திங்கள், 17 ஜூலை, 2023

பாகிஸ்தானில் 150 ஆண்டு பழமையான இந்து கோவில் இடித்து தகர்க்கப்பட்டது!

hirunews.lk : பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று காணப்பட்டது.
இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர்.
மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், கோவிலை இடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டுள்ளது.

எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயில் இடிக்கப்படவில்லை.
அந்த பகுதியில் உள்ள பழமையான மற்றொரு கோவிலான ஸ்ரீபஞ்சமுக அனுமன் கோவிலை சேர்ந்த ஸ்ரீராம் நாத் மிஷ்ரா மகராஜ் இதுபற்றி கூறும்போது, இது மிக பழமையான கோவில். 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இந்த பகுதியில், மிக பழமையான பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் நாங்கள் கேள்விப்பட்டு உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
 

கருத்துகள் இல்லை: