வியாழன், 21 ஆகஸ்ட், 2025

மதுரை நடிகர் விஜய் மாநாடு சுட்டெரிக்கும் வெயில்.. சுருண்டு விழும் பிஞ்சு குழந்தைகள், தொண்டர்கள்- 50 பேருக்கு சிகிச்சை

 மின்னம்பலம்  Mathi  :  மதுரையில் சுட்டெரிக்கும் 97 டிகிரி வெயில்.. சுருண்டு விழும் பிஞ்சு குழந்தைகள், தொண்டர்கள்- 50 பேருக்கு சிகிச்சை
நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நடைபெறும் மதுரையில் வெயில் உக்கிரத்தைக் காட்டி வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் பிஞ்சு குழந்தைகள், தொண்டர்கள் பலர் மயக்கமடைந்தனர். மாநாட்டு வளாகத்தில் உள்ள முதலுதவி மையங்களில் 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மதுரையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ‘சர்ச்சைகளுக்கு’ இடம் தராத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இந்த நிலையில் மதுரையில் வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருக்கிறது. தற்போது மதுரையில் 39 டிகிரி செல்சியஸ் (97 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையால் அனல் வாட்டுகிறது.

முற்பகலிலேயே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் பிஞ்சு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொண்டர்கள் பலர் மயக்கமடைந்தனர்.

மதுரை மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையங்களில் மயக்கமடைந்த 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என நடிகர் விஜய் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: