வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

இராக்கிய யசிடி மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் .

ஈராக்கில் பூர்வீக பழங்குடியினரை தீவிரவாதிகள் மதம் மாற்றும் நிகழ்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக்கில் அரசுக்கு எதிராக போரிடும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் மொசூல், திக்ரிக் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களை பிடித்துள்ளனர். சிரியாவில் பிடித்த பகுதிகளையும் இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.
குர்தீஸ்தானில் சில நகரங்களையும் கைப்பற்றியுள்னர். அங்கு மைனாரிட்டி ஆக வாழும் யாஷிடி மற்றும் கிறிஸ்தவர்களை கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற வலியுறுத்தினர். மறுத்தவர்களை கொலை செய்வதாக மிரட்டினர். எனவே அவர்கள் அங்கிருந்து வெளியேறி சிஞ்சார் மலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். பசி, பட்டினியால் செத்து மடிகின்றனர்.
இதற்கிடையே உயிர் பிழைக்க அஞ்சி நூற்றுக்கணக்கான யாஷிடி இன பூர்வீக குடிமக்கள் அங்கு மதம் மாறி வருகின்றனர். அதற்கான வீடியோ காட்சிகளை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இந்த யசிடி மக்கள் மயில்  உருவத்தில்  தங்கள் கடவுளை வழிபடுகின்றனர் .தவசி மயில் என்பதே அவர்களின் கடவுள் பெயர் . இவர்கள் முருகனைதான்வழிபடுகிறார்கள்என்பதில் சந்தேகமேஇலை 

2 தீவிரவாதிகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் நிற்கின்றனர். அவர்களுடன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் முன்னிலையில் தீவிரவாதிகள் பேட்டி அளிக்கின்றனர்.
அதில் இவர்கள் அனைவரும் மதம் மாறிவிட்டனர். தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். மற்ற யாஷிடி இன மக்களுக்கு அறிவுரை கூற விரும்புகிறோம். மலையில் தங்கியிருக்கும் அவர்கள் கீழே இறங்கி வந்து மதம் மாற வேண்டும்.
தொடர்ந்து மலையில் தங்கியிருந்தால் பசி மற்றும் தாகத்தால் செத்து மடிவார்கள். அவர்களுக்கு மேலை நாடுகள் உதவி செய்வார்கள் என்பதெல்லாம் பொய். அவர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்வோம் என தெரிவிப்பதுபோல் வீடியோ காட்சிகள் உள்ளன.
மேலும் அந்த வீடியோவில், சுமார் 100–க்கும் மேற்பட்ட யாஷிடி மக்கள் பஸ்கள் மற்றும் லாரிகளில் இருந்து இறங்குகின்றனர். தீவிரவாதிகளுடன் கட்டிப்பிடித்து வாழ்த்துகளை பரிமாறுகின்றனர். பலர் பள்ளி ஒன்றில் அமர்ந்துள்ளனர்.
இளைஞர்கள் மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்களிடம் நீங்கள் எங்கள் இனத்தை சேர்ந்தவர்களாகிவிட்டீர்கள். உங்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என தீவிரவாதிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: