இதனால் திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், சீமான், கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோர் தனியாகவும் போட்டியிடுகின்றனர். அதிமுக அணியில் உள்ள பாஜக முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறது.
நோட்டாவிற்கு கீழ் ஒட்டு வாங்கிய கட்சி என்று சக அரசியல் கட்சிகள்
விமர்சித்து வந்ததை மாற்றி காட்டுகிறோம் என்று களம் இறங்கியுள்ள பாஜக
பல்வேறு பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்துள்ளது. ஏராளமான அரசியல்
தலைவர்களும், கிளை மட்ட அளவில் பல கட்சிகளின் நிர்வாகிகளும் பாஜகவில்
இணைந்துள்ளனர். ஒவ்வாரு வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் அளவுக்கு
பாஜக வலிமை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
30 தொகுதி
பாஜக இந்த முறை அதிமுவிடம் அதிக தொகுதிகள் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
30 தொகுதிகளில் பாஜக இந்த முறை போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும்
சொல்லப்படுகிறது. தமிழகத்திற்கு பல்வேறு மத்திய அமைச்சர்கள் அடிக்கடி வந்து
இப்போதே பிரச்சாரம் செய்ய துவங்கிவிட்டனர். பிரதமர் மோடியே நாளை தமிழகம்
வர உள்ளார்.
குஷ்பு பிரச்சாரம்
இந்நிலையில், திருவல்லிக்கேணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது
செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, தமிழகத்தின் நண்பர் பிரதமர் மோடி
மற்றும் பாஜக எனவும் தமிழகத்திற்கு எதிரி காங்கிரஸ் மற்றும் திமுக என
தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக