
மின்னம்பலம் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான பி.எஸ்.கே நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் ஏப்ரல் 12. 13 தேதிகளில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் சுமார் 14 கோடி ரூபாய் அளவிலான ரொக்கப்பணமும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பியூஷ் கோயலிடம் பேசி, ‘என்ன நமக்கு நெருக்கமானவங்க தரப்புலயே ரெய்டு நடக்குது?” என்று கேட்டதை நாம் முன்பே செய்தியாக வெளியிட்டிருக்கிறோம்.
இந்நிலையில் பியூஷ் கோயலிடம் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடிக்கு ஒரு எச்சரிக்கைத் தகவல் வந்திருப்பதாக பாஜக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கட்கரியின் எட்டுவழிச்சாலை பேச்சுக்கு முதல்வர் ஏன் கேள்வி கேட்கவில்லை?: ஸ்டாலின்

கட்கரி பேச்சுக்கு முதல்வர் ஏன் கேள்வி கேட்கவில்லை?: ஸ்டாலின்
மின்னம்பலம் :நிதின் கட்கரி எட்டு வழிச் சாலை அமைத்தே தீருவோம் என்று கூறும்போது முதல்வர் ஏன் கேள்வி கேட்கவில்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எட்டு வழிச் சாலை வழக்கில் தீர்ப்பு வந்தபோது, அதிமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாது என்கிற உத்தரவாதத்தை வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா? அது முடியவில்லை எனில் அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா? என்று சவால் விடுத்திருந்தார்
இதற்கிடையில், தி இந்து ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘எட்டு வழிச் சாலை திட்டம் பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை’ என்று கூறியிருந்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் : (சீமானுக்கு) மக்களுக்கு அதிகம் பேசுபவர்களை விட சேவை செய்பவர்களைத்தான் பிடிக்கும்

வெப்துனியா : நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு எச்சரிக்கை வடிவில் இருந்த அந்த அரசியல் அறிக்கையில் அவர் பெயரை
குறிப்பிடவில்லை என்றாலும், அந்த அறிக்கையை படிக்கும் அனைவருக்கும் அந்த அரசியல் தலைவர் யார்? என்பது எளிதில் புரிந்துவிடும். பல அரசியல் தலைவர்களை வம்புக்கு இழுத்து, மேடையில் அநாகரீகமாக பேசி வரும் அந்த அரசியல் தலைவரை தற்போது ராகாவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை இதுதான்: வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை.
இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்! அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து "அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்" என மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?

நூற்றுக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு: கடப்பா பூத்திற்கு பூட்டு; ஆந்திர வாக்குப்பதிவு நிலவரம்

THE HINDU TAMIL: ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி புதிய கட்சியாகக் களமிறங்கியுள்ளன.  பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களமிறங்கியுள்ளது.
வாக்காளர்களுக்குப் பணம் கடப்பா பூத்திற்கு பூட்டு:
பிரகாசம் மாவட்டம் பல்லிக்குருவா மண்டலில் உள்ள வேமாவரம் கிராமத்தின் வாக்குச்சாவடி ஏஜெண்ட்கள் இருவர் கைது செய்யப்பட்டனர், இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

ஆந்திரா தெலுங்கான எம்பிக்கள் புதிய மத்திய அரசை உருவாக்குவதில் .. என்ன பங்கு வகிப்பார்கள்?

ஐஷ்வர்யா -க. பாலாஜி - விகடன் : `ஏழு கட்டங்களாக நடைபெறும்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு’, `காலம் தாழ்த்தி வெளியிடப்படும் தேர்தல் முடிவுகள்’ எனப் பல சர்ச்சைகளுடன் தொடங்கியிருக்கிறது நாட்டின் 17-வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல். அசாமில் ஒட்டுமொத்த மாற்றுப் பாலினத்தவர்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள். லோக்சபா தேர்தலையும், மாநிலத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்பதால் மாநில சட்டசபைத் தேர்தலையே ரத்து செய்யும் அளவிலான கூத்து ஜம்மு-காஷ்மீரில் அரங்கேறியுள்ளது.
மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் இல்லாமல், புதிய தலைமையுடன் முதன்முதலாகத் தேர்தலைச் சந்திக்கிறது தமிழகம். இந்த வரிசையில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் பிரிவினைக்குப் பிறகு முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது ஆந்திரப் பிரதேசம். கட்சி தொடங்கிய எட்டு வருடத்தில் 16 லட்சம் கோடி ரூபாய்வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஒருபுறம், ‘பிரிவினைக்குப் பிறகான ஆந்திராவின் முதலமைச்சர்’, `தொழில்நுட்ப அளவில் சிங்கப்பூர் அளவிலான தலைநகரத்தை உருவாக்குகிறார்’ என்கிற எக்கச்சக்க கிரெடிட்கள் சந்திரபாபுவின் பாக்கெட்டில் இருந்தாலும், அமராவதியை உருவாக்குவதற்குப் பணத்தைக் கொட்டியவர், விவசாயிகள் பிரச்னையைக் கண்டுகொள்ளவேயில்லை என்கிற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது. இருந்தும் ஆந்திராவின் தேர்தல் வெற்றிதான், நாட்டின் 15-வது பிரதமரை முடிவு செய்யும் என்கிற பேச்சும் ஒருபக்கம் இருக்கிறது. கள நிலவரம் குறித்து அறிய ஒரே நேரத்தில் மக்களவைத் தேர்தலையும், மாநிலத் தேர்தலையும் சந்திக்கும் ஆந்திர மாநிலத்துக்குப் பயணப்பட்டோம்.

கம்பனிகளின் 9 அதிகாரிகளை அமைச்சுக்களில் பணிக்கு அமர்த்திய மத்தியரசு . ஆட்சி முடிய முதல் அவசர அநியாயம்! ..

Jeya Kumar : போகிற போக்கில் மிக முக்கியமான மாற்றத்தை மோடி அன்கோ செய்துள்ளது.
 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உயர் பதவிகளுக்கு அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களை குறுகிய கால அடிப்படையில் இணை சாளர வழியில் தேர்ந்தெடுப்பார்கள். lateral entery method.
மோடி அன்கோ இந்த லேட்டரல் என்ட்ரி - இணைசாரள முறையில் 9 வல்லுனர்களை வேளாண் இணை செயலர்களாக நியமித்துள்ளது.
 இதனால் என்ன பிரச்சனை என்கிறீர்களா..?
முதலில் சமூக நீதி பிரச்சனை....
அடுத்த சிக்கல் இவர்கள் யாருடைய நலனுக்காக இருப்பார்கள்? அமெரிக்காவில் மரபணு மாற்றும் பயிர்களை அமெரிக்க வேளாண் துறை பல காரணங்களைச் சொல்லி தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.
மரபணு ஒரு புரதம். ஆகவே புரதம் சார்ந்த பல ஆய்வுகளை நடத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியது. புதிதாக நுழைக்கப்பட்ட புரதம் ஏற்கெனவே உள்ளே இருக்கும் புரதங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் ஆராயச் சொன்னது - (புரோட்டியோனாமிக்ஸ் ஆய்வுகள்). மேலும் புதிய மரபணு ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் ஆராயச் சொன்னது. இப்படியாக காலம் சென்று கொண்டேயிருந்த்து.
இந்த சூழ்நிலையில் தான் இது நடந்தது.
மான் சான்டோவின் முன்னாள் சட்டப்பிரிவு தலைவர் இப்படி உள்ளே நுழைகிறார்..
அவர் மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதி கோப்பில் இப்படி எழுதுகிறார், ‘ மரபணு மாற்றுப் பயிர் புதிதாகச் சேர்க்கப்பட்ட மரபணு ஒரு புரதம் மட்டுமே. வெறும் புரதம் மட்டுமே. இது substantially equivalent one என்றார். அதாவது உள்ளே உள்ள பல ஆயிரம் புரதங்களுக்கு இணையானது என்று கூறி அனுமதி அளித்தார்.

கமலஹாசனின் திருட்டு கதை திரைப்படங்கள் வரிசையில் சில .......

Austin Benjamin : A few of the critically acclaimed (albeit stolen!!!) ones falsely attributed to fake genius Kamal Haasan are below.
எனக்குள் ஒருவன் * Enakkul Oruvan (1984) = ; The Reincarnation of Peter Proud (1975)
விக்ரம் * Vikram (1986) =  Robert Ludlum novels
இந்திரன் சந்திரன் * Indiran Chandiran (1989) =  Moon over Parador (1988)
குணா * Gunaa (1991) =  Tie me up! Tie me down! (1990)
மகாநதி * Mahanadi (1994) =   Hardcore (1979)
மகளிர் மட்டும் * Magalir Mattum (1994) =   Nine to Five (1980)
நம்மவர் * Nammavar (1994) =   To Sir, with Love (1967)
சதி லீலாவதி * Sathi Leelavathi (1995) =   She Devil (1989)
அவ்வை சண்முகி * Avvai Shanmughi (1996) =   Mrs Doubtfire (1993)
தென்னாலி * Thenaali (2000) =   What about Bob (1991)
பம்மல் கே சம்பந்தம் * Pammal K Sambandam (2002) =  The Bachelor (2000)
பஞ்ச தந்திரம் * Panchathantiram (2002) =  Very Bad Things (1998)
அன்பே சிவம் * Anbe Sivam (2003) =   Planes, Trains and Automobiles (1987)
நளதமயந்தி * Nala Damayanthi (2003) =   Green Card (1990) Corrupt Kamal talks about corruption:
Does Kamal Haasan have any right to talk about corruption by other politicians???
His entire film career comprising commercial blockbusters and critically acclaimed movies have actually been that of stolen products by means of unlawful theft.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

12 நாளாக போராட்டம் ..தமிழ்நாடு பயோமெடிக்கல் வேஸ்ட் ஃபேக்டரி.. தோல்வியாதி குழந்தைகள்.. கே.கே, புதூரில்

சாதிக் : தேர்தல் பரப்புரையில் மூழ்கிக் கிடக்கும் தமிழகமே ஒரு நிமிடம்!
இதோ சாவின் மடியில் ஓர் கிராமம்...
எதிர்காலத்தை முழுவதுமாய் தொலைத்து நிற்கிற குழந்தைகளை பாரீர்..
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகில் இருக்கிற கேகே புதூரில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 12 நாட்களைக் கடந்த பின்பும் அந்தப் போராட்டம் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
போராட்ட நோக்கம் தங்களுக்கு கேன்சரையும், தோல் நோயையும், மலட்டுத் தன்மையையும் தரும் bio medical waste எரிப்பு ஆலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான்.
ஓட்டுக்காக தமிழகமெங்கும் தெருத்தெருவாக அலையும் நம் அரசியல்வாதிகள் யாரும் அந்த கிராமத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் அடக்குமுறையை தாண்டி தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது...
அந்த ஆலை ஏற்படுத்தும் கொடூரத்தின் சாட்சியாய் ஓர் இரண்டு வயது குழந்தையை அக்கிராம மக்கள் காட்டுகிறார்கள்.
குழந்தையின் உடல் முழுக்க தோல் உரிந்து பரிதாப நிலையில் தவிக்கிறது

கட்டணக் கழிப்பறைகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்க வேண்டும்!

Magudeswaran Govindarajan. : சேலம் பேருந்து நிலையக் கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கினேன். ஒன்றுக்கு ஐந்து. இரண்டுக்குப் பத்து. நான் உள்ளே போய்விட்டு வெளியே வருகையில் கழிப்பறைக் கட்டணக்கார அம்மாவை விரைந்து அணுகினார் ஓர் இளம்பெண்.நெடுந்தொலைவுப் பேருந்திலிருந்து கழிப்பறை தேடி ஓட்டமும நடையுமாக வந்தவர் கையிலிருந்த பத்து உரூபாயை நீட்டி மீதத்தைக் கேட்டார். "அதுக்குப் பத்து ரூபாம்மா..." என்று கட்டணக்கார அம்மை சொன்னார். கொடுத்த பத்து உரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இளம்பெண் "அநியாயமா இருக்குது..." என்றவாறே திரும்பிச் சென்றார். 
அவர் நடையில் இயற்கை மூட்டிய கடுகடுப்பு நீங்காது துன்புறுத்துவதைக் கண்டேன். ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிட்ட அந்தக் காட்சியை என்னால் ஏற்கவே முடியவில்லை. 
ஒரு பேருந்து நிலையக் கழிப்பறையை ஒரு நாளில் ஆயிரத்தினர் பயன்படுத்தினால் ஏழெட்டாயிரம் ஈட்டுகிறார் அந்த ஒப்பந்தக்காரர். அது இருந்து தொலையட்டும். இதனைப் போன்ற ஒரு சூழலில் பெண்களுக்குக் கட்டாயம் விதிவிலக்கு இருக்க வேண்டும்தானே ? ஆண்களாவது மானம் பார்க்காமல் ஓரஞ்சாரத்தில் ஒதுங்கிக்கொள்வர். பெண்கள் இயற்கையழைப்புக்கு என்ன செய்வர் ? 

பிரதமரின் ஹெலிகாப்டரில் வந்த கறுப்பு பெட்டி! கறுப்பு பண பெட்டி?

பிரதமரின் ஹெலிகாப்டரில் வந்த கருப்பு பெட்டி!மின்னம்பலம் : கடந்த வாரம் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட கருப்பு நிறப் பெட்டியில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
கடந்த 9ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக, சித்ரதுர்கா ஹெலிபேட்டில் மோடி வந்த ஹெலிகாப்டர் இறங்கியவுடன், அதில் இருந்து ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றனர் சிறப்புப் பாதுகாப்புப் படையினர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகனமொன்றில் அந்த பெட்டியை ஏற்றி அனுப்பினர்.
இது பற்றி, நேற்று (ஏப்ரல் 13) காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதளப் பக்கங்களில் தகவல் வெளியானது. கர்நாடக காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா, இது குறித்து 14 நொடிகள் ஓடும் வீடியோவொன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பெட்டி ஏற்றப்பட்ட இனோவா கார் யாருடையது என்றும், இது பற்றி தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் மோடி மற்றும் ஹெலிகாப்டர் தொடர்பான காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. ஆனால், அந்த பெட்டியைத் தூக்கிச் செல்ல வீரர்களே சிரமப்படுவது நன்றாகத் தெரிந்தது.

திமுக ஆதரவை நாடிய பாஜக .. அடியோடு மறுத்த திமுக ..

டிஜிட்டல் திண்ணை: திமுகவின் ஆதரவைக் கேட்கும் பாஜக-   தொடங்கியது கார்ப்பரேட் ஆட்டம்!மின்னம்பலம்: “கடந்த சில தினங்களாகவே டெல்லி பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு தகவல் அரசல் புரசலாக அலைந்துகொண்டிருந்தது. அதாவது 2019 மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், பாஜக அரசு இதேபோன்ற மெஜாரிட்டி பலத்துடன் அமைய வாய்ப்பில்லை. முக்கியமான மாநிலக் கட்சிகள்தான் இந்த தேர்தலில் அதிக பலம் பெறப் போகின்றன. எனவே பாஜகவுக்கு பெரும்பான்மைக்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தேவைப்படும் இடங்களை மாநிலக் கட்சிகளிடம் இருந்துதான் பெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போதே தொடங்கிவிட்டன என்பதுதான் அந்த செய்தி.
பொதுவாகவே டெல்லி ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டு விவகாரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் பாஜகவுக்கான மெஜாரிட்டி வேட்டையில் தமிழ்நாடும் டிக் செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியை பேச்சோடு டெல்லி பத்திரிகையாளர்கள் விட்டுவிட்டனர். ஆனால், தி வயர் இணைய இதழைச் சேர்ந்த பத்திரிகையாளரான ரோஹினி சிங், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் திமுகவை பாஜவுக்காக தொழிலதிபர்கள் அணுகி வருகிறார்கள் என்ற செய்தியை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி ரோஹினி சிங் தனது ட்விட்டரில் காலை 9 மணிக்கு ஒரு முக்கியமான செய்தியைப் பதிவிட்டிருக்கிறார். ‘தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு மெஜாரிட்டி குறைந்தால், பாஜக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்க முன் வரவேண்டும் என்று மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் திமுகவை அணுகியிருக்கிறார்’ என்பதுதான் அந்த ட்விட். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே பத்திரிகையாளர் இதே விவகாரத்தில் இன்னொரு ட்விட் போட்டார். ‘பாஜக ஆட்சி அமைக்க தங்களிடம் தொழிலதிபர் ஆதரவு கேட்டபோது அதை திமுக மென்மையாக மறுத்துவிட்டது என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமைக்கும் திமுக தெரியப்படுத்திவிட்டது’ என்று பதிவு செய்திருக்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.

கோத்தபாயா ராஜபக்சே வசமாக சிக்கிவிட்டார்? அமெரிக்க விசாரணை வளையத்தில் சிக்க வைத்தது எது?

imageproxy.php  ஜானதிபதி ஆக ஆசைப்பட்டு வலையில் சிக்கினாரா கோத்தபாய. imageproxyimageproxy.php  ஜானதிபதி ஆக ஆசைப்பட்டு வலையில் சிக்கினாரா கோத்தபாய. imageproxyimageproxy.php  ஜானதிபதி ஆக ஆசைப்பட்டு வலையில் சிக்கினாரா கோத்தபாய. imageproxyimageproxy.php  ஜானதிபதி ஆக ஆசைப்பட்டு வலையில் சிக்கினாரா கோத்தபாய. imageproxy ஒவொரு மனிதருக்கும் வாழ்வில் எழுவத்துக்கும், வீழ்வதுக்கும் தருணங்கள் இருக்கும். 10 வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் மிகவும் சக்தி மிக்க நபராக கருத்தப்படட, தற்போது 69 வயதான கோத்தாபய ராஜபக்சேவுக்கும் இந்த வீழ்ச்சியை உண்டாக்கும் தருணம் வந்து விட்டதா என்றே கடந்த வார, கொழும்பு லண்டன், கலிபோர்னியா வரை நிகழ்ந்த நிகழ்வுகள் கூறுகின்றன. இலங்கை அரச பணத்தில் கையாடல் செய்து, தனது தந்தைக்கு நினைவு மண்டபம் கட்டினார் என்ற வழக்கில், கொழும்பு நீதித்துறையை, தனது பெரும், நியாயமில்லாத இனகுரோத வாதங்களை மூலதனமாக வைத்து வாதாடும், வக்கீல் ரொமேஷ் டீ சில்வா மூலம், தலை சுத்த வைத்து, கைதாகாமல் வெளியே இருந்தவாறே வழக்கினை சந்தித்து வருகிறார் கோத்தபாய. இந்த நீதிமன்றின் அனுமதியுடன் இரு வார காலம் கலிபோர்னியா சென்றிருந்தார் அவர். போட்டி போடுறோம், வெல்லுறோம்…. ஜனாதிபதி மாளிகையை பிடிக்கிறோம் என்று, விமல் வீரவன்ச, கமன் பிள்ள போன்ற ஒட்டுன்னிகள் கொடுத்த நம்பிக்கையில், இலங்கையின் ஜனாதிபதி ஆகியே விட்ட கனவில், மார்ச் மாதம் 6ம் திகதி கொழும்பில் உள்ள அமேரிக்க தூதராலயத்தில், டிரம்ப் மீதுள்ள விசுவாசத்தினை விலக்கிக் கொள்ள விண்ணப்பித்து இருந்தார் அவர்.
இதன் மூலம் இப்போது பெரும் சிக்கலில் மாட்டி உள்ளார் போலவே தெரிகிறது.

கமலஹாசன் : நீட் தேர்வை ரத்து செய்து விட்டால், தமிழகம் முன்னேறி விடுமா? ....

tamilthehindu :நீட் தேர்வை ரத்து செய்து விட்டால், தமிழகம் முன்னேறி விடுமா
என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மக்கள் நீதி மய்யத்தின் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முனியசாமி மற்றும் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சுந்தரராஜன் ஆகியோரை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (சனிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:
"நீங்கள் (மக்கள்) இங்கு குழுமியிருப்பது மாற்றம் வேண்டும் என்பதற்காக. நான் என்ன காரணத்திற்காக வந்திருக்கிறேனோ, அதே காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள். நாம் இருவரும் ஒரே பக்கம், ஒரே கட்சி. உங்கள் கட்சி ஆட்சியாக மலர, நீங்கள் தான் ஆவண செய்ய வேண்டும்.
இன்றைக்கு அவர்கள் நாங்கள் தான் முதலில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம், அதனால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்கின்றனர். நல்ல ஐடியா. இதனை எங்கள் வீட்டுப் பெண் இறந்து போவதற்கு முன்பே செய்திருக்கலாமே. நீட் தேர்வு வேண்டாம் என அதனை எடுத்து விட்டால் தமிழகம் முன்னேறிடுமா? படிக்கிற பிள்ளைக்கு சோறு வேண்டாமா? குடிக்க தண்ணீர் வேண்டாமா? அதையெல்லாம் அவர்கள் ஏற்பாடு செய்ய மாட்டார்கள்.

ஜூலியன் அசாஞ்சே . வல்லரசுகளின் முகிலன்? விக்கிலீக்ஸ் நிறுவனரின் எதிர்காலம்.. கருத்து சுதந்திரத்திற்கு ஒரு சவால்!

Sumathi Vijayakumar "' Julian Assange. கடந்த மூன்று நாட்களாய் உலகம் உச்சரிக்கும் ஒற்றை பெயர். லண்டனில் உள்ள Ecuador தூதரகத்தில் கடந்த 7 ஆண்டுகளாய் தஞ்சம் அடைத்திருந்தவரை அமெரிக்காவின் வேண்டுகோளின் பெயரில்
இங்கிலாந்து அரசு அவரை கைது செய்திருக்கிறது. எதற்காக இந்த கைது என்பதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமாயின், நம் ஊர் முகிலன் எதற்காக காணடிக்கப்பட்டாரோ அதே காரணத்திற்காக தான் Julian Assange கைது செய்யப்பட்டுள்ளார் .
ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் Julian. சிறிய வயது முதலே கம்ப்யூட்டர் மேல் அதிக ஆர்வம் கொண்டவர். திறமைசாலி. Computer Hacking என்று சொல்லப்படும் பிற கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை ஊடுருவி தகவல்களை சேகரிப்பதில் வல்லமை பெற்றவர். பொதுவாக இத்தகைய திறமை கொண்டவர்கள் பெரும் நிறுவனங்களில் நம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சம்பளம் பெற்று உயர் பதவிகளில் இருப்பார்கள் . ஆனால் Julian தேர்ந்தெடுத்தது வேறு பாதையை.

ஊழலில் ஊறிய ஜெயலலிதா. ஒத்து ஊதிய தேர்தல் ஆணையம். லஞ்சத்தில் 2016ல் வெற்றி பெற்ற ஜெயா.


savukkuonline.com :தமிழக வாக்காளர்கள் இது வரை யார் யாருக்கெல்லாம் வாக்களித்திருக்கிறார்கள் என்று யோசித்தால், ஆச்சரியமாக இருக்கும். தேசியக் கட்சிகள் தவிர்த்து திராவிடக் கட்சிகள் வளரும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களை ஜெயிக்க வைத்தவர்கள் தமிழக வாக்காளர்கள். அதன்பின் தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு மட்டுமே வாக்களித்த வரலாறைக் கொண்டிருப்பவர்கள். இப்படி பல பெருமைகளுக்கு முன்மாதிரி நமது தமிழக வாக்காளர்கள். ஆனால் இன்று வாக்களர்களை அரசியல் கட்சிகள் எப்படி மாற்றியிருக்கிறது என்பதில் தமிழகம் மோசமான முன்மாதிரியாக இருந்து வருகிறது. இது நிச்சயம் நமக்கு தலைகுனிவு தான்.
2016 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறினார்.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியைத் தமிழக மக்கள் .தி.மு..வுக்கு வழங்கி உள்ளனர்.

சென்னை கோயம்பேடு மக்களின் நேரடி அரசியல் கருத்துக்கள் வீடியோ .. வினவு

மோடி, பாஜக, அதிமுக குறித்து கழுவி ஊற்றினர் சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் நாம் சந்தித்த மக்கள்... அந்த ரணகளத்திலேயும் ''தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம்'' என்றார் பாஜக அனுதாபி ஒருவர்...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெயரில் அரசு விருது: கவிஞர் பிறைசூடன் வலியுறுத்தல்

PATதினமணி : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெயரில் தமிழறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் பிறைசூடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் கவிஞர் அறக்கட்டளை சார்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
"தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோர் தலைமை வகித்தனர்.
அண்மையில் இயற்கை எய்திய பட்டுக்கோட்டையாரின் மனைவி கெüரவாம்பாளின் திருவுருவப் படம், விழா மேடையில் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக வட்டாரங்களில் வருமானவரி சோதனை . நேரம் பார்த்து ரெய்டு .. ஆளும் கட்சிகள் அதிர்ச்சி .

டிஜிட்டல் திண்ணை: ஐடி அதிரடி ரெய்டு ! எடப்பாடி அதிர்ச்சி, அதிகாரிகள் புரட்சி!
மின்னம்பலம் : “தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்  நேற்று (ஏப்ரல் 12) காலை முதல் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் நடந்த வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டு வழக்கத்துக்கு மாறாக ஆளுங்கட்சி வட்டாரத்தை கதிகலக்கியிருக்கிறது.
கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தள அமைச்சர் புட்டராஜு , தமிழகத்தில் வேலூரில் திமுக முக்கியத் தலைவர் துரைமுருகன், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் என்று பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து தொடர்ந்து ரெய்டுகள் நடந்து வந்தன. ஆச்சரியமாய் தமிழகத்தில் சென்னையில் சபேசன் என்ற ஆளுங்கட்சிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் வீட்டில் ரெய்டு நடந்தது. ஆனால் அதுபற்றிய வீடியோக்கள் வெளிவராத நிலையில், அரக்கோணம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், ‘துரைமுருகன் வீட்டு ரெய்டு வீடியோ மட்டும் வெளிவருகிறது. சபேசன் வீட்டு ரெய்டு வீடியோ ஏன் வெளிவரவில்லை?’ என்று கேட்டார். சில மணி நேரங்களில் சபேசன் வீட்டு ரெய்டு வீடியோ காட்சிகளும் கசிந்தன.