வியாழன், 12 ஜூன், 2025

அகமதாபாத் விமானவிபத்து சர்வதேச அரசியல், பொருளாதார பின்னடைவுகளை கொண்டுவரக்கூடியது.

 Karthikeyan Fastura :   அகமதாபாத் விமானவிபத்து மிகவும் துயரமானது. இந்தியாவிற்கு சர்வதேச அரசியல், பொருளாதார பின்னடைவுகளை கொண்டுவரக்கூடியது. 
Take-Off ஆகி ஒரு நிமிடத்திற்குள், விமான நிலையத்திற்கு அருகிலேயே 20 மாடி உயரத்திற்கு சென்று நடந்த விபத்து என்பது ஏற்கமுடியாத துயரம். பல சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியது. 
ஒரு விமானத்தை கிளப்பும் முன் பல கட்டங்களில் தொழில்நுட்ப சரிபார்ப்பு இருக்கும். 
Aircraft Inspection என்று பைலட் விமானத்தை முழுமையாக சுற்றிவருவார். ஏதாவது சின்ன பிரச்சனை என்றாலும் அதை சரி செய்யும்வரை நிறுத்தி ஆகவேண்டும். 
Maintenance Checks என்று என்ஜின், த்ரோட், வீல் ஹைட்ராலிக், விங்ஸ் Avionics என்று எல்லாவற்றையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும்.
இவை எல்லாம் முடிந்த பிறகும், பைலட் காக்பிட்டில் System Check, FMS என்று சொல்லக்கூடிய விமான மேலாண்மை அமைப்பை சரி பார்ப்பார்கள்.


விமானம் கிளம்புவதற்கு முன்பும், Checklist இருக்கும். எல்லாவற்றையும் சரிபார்த்த பின்பு தான் விமானம் கிளப்பப்பட வேண்டும். போயிங் 787 மாடல் எல்லாம் பெரிய ரக விமானம். நீண்ட தூர விமானம் என்பதால் நிறைய செக்-லிஸ்ட் இருக்கும். 
இவ்வளவு இருந்தும் கிளம்பிய சில நொடிகளில் இந்த விபத்து என்பது கவனக்குறைவு, அஜாக்கிரதை என்று தான் சொல்லவேண்டும். இந்த விபத்தில் உள்ள கவனக்குறைவை அப்படி எளிதாக மூடிவைத்துவிட முடியாது. பல அமைப்புகள் விசாரணை நடத்துவார்கள். சர்வதேச விமான கண்காணிப்பு அமைப்பு, போயிங் விமான தயாரிப்பு நிறுவனம், பிரிட்டிஷ் விசாரணை குழு, போர்த்துகீசிய விசாரணை குழு, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் விசாரணை என்று பல பக்கங்களில் இருந்து விசாரணை நடக்கும். நம்முடைய அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் Check-listஐ அதிகரிப்பார்கள். நெருக்கடிகள் அதிகரிக்கும்.
பல பன்னாட்டு விமானங்களில் பயணம் செய்த அனுபவத்திலும், பன்னாட்டு விமானங்களில் இருக்கும் நடைமுறைகளை நேரடியாக பார்த்த அனுபத்திலும், எனது தேடலின் உந்துதலில் படித்தவைகளிலும் இருந்து இந்த பதிவினை எழுதுகிறேன். 
நமது விமான நிலையங்கள் இன்னும் சீர்படுத்த வேண்டியவை நிறைய உள்ளது. சர்வதேச மக்களை ஒப்பிடுகையில் அலட்சியங்களும், கவனக்குறைவும் இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியது என்று தோன்றும். அதனை நிரூபிப்பது போல இது நடந்துள்ளது. 
இவை அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு இந்திய மக்களிடையே மட்டுமல்லாமல் சர்வதேச மக்களிடமும் நம்பிக்கையை பெற வேண்டியது மிக மிக அவசியம், அது அவ்வளவு எளிது அல்ல. ஏற்கனவே மோடி அரசு மீது சர்வதேச சமூகத்திற்கு கொஞ்சமும் மரியாதை இல்லை.
ஆனால் இதை செய்ய தவறினால் சர்வதேச சமூகத்துடன் நமக்குள்ள தொடர்பு குறையக்கூடும். சுற்றுலா, வணிகம் எல்லாமும் பாதிக்கப்படும். பொறுத்திருந்து பார்ப்போம் ஒன்றிய அரசு என்ன செய்கின்றது என்று.

கருத்துகள் இல்லை: