செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

2,000 கோடிக்கு 90 லட்சம் இலவசபொருட்கள் சட்ட சபை தேர்தலுக்குள் 2 Years வினியோகம் சாத்தியமா?

சென்னை:சட்டசபை தேர்தலுக்கு, இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், 2,000 கோடி ரூபாய்க்கு, 90 லட்சம் இலவச பொருட்கள் கொள்முதல் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், இலவச அரிசி பெற தகுதி உடைய, 1.85 கோடி ரேஷன் கார்டுதாரருக்கு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை இலவசமாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி, 2011 12ல், 25 லட்சம்; 2012 13ல், 35 லட்சம்; 2013 14ல், 35 லட்சம் என, மொத்தம், 95 மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை வினியோகம் செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், இலவச பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, வருவாய் துறை வாயிலாக, வினியோகம் செய்யப்படுகிறது.  2000 கோடி என்னங்க? 20000 கோடி கூட விநியோகம் பண்ணலாமுங்க. இருக்கவே இருக்காரு பிரவீன் குமாரு. அவரு கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நிம்மதியா இருங்க. 144 தடை போட்டு எப்படி பைசல் பண்றாருன்னு பாருங்க.


நடப்பாண்டு, 45 லட்சம்; அடுத்த, 2015 16ல், 45 லட்சம் என, மொத்தம், 90 லட்சம் இலவச பொருட்கள் கொள்முதல் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால், இலவச பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான, 'டெண்டர்' உள்ளிட்ட எந்த பணிகளையும், வாணிப கழக அதிகாரிகள், இதுவரை துவக்கவில்லை.சட்டசபை தேர்தலுக்கு, இன்னும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், அதற்குள், 90 லட்சம் பேருக்கு, இலவச பொருட்கள் வினியோகிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில், இலவச பொருட்கள் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று, நடந்தது. இதில், அரசு உயரதிகாரிகள் உட்பட, பலர் கலந்து கொண்டனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: