டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ள்ளது.
டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று சென்ற காங்கிரஸ்
கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை
நடத்தினார். தற்போதைய அரசியல்சூழல் குறித்து, குடியரசுத் தலைவருடன் சோனியா
காந்தி விவாதித்ததாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டுமே
வெற்றிபெற்றதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி
வழங்கப்படவில்லை. இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து மக்களவை சபாநாயகர் மட்டுமே
முடிவெடுக்க முடியும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அதிருப்தியில்
இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் குடியரசுத் தலைவரை
சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக