tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : லண்டன்: போரிஸ் ஜான்சனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் சில நாட்களிலேயே பதவி விலகிய நிலையில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்று பிரிட்டன் பிரதமராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, பிரிட்டன் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட அவர், லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்தார். அதிக எம்.பிக்கள் ஆதரவு இருந்த காரணத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் டிரஸ்.
லிஸ் டிரஸ் ராஜினாமா.. கட்சியை காப்பாற்ற ரிஷி சுனக் உதவியை நாடும் போரிஸ்! இங்கிலாந்து நிலை மாறுமா? லிஸ் டிரஸ் ராஜினாமா.. கட்சியை காப்பாற்ற ரிஷி சுனக் உதவியை நாடும் போரிஸ்! இங்கிலாந்து நிலை மாறுமா?
ரிஷி சுனக்
இந்த சூழலில் பிரிட்டனின் பொருளாதார நெருக்கடியை தன்னால் கையாள முடியவில்லை என்று கூறி பிரதமர் பதவியை கடந்த சில நாட்களுக்கு முன் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தன்னை முறைப்படி பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார்.
பொரு“பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்.” என்று ரிஷி சுனக் அறிவித்தார். ளாதார நெருக்கடி
பொரு“பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்.” என்று ரிஷி சுனக் அறிவித்தார். ளாதார நெருக்கடி
"பிரிட்டன் சிறந்த நாடு. நாம் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். பிரிட்டனின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியுடைய தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் நிற்கிறேன்." என்று ரிஷி சுனக் அறிவித்தார்.
போரிஸ் ஜான்சன்
இதற்கிடையே பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால், அவருக்கு ரிஷி சுனக்கை விட குறைவாக 59 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. மற்றொரு போட்டியாளரான பென்னி மோர்டாண்டுக்கு 29 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.
100 எம்பிக்கள்
இன்று போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மோர்டாண்ட் 100 எம்பிக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதை காட்டாவிட்டால் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு விடுவார். கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்பிக்கள் உள்ளனர். இந்த பிரதமர் தேர்தலில் போட்டியிட 100 எம்பிக்கள் ஆதரவு வேண்டும்.
மும்முனை போட்டி
ஒருவேளை போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி ஆகியோருக்கு 100 எம்பிக்களின் ஆதரவு கிடைத்து மும்முனை போட்டி ஏற்படும் சூழல் உருவானால் 1.7 லட்சம் டோரி உறுப்பினர்களிடம் ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 2 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் தேர்வு செய்யப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக