வெள்ளி, 20 ஜூன், 2025

டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் ஓடும்! இனி சங்கர் எல்லாம் படமெடுக்க முடியாது

Shyam  · ஷங்கர் இனி படமெடுக்க முடியாது 
வேள்பாரிக்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை... ?
ஷங்கர் விஷயத்தில் அலார்ட்டான தயாரிப்பாளர்கள்!
கேம்சேஞ்சர் படத்துக்கு ஒரு வருஷமா எடிட் பண்ணினார்களாம்.
 ஏழரை மணி நேரமாக ஃபுட்டேஜ் கொடுத்தாரு. 
அதை என்னதான் குறைச்சாலும் 3 மணி நேரத்துக்கு மேல குறைக்க முடியல அப்படின்னு அந்தப் படத்தை விட்டே ஷமீர் வேணாம்னு போயிட்டாரு.
அவரு என்ன சொல்றாருன்னா ஷங்கர் பக்கத்துலயே இருந்து இந்த ஆர்டர், அந்த ஆர்டர்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அதனாலயே அவர் அந்தப் படத்தை விட்டுப் போயிட்டாரு. 
அவர் மலையாளத்துலயே 50 படங்களுக்கு மேல பணியாற்றியுள்ளார். 
இப்போ ஸ்பாட் எடிட்டிங் இருக்கு. 
அந்த வகையில் எடிட்டர் ஷமீருக்கு அதெல்லாம் தெரியும். நினைச்சதை எல்லாம் எடுத்துட்டு வந்து கொடுக்காரு. 

எது படம்னே கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லிருக்காரு. 
அவரு சொன்னதுல நியாயம் இருக்குறதா தான் நான் பார்க்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. இது தவிர வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க...
ஒரு இயக்குனரைப் பொருத்தவரைக்கும் அவருக்கு எடிட்டிங் நாலெட்ஜ் வேணும். 
ஒரு விஷயத்தைக் கதையா சொல்றது பெரிய விஷயம் கிடையாது. 
அதை செயலாக்கம் பண்ணிக் கொண்டு வரணும். அவங்களுக்கு எடிட்டிங் நாலெட்ஜ் இருக்கணும்.
இன்னைக்குப் பல இயக்குனர்களுக்கு அந்த எடிட்டிங் நாலெட்ஜே இல்லை. என்ன எடுக்குறோம்? 

எந்தளவுக்கு எடுக்குறோம்? 
எதைப் படத்து வைக்கப் போறோம்? இதோட போதும் அப்படிங்கற நாலெட்ஜ் இல்ல. 
ஷார்ட் பிலிம் எடுத்த இயக்குனருக்கு எந்த அனுபவமுமே இருக்காது. 

எடிட்டிங், டப்பிங், மிக்சிங், டான்ஸ், பைட், டப்பிங்னு 24 கிராப்ட் இருக்கு. அத்தனை பேருக்கிட்டேயும் வேலை வாங்கத் தெரியணும். அவர் தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர்.
கேம் சேஞ்சர் பெரிய தோல்வி. 
ஆனா அந்;தப் புரொடியூசர் தில் ராஜூ பாதிக்கப்பட்டார். 

இந்தியன் 2 படத்தை லைகா தயாரிச்சாங்க. பொருளாதார ரீதியா லைகாவைத் தான் பாதிச்சது. 
இந்த மாதிரி என்ன வேணாலும் எடுக்கலாம். 
ஒருத்தன் பணம் போடுறான்னு சில இயக்குனர்கள் படம் எடுக்குறாங்க.
 அந்த மாதிரி இயக்குனர் தான் ஷங்கர். 
அனுபவம் இருந்தும் ஷங்கர் பிரம்மாண்டத்துல போய் விழுறாரு.

100 கோடிக்கு ஒரு படத்தை முடிக்கலாம்னா 500 கோடியில கொண்டு போய் விடுறாரு. 
45 நாள்ல ஒரு படத்தை எடுக்க வேண்டியதை 250 நாள் படத்தை எடுத்தா எவ்வளவு செலவு ஆகும்? 

ஷங்கரும் அப்படித்தான் எடுக்குறாரு. 
ஷங்கரை வச்சி இனிமே படம் எடுக்க முடியுமான்னா அதுக்கான தயாரிப்பாளர்களே கிடையாது. 

வேள்பாரியை பிரம்மாண்டமா எடுக்கணும்னு நினைக்கிறாரு.
ஆனா அதுக்கான தயாரிப்பாளர்கள் கிடையாது. 
டூரிஸ்ட் ஃபேமிலி படம் உலகளவில் 75 கோடி கலெக்ட் பண்ணிருக்கு. 4 கோடியில எடுத்த படம் இந்தியாவுல 55 கோடி கலெக்ட் பண்ணிருக்கு. 

அதுல சசிக்குமார், சிம்ரன் தான் நடிச்சிருக்காங்க. 
படம் ஜெயிக்கக் காரணம் கன்டன்ட் தான். 
அழுத்தமான கதை. அதனால கன்டன்ட் தான் முக்கியம்.
அப்போ தான் படம் ஜெயிக்கும். 
ஒரு தலை ராகம் டி.ராஜேந்தருக்கு முதல் படம். 
பாலாவுக்கு முதல் படம் சேது படங்களே இதற்குச் சான்று. 
கன்டன்ட்டோடு படம் எடுத்தா ஜெயிக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் டூரிஸ்ட் ஃபேமிலி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: