வியாழன், 16 ஜூன், 2022

குடியரசு தலைவர் தேர்தல்.. சரத் பவார் மறுப்பு ! மம்தா கூட்டத்தில் திடீர் சலசலப்பு! நடந்தது என்ன

  Vigneshkumar  -    Oneindia Tamil News  :  டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது.
நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறத் தேவையான வாக்குகள் கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. இதற்கிடையே அனைத்து எதிர்க்கட்சிகளும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனையில் இறங்கி உள்ளது


3 பேர் குழு அமைப்பு... எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார்... டி.ஆர்.பாலு பரபரப்பு..!3 பேர் குழு அமைப்பு... எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார்... டி.ஆர்.பாலு பரபரப்பு..!
1 இது தொடர்பாக நேற்றைய தினம் டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்ட மாநாடும் நடைபெற்றது. ஐந்து முக்கிய கட்சிகள் இல்லாமல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நேற்று திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

2 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது மட்டுமே இதன் ஒரே நோக்கமாக இருந்தது. இருப்பினும், கூட்டத்தில் மம்தா திடீரென தீர்மானம் ஒன்றை முன்மொழிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

3 அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டில் நடைபெறும் புல்டோசர் நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகத் தெரிவித்தார்.
4 நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், கூட்டத்தில் 16 கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். வரும் ஜூன் 21ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு பொது வேட்பாளரை இறுதி செய்யும் பொறுப்பு மம்தா, சரத்பவார், மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

5 முதலில் 81 வயதான சரத் பவார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மம்தா பானர்ஜி இதை முன்மொழிந்த நிலையில், சரத் பவார் இதனை நிராகரித்தார். அதைத் தொடர்ந்து சில பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் கோபால் காந்தி மற்றும் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரின் பெயர்களும் ஆலோசனையில் இடம் பெற்றது.

6 இதுகுறித்து சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எனது பெயரைப் பரிந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களை நான் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். இருப்பினும் நான் பணிவுடன் மறுத்துவிட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்,

7 திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவு சரத் பவாருக்கு இருந்தது. இது குறித்து மம்தா கூறுகையில் "சரத் பவார் ஒப்புக்கொண்டால், அனைவரும் அவருக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால் பவார் ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் விவாதிப்போம்" என்றார்.

8 அதேபோல திரிணாமுல் கட்சியின் டெரெக் ஓ பிரையன், "மொத்தம் 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டு வேட்பாளராகக் களமிறக்கும். (அந்த எண்ணிக்கை 20ஆக கூட மாறலாம்).. இது ஒரு நல்ல நாள்" என்று பதிவிட்டுள்ளார்.

9 இந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் போட்டியாகக் கருதப்பட்ட காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கலந்து கொண்டன. அதேநேரம் ​​ தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் போன்ற தலைவர்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்

10 அதேபோல காங்கிரஸ் இருப்பதால் அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) கூட்டத்தில் பங்கேற்கவில்லை. விலகியுள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே இந்த விவகாரம் குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது. "காங்கிரஸுடன் எந்த நிலையிலும் இணையப் போவது இல்லை" என்று டிஆர்எஸ் கூறியது

கருத்துகள் இல்லை: