திட்டக்குழுவிற்கு பதிலாக புதிய அமைப்பை தொடங்குவது குறித்து பொதுமக்களிடம்
கருத்து கேட்கும் வகையில் மத்திய அரசு ஒரு பொது வெளியை உருவாக்கியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
"திட்டக்குழுவிற்கு மாற்றாக உருவாக்கப்படும் புதிய அமைப்பு எத்தகையதாக
இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் கருத்துகளை அறிய
எனது அரசு ஆவலாக இருக்கிறது. இங்கே பகிரப்பட்டுள்ள இணைய லிங்கில் உங்கள்
கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். மேலும்,
http://www.mygov.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக கருத்துகளை பகிர்ந்து
கொள்ளுமாறு, இணைய முகவரியையும் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் 68-வது சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர்
நரேந்திர மோடி, திட்டக் குழுவைக் கலைக்கப்போவதாக அறிவித்தார். 21-ம்
நூற்றாண்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய அமைப்பு
உருவாக்கப்படும் என அவர் கூறியிருந்தார்./tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக