வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தெலுங்கானா வக்கீல் தம்பதி படுகொலை : சந்தேக வலையில் ஆளும் கட்சி பிரமுகர் TRS தலைவரான குந்தா சீனிவாஸ்

  tamil.indianexpress.com : தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வக்கீல் தம்பதி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்த தம்பதி ஜி. வாமன் ராவ் (52) மற்றும் ஜி நாகமணி (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பெடப்பள்ளி மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென காரை வழிமறித்த மர்மநபர்கள் தம்பதி இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நாகமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது கணவர், வாமன் ராவ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் 108 ஆம்புன்சில் அவரை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்நதார். இந்த படுகொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவை உலுக்கிய இந்த படுகொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முன்பே அறிந்த வக்கீல் தம்பதி  ஐந்து மாதங்களுக்கு முன்பே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வாமன் ராவ் நாகமணி தம்பதி சிறப்பான சமூக பணியாற்றியதற்காக பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்துள்ள தம்பதி, சில உள்ளூர் அரசியல் தலைவர்கள் மீது “சந்தேகத்திற்கிடமான” நில ஒப்பந்தங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் பல  புகார்களையும் பதிவு செய்திருந்ததாக அவரது நண்பர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரைலாகி வரும் வீடியோ பதிவு ஒன்றில், காயமடைந்த வாமன் ராவ் தங்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளூர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவரான குந்தா சீனிவாஸ் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வாமன் ராவின் தந்தை ஜி கிஷன் ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், ராஷ்டிர சமிதி கட்சி, மந்தனி  பிரிவின் தலைவர் சீனிவாஸ் மற்றும் வேல்டி வசந்த ராவ் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராமகிரி காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மூன்றாவது சந்தேக நபராக அக்கபகா குமார் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாமன் ராவின் தந்தை கிஷன்ராவ் அளித்த புகார் மனுவில், தனது மகனும் மருமகளும் “சட்டவிரோத” நில ஒப்பந்தங்களை அமல்படுத்தியவர்கள் மீது அளித்த புகார் காரணமாக படுகொலை செய்யப்பட்டதாகவும், குஞ்சபாதுகு கிராமத்தில் கோவில் நிலத்தில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வாமன் ராவ் மற்றும் நாகமணி ஆட்சேபனை தெரிவித்து அவர்கள் மீது புகார் அளித்தனர். இந்த வீடுகட்டும் பின்னணியில், சீனிவாஸ் இருப்பதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக  கிஷன் ராவ், மேலும் கூறுகையில், நில அபகரிப்பு குற்றச்சாட்டில் உள்ளூர் ரியல் எஸ்டேட் உரிமையளர்கள் மற்றும் பிரமோட்டர்கள் மீது தனது மகன் பல புகார்களை பதிவு செய்துள்ளார். இதில் முக்கியமாக ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த  மூன்று  நபர்களுக்கு தொடர்பு இருக்கிறது.

இது குறித்து ராமகுண்டம் போலீஸ் கமிஷனருக்கு நான் அளித்த புகாரில் மூன்று பேரை குறிப்பிட்டுள்ளேன். இந்த தாக்குதலுக்கு பின்னால் அவர்கள் மூவரும் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன், ”என்று அவர் கூறினார். மேலும் திடீரென காணாமல் போன நபர்களை பற்றி புகார் அளிக்க “எனது மகன் மக்களுக்கு உதவினார். இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்வார். எங்கள் பகுதியில், நில அபகரிப்பு அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அவர் அறிந்தால் அவர் அமைதியாக இருக்க மாட்டார் என்று கூறியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு, தனது மாமாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறிய ஒரு சிறுமியை மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு அழைத்துச்  சென்ற வாமன்ராவ், அவர் அளித்த புகாரை போலீசார் தீவிரமாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் சந்தேகத்திற்கிடமான நில ஒப்பந்தங்கள் தொடர்பாக சில உள்ளூர் அரசியல் தலைவர்கள் மீது வாமன் ராவ் போலீசில் பல புகார்களை பதிவு செய்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாக அவர் போலீசாரை எச்சரித்திருந்தார், ”என்று தம்பதியரின் நண்பர் வழக்கறிஞர் ஹரிஷ் சந்திரா கூறினார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு சுய நோட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள தெலுங்கானா உயர் நீதிமன்றம் இந்த கொலைகள் வைரலாகும் அனைத்து வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்து அவற்றை ஆதாரமாக பாதுகாக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  பல சந்தேக நபர்களின் மொமைபல் அழைப்பு தரவு பதிவுகள் ஆராய்ந்து வருவதாக ராமகுண்டம் போலீஸ் கமிஷனர் வி சத்தியநாராயண தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: