Vishnupriya R - tamil.oneindia.com :
சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த
இருவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அவர்களில்
ஒருவருக்கான பதவி உறுதியாகிவிட்டது. இன்னொருவருக்கான பதவி குறித்து
பிரதமரிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக ஒரே ஒரு இடத்தில்
மட்டுமே வெற்றி பெற்றது. அந்த ஒருவர் ஓ பி எஸ் மகன் ரவீந்திரநாத் ஆவார்.
இவர் வேட்புமனு தாக்கல் செய்த போதே கல்வெட்டில் இவரது பெயர் பதிப்பு என
கிட்டதட்ட வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இதை வைத்து தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுகுறித்து டெல்லி சென்று
பேச்சுவார்த்தையும் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பலன்
கிடைக்கவில்லை
ஐக்கிய ஜனதா தளம்
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் அதில் அதிமுக,
ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவும் பாஜக முடிவு
செய்துள்ளது. பொதுவாக 80 பேர் வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம். ஆனால்
தற்போதோ 53 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர்.அதிமுக
சிலர் கூடுதல் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்கள். இதனால்
புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் நிர்வாகம் நடத்த எளிதாக இருக்கும்
என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாம். இரு கட்சிகளுக்கும் தலா இரு
இடங்களை கொடுக்க முடிவு செய்துள்ளதாம். அந்தப் பதவிகளுக்கான பெயர்களை
பரிந்துரை செய்யுமாறு பாஜக, அதிமுகவிடமும் நிதிஷ் கட்சியிடமும்
கேட்டிருந்தது.
தம்பிதுரை
அதன்படி ஒரு பதவியை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு கொடுப்பது என்று முடிவு
செய்யப்பட்டது. மற்றொரு பதவியை தம்பிதுரைக்கு கொடுக்கவுள்ளது. ஆனால்
பாஜகவை சில நேரத்தில் தம்பிதுரை விமர்சித்ததால் அவர் மீது மோடி
அதிருப்தியில் உள்ளதால் இந்த பரிந்துரையை ஏற்க மாட்டார் என தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் பதவி
நவநீத கிருஷ்ணனுக்கு கொடுக்கலாம் என்றால் அவரை விட நீண்ட காலமாக தம்பிதுரை
பாஜகவில் இருந்து வருகிறார். அதனால் அவரை விட்டுவிட்டு நவநீத கிருஷ்ணனுக்கு
கொடுக்க அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒப்புக் கொள்ளவில்லையாம். இதனால்
தம்பிதுரைக்கு அமைச்சர் பதவி கொடுக்க பிரதமர் மோடியிடம் இன்றைய தினம்
ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த
இரு ஆண்டுகளாக இலவு காத்த கிளியாக இருந்த மத்திய அமைச்சர் கனவு தற்போது
பலிக்க போவதை எண்ணி ரவீந்திரநாத் பூரிப்பில் உள்ளாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக