வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

PetrolPriceHike பெட்ரோல்விலை ! எதிர்கட்சிகள் எப்போது மக்களுக்காக வாய் திறப்பார்கள்? எப்போது போராடுவார்கள்?

Karthikeyan Fastura  : சண்டை பழகலாம் வாங்க என்று Startup Business வகுப்பு எடுக்கும்போது ஒரு பொருளின்/சேவையின் விலை நிர்ணயிப்பது பற்றி நான் இவ்வாறு கூறுவேன்.
உங்களின் பொருளின்/சேவையின் விலை என்பது கைக்கு எட்டும் உயரத்தில் வாடிக்கையாளர் கண்ணின் உயரத்திற்கு இருக்கவேண்டும்.
தரையில் கிடக்கவும் வேண்டியதில்லை. கைக்கு எட்டாத உயரத்திலும் இருக்க கூடாது.
கையை எட்டி பிடிக்கும்படி இருந்தாலோ, தாவி பிடிக்கும்படி இருந்தாலோ என்னதான் சிறப்பான பொருளாக இருந்தாலும் தேவையான பொருளாக இருந்தாலும் சரியான விலையாக இருக்க முடியாது என்பேன்
பெட்ரோல் விலை இன்று 92 ரூபாய்க்கு வந்திருக்கிறது. கேஸ் சிலிண்டரின் விலையில் மானியத்தையும் ரத்து செய்தும் ரூபாய் 785க்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இது உண்மையிலேயே சரியான விலைதானா என்றால் நிச்சயம் இல்லை. பொருளாதார சுமையை அவரவர் பொருளாதார வளத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்காமல் பொதுமக்களின் தலையில் மட்டுமே சுமத்தியுள்ளது அரசு. கோவிட் பிரச்சனையால் மக்கள் அவதியுறும்போது பெருநிறுவனங்கள் அதன் முதலாளிகள் நல்ல லாபம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான முதலீடு தங்குதடையில்லாமல் வருகிறது. 
அதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் செய்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு என்று சொல்லி வெளிநாட்டு நிறுவனங்கள் வழியாக கிட்டத்தட்ட ஒன்னரை லட்சம் கோடிகள் முதலீடு வாங்கியபோது அதை ஸ்டார்ட்அப் என்று கணக்குகாட்டி கிட்டத்தட்ட 15000 கோடிகள் வரி தள்ளுபடி பெற்றது.
பெரிய Corporate நிறுவனங்களுக்கு Covid Cess கொண்டுவரப்படலாம் என்று இந்த பட்ஜெட்டில் எதிர்பாத்திருக்க மாறாக பெட்ரோலில் செஸ் வரியை கொண்டுவந்தார்கள்.
பெட்ரோல் விலை நிர்ணயிப்பதில் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு Fixed Cost வைக்காமல் Percentage அடிப்படையில் கொடுப்பதால் விலை ஏறும்போதெல்லாம் பெட்ரோலிய நிறுவனங்கள் செம லாபம் பார்க்கிறார்கள். இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பெட்ரோலிய சுத்திகரிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் உள்ளதால் அவர்களின் லாபம் கொஞ்சமும் குறையாமல் வைத்திருக்கிறார்கள். சாமானியர்கள் பாடு தான் பெரும் தின்டாட்டத்தில் இருக்கிறது.
இதை கேள்வி கேட்கவேண்டிய அரசியல்வாதிகளும் ஐந்து மாநிலங்களின் தேர்தல் மும்முரத்தில் இருப்பதால் வாயே திறக்காமல் இருக்கிறார்கள்.
உண்மையில் பெட்ரோல் விலை எவ்வளவு இருக்கலாம்?
ரஷ்யாவின் கரன்சி மதிப்பும், நமது கரன்சி மதிப்பும் கிட்டத்தட்ட ஒன்று தான். இன்னமும் சொல்லப்போனால் நம்மை விட அவர்களின் கரன்சி மதிப்பு குறைவு தான்.
1USD = 72.64 rupee
1USD = 73.28 Rubble
தங்கத்தை போலவே குருடாயில் விலையும் சர்வதேச அளவில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இன்றைய குருடாயில் விலை 60.55 டாலர்.
அங்கே 1 Liter Petrol = 46 ரூபாய் (அனைத்து வரிகளையும் சேர்த்து)
இங்கே 1 Liter Petrol = 92 ரூபாய்
அப்படியென்றால் இது யாருக்கான அரசு?
நமது எதிர்கட்சிகள் எல்லாம் எப்போது மக்களுக்காக வாய் திறப்பார்கள்? எப்போது போராடுவார்கள்?

 

கருத்துகள் இல்லை: