திங்கள், 23 மே, 2016

1,400 ஏ.டி.எம்களில் கொள்ளை- 100 கொள்ளையர்களின் கைவரிசை

1.4 bil. yen stolen from 1,400 convenience store ATMs across Japan ...
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்ளையில் ஈடுபட்ட ஏறக்குறைய 100 கொள்ளையரை அடையாளம் காண ஜப்பான் காவல்துறையினர் முயன்று வருகின்றனர். இதற்காக அவர்கள் பல மணி நேர பாதுகாப்பு கேமரா பட பதிவுகளை பார்த்து ஆராய்ந்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் ஸ்டாண்டெர்டு வங்கியிலிருந்து திருடிய தகவல்களை வைத்து மூன்று மணிநேரத்திற்கு குறைவான காலஅளவில் இவர்கள் 13 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர். போலியான கடன் அட்டைகளை பயன்படுத்தி ஜப்பானிலுள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு உள்ளே இருக்கும் 1400 பணம் வழங்கும் இயந்திரங்களிலிருந்து இவ்வளவு பணத்தையும் அவர்கள் எடுத்துள்ளனர். இந்த பணம் வழங்கும் இயந்திரங்களில் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை வசதி இருந்ததால் தான் அவற்றிலிருந்து கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: