ஞாயிறு, 2 ஜனவரி, 2022

தமிழக எம்பிக்களை அமித் ஷா சந்திக்க மறுத்தது ஏன்? டி.ஆர்.பாலு விளக்கம்!

 Vishnupriya R  -   Oneindia Tamil :  டெல்லி: தமிழக எம்பிக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததில் எந்த அரசியலும் இல்லை என எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சருக்கு ஆதரவாக திமுக எம்பி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் இப்படிப்பட்ட நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது பரிசீலனையில் உள்ளது.
இதனிடையே அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் எம்பிக்கள் என தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முயன்றனர்.
கொரோனா புரோட்டோகாலை காரணம் காட்டி அவரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


இதனால் அவரது செயலாளரிடம் மனுவை தமிழக எம்பிக்கள் கொடுத்துவிட்டு திரும்பினர்.

'ஓமிக்ரான் வைரஸ்: 3ஆம் அலை உறுதி, உடனடி நடவடிக்கை தேவை..' முதல்வருக்கு ரவிக்குமார் எம்பி பரபர கடிதம்
தமிழக எம்பிக்கள் தமிழக எம்பிக்கள் சரி உள் துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் கடந்த செவ்வாய்க்கிழமை சந்திக்க நேரம் கேட்டு பெறப்பட்டது.

இதனடிப்படையில் தமிழக எம்பிக்கள் கூட்டாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் இல்லை. அவர் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து 2 மணி நேரம் காத்திருந்துவிட்டு அமித்ஷா வராததால் தமிழக எம்பிக்கள் திரும்பிவிட்டனர். பின்னர் அமித்ஷா, அலுவலகத்திற்கு வந்துள்ளதை அறிந்து கொண்டு அவரை சந்திக்க மீண்டும் சென்றனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். தமிழக எம்பிக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க எந்தவித முறையான காரணமும் கூறவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை நேரம் கேட்ட போது அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனினும் அப்பாயிண்ட்மென்ட் இல்லாமல் அமித்ஷா அலுவலகத்திற்கு சென்றனர்.
எனினும் அங்கிருந்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழக எம்பிக்களை உள்ளே விட மறுத்ததாக தெரிகிறது.

 இதையடுத்து டிஆர் பாலு, அமைச்சர் அமித்ஷாவுக்கு தொலைபேசியில் பேசியும் அவர் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்.

மக்களின் பிரச்சினைக்காக சென்ற தமிழக எம்பிக்களுக்கு நேரம் கொடுக்காமல் இப்படி அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக எம்பிக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததில் அரசியல் எதுவும் இல்லை என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 28ஆம் தேதி குடியரசு தலைவர் அலுவலகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோர மனு அளித்திருந்தோம்.
அது உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவிட்டதாக அன்று இரவே எங்களுக்கு பதில் வந்தது.
அதனால்தான் அமித்ஷாவின் அலுவலகத்திற்கு சென்று காத்திருந்தோம்.
அவருடன் சந்திப்பு நடத்துவதற்கான நேரத்தை பிறகு ஒதுக்கித் தருவதாக அமித்ஷாவின் உதவியாளர் தெரிவித்தார்.

எனவே அவர் நிச்சயம் எங்களுக்கு நேரம் ஒதுக்குவார். பிரச்சினை பிரச்சினை உள்துறை அமைச்சருக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கும். நானும் அமைச்சராக இருந்தவன்தான். நிமிடத்திற்கு நிமிடம் அலுவல்கள் மாறும். எனினும் சந்திப்புக்கான அடுத்த நேரத்தை சொல்லியிருக்க வேண்டும்.
இன்னும் சொல்லவில்லை. இதில் அரசியல் ரீதியாக எதுவும் இல்லை என்றார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டும் அவர் சந்திக்காமல் அலைக்கழித்துள்ளார். ஆனால் டிஆர் பாலுவோ மத்திய அமைச்சருக்கு ஆதரவாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: