வியாழன், 21 ஆகஸ்ட், 2025

துரோகிஸ்தான்களால் சுடப்பட்டு தெருவில் வீசப்பட்ட பேராசிரியர் ராஜினி திறனகம அவர்களை ஞாபகம் இருக்கிறதா?

69TH BIRTHDAY – Ravana Lanka ...
Rajini Thiranagama 
ராதா மனோகர்   துரோகிஸ்தான்களால் சுடப்பட்டு தெருவில் வீசப்பட்ட   யாழ்ப்பாண பல்கலை கழக மருத்துவ பீடாதிபதி திருமதி ராஜினி திறனகம அவர்களை ஞாபகம் இருக்கிறதா? 
Sharika Thiranagama | Institute for ...
Shaarika Thiranagama

இப்போது அவரின் மகள் பேராசிரியர் சாரிகா திறனகம அதே யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் ஒரு ஆய்வரங்கத்திற்கு வருகை தந்துள்ளார் என்று தெரிகிறது!
இவர் அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தில் உதவி மானுடவியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்!
இயற்கை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? 
நீ கொடுப்பதை நீயே பெற்றுக்கொள்வாய்!
உன் மனதில் எது இருக்கிறதோ அதுவே உன்னை நோக்கி வரும்!
நீ எல்லோரையும் ஏமாற்றலாம் ஆனால் ஒருபோதும் உனக்குள்ளும் உன்னை சுற்றியும் உள்ள இந்த பிரபஞ்சத்தை ஏமாற்றவே முடியாது 
நீதான் கல்வி அறிவற்ற தற் குறியாச்சே?
வெறும் சுயநலமும் கொடூரத்தை ரசிக்கும் உளவியல் நோயும் நிரம்ப பெற்றவராச்சே?
இன்று கண்முன் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் எல்லாம் இனி வரும் தலைமுறைகளுக்கு பாடமாக இருக்கவேண்டும் 
பழசை எல்லாம் கிளறுவதாக எண்ணவேண்டாம்  இவை வெறும் பழசுகள் அல்ல ..இவை பாடங்கள்!  

ராதா மனோகர் : இந்த படம்..... யாழ்ப்பாணத்து தெருவில்..... இங்கே சுட்டு வீழ்த்தப்பட்டு கிடப்பது யார் தெரியுமா?
 இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ  பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் ராஜினி திரணகமவாகும் . 
இவர் லண்டனில்  பார்த்த வேலையை உதறி தள்ளிவிட்டு யாழ்ப்பாண மருத்துவ பீடத்தை செயல்படுத்த  வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாடு திரும்பியவராகும் .  இவர் குண்டடி  பட்டு இறந்து வீதியில் கிடக்கிறார். . 
அந்த வீதி வழியே செல்பவர்கள் ஏதும்  அறியாதவர்களாக போகிறார்கள் வருகிறார்கள் ஏன் தெரியுமா?
 பயம் பயம் பயம் ..  புலிகளுக்கு பயம் . ஜெர்மன் நாசிகளை  விட நாசகாரிகளான பிரபாகரன்  குண்டர்களின் அடுத்த சூடு எவருக்கு என்றே தெரியாத காலம் அது .
தங்களோடு தங்கள் ஊரில் பிறந்து வளர்ந்து தங்கள்   யாழ்மண்ணுக்கே சேவையாற்ற  திரும்பி வந்த ஒரு தமிழ் பெண் டாக்டர் இவர் என்பதை கூட  சிந்திக்க அனுமதி மறுக்கப்படடவர்கள் அந்த மக்கள்
வீழ்ந்து  கிடைக்கும் பேராசிரியை மீது ஒரு சின்னஞ்சிறு அனுதாப பார்வை செலுத்தி  விட்டாலே புலிகளின் சந்தேக குறிக்கு இலக்காக வேண்டிவரும் என்ற மயான பயம்  எங்கும் நிலவிய அந்த கொடூர காலங்கள்(மீள்பதிவு) .



  
No photo description available.

கருத்துகள் இல்லை: