ஞாயிறு, 13 நவம்பர், 2022
தந்தை பெரியாரை ன 1927 முதலே பெரியார் என அழைத்தனர்! ஆதார பூர்வமான செய்தி
சிவசங்கரன் சுந்தரராசன் : பெரியார் பட்டம் 1938ல் வழங்கப்படவில்லை. 1928 முதலே அப்படி அழைக்கப்படுகிறார் என்பதற்கு ஆதாரம் 1929ல் வெளியிடப்பட்ட
ஈ.வெ. ராமசாமி பெரியாரவர்களின் பொன்மொழிகள்* நூல்.
Thirunavukarasan Manoranjitham : வைக்கம் போராட்ட காலத்திலேயே ( 1924 ) திரு வி க அவரது நவசக்தி இதழில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று எழுதியிருக்கிறார்.
சிவசங்கரன் சுந்தரராசன் : தற்போது புதிதாக நீல கோஷ்டியினர் பெரியார் என்ற பட்டம் வழங்கிய மீனாம்பாள் சிவராமன் பெயரை திராவிடவாதிகள் மறைக்கிறார்கள் ஈ.வெ.ராமசாமியை பெரியார் என மாற்றிவரையே மறைக்கிறார்கள் என இரண்டு மூன்றாண்டுகளாக உருட்டுகிறார்கள்.
Thirunavukarasan Manoranjitham : இனி எல்லோரும் பெரியார் என்றே அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அந்த மாநாட்டில்தான்.
அதை திராவிடர் இயக்கத்தினர் யாரும் மறைக்கவில்லை.
சிவசங்கரன் சுந்தரராசன் : அந்த தீர்மானத்தை கொண்டுவந்த மீனாம்பாள் அவர்களை மறைக்கிறார்களாம். 1927ல் முதன் முதலாக நாயக்கர் பட்டத்தை பெரியார் துறந்தவுடன் நாகர்கோவில் சாமி சிதம்பரனார் அவர்கள் 1927 முதலே ஈ.வே.ராமசாமிபெரியார் என அழைத்து வந்தார் என்பதே வரலாறு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக