சனி, 26 ஆகஸ்ட், 2023

கர்நாடகாவில் மோடியை வரவேற்காத கர்நாடக முதல்வர் ... மோடிக்கு முன்பே இஸ்ரோ விஞானிகளை பாராட்டி விட்ட கோபமாம் மோடிக்கு

tamil.oneindia.com - Nantha Kumar R : பெங்களூர்: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய நிலையில் இன்று பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து பாராட்டினார்.
அப்போது பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட யாரும் செல்லவில்லை.
இது விவாதத்தை கிளப்பிய நிலையில் அதன் பின்னணியில் பிரதமர் மோடி சொன்ன ஒற்றை வார்த்தை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்படி பிரதமர் மோடி என்ன சொன்னார்? ஏன் பிரதமர் மோடியை வரவேற்க அவர்கள் 3 பேரும் செல்லவில்லை என்பது பற்றிய விபரம் வருமாறு:


நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையடுத்து திட்டமிட்டப்படி கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ல் பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இருந்தார். இதனால் அவர் அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலம் தரையிறங்கும் நிகழ்ச்சியை பார்த்து விஞ்ஞானிகளை பாராட்டினார். தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று காலை நேரடியாக பெங்களூரில் வந்து இறங்கினார்.

பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டு மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து பிரதமர் மோடி பாராட்டினார். முன்னதாக பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடகா முதல்வர் (காங்கிரஸ்) சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள் என யாரும் வரவேற்கவில்லை. அதாவது பொதுவாக ஜனாதிபதி, பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வந்தால் அவர்களை ஆளுநர் மற்றும் அங்கு ஆட்சி செய்யும் அரசு சார்பில் வரவேற்க வேண்டும் என்பது புரோட்டோகாலாகும்.

ஆனால் இன்று பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. இதனால் திட்டமிட்டே பிரதமர் மோடியை அவர்கள் புறக்கணித்தார்களா? என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் முதல்வர், துணை முதல்வர் காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் புறக்கணிக்க அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஏன் புறக்கணித்தார்? என்ற கேள்விகள் எழுந்தன. மேலும் இது விவாதத்தையும் கிளப்பியது.

இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடியே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பெங்களூரில் கூறுகையில், ‛‛நான் வெளிநாட்டில் இருந்து கிளம்பியதால் எந்த நேரத்தில் பெங்களூர் வருவேன் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் என்னை வரவேற்பதற்காக காத்திருக்க வேண்டாம் என முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டேன்'' என தெரிவித்தார்.

இதுபற்றி துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறும்போது, ‛‛நாங்கள் பிரதமர் மோடியை வரவேற்க தயாராக இருந்தோம். நானும், முதல்வரும் எந்த நேரத்திலும் பிரதமர் மோடியை வரவேற்க ஆயத்தமாக இரந்தோம். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு தகவல் கிடைத்தது. அதற்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். இதனால் விமான நிலையம் செய்யவில்லை'' என்றார்.

இருப்பினும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் முதல்வர் வரவேற்க தடை விதித்துள்ளதாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தனக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளார். இதனால் வரவேற்க வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இது நெறிமுறைகளுக்கு எதிரானது. இதன் பின்னணியில் அற்பமான அரசியல் இருக்கிறதே தவிர வேறு எதுவும் இல்லை.

நிலவில் கால் பதித்த சந்திரயான் 3.. ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம்.. பிரதமர் மோடி அறிவிப்பு நிலவில் கால் பதித்த சந்திரயான் 3.. ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினம்.. பிரதமர் மோடி அறிவிப்பு

உதாரணமாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த நேரத்தில் சந்திரயான் I திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அப்போது 2008 அக்டோபர் 22ம் தேதி அகமதாபாத்தில் உள்ள விண்வெளி மையத்துக்கு குஜராத் முதல்வராக இருந்த மோடி சென்றார். இதனை பிரதமர் மோடி மறந்துவிட்டாரா?'' என சாடியுள்ளார்

கருத்துகள் இல்லை: