ஞாயிறு, 16 ஜூலை, 2023

ராஜ்யசபா எம்பியாகும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை? . ராஜஸ்தானில் இருந்து?

tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் ராஜ்யசபா எம்பியாக தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அவர் எந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாக உள்ளார்? என்பது பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை.
தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்த அண்ணாமலைக்கு குறுகிய காலத்திலேயே மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது


தற்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

மேலும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்து வருகிறார். சமீபத்தில் அவர் திமுக பைல்ஸ் என்ற பெயரில் அக்கட்சியின் பிரமுகர்களின் சொத்து மதிப்பு என பல விபரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ஆளும் கட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜக அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

அதன்படி வரும் 28ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படும் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை இந்த பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார்.

இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் அண்ணாமலைக்கு இந்த பதவியை கிப்ட்டாக வழங்கி மேலும் உற்சாகப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்த மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. பாஜகவுக்கு மொத்தம் 73 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அங்கிருந்து அண்ணாமலை ராஜ்யசபா எம்பியாக தேர்வாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது அண்ணாமலையின் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் மனதை கவர முடியும் என பாஜக நம்புகிறது. தமிழகத்தில் பாஜக தலைவர்களாக இருந்த இல கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் வேற லெவல் யோசனை.. மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வித்துறை சிறப்பான உத்தரவு இதெல்லாம் வேற லெவல் யோசனை.. மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வித்துறை சிறப்பான உத்தரவு

மேலும் எல் முருகன் ராஜ்யசபா எம்பியாக இருப்பதோடு மத்திய இணையமைச்சராகவும் உள்ளார். அந்த வரிசையில் அண்ணாமலைக்கும் ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவதன் மூலம் தமிழக வாக்காளர்களின் மனதை கவரலாம் என பாஜக கணக்கீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Reports have surfaced that Tamil Nadu BJP state president Annamalai will soon be selected as a Rajya Sabha MP. And from which state is he elected to Rajya Sabha? Important information about is now out

கருத்துகள் இல்லை: