செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

தெலங்கானாவில் மெகா சர்வே ! பதிவில்லாதவர்களின் சொத்துக்களும் இதர உரிமைகளும் பறிக்கப்படும் என்று வதந்தி ?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஐதராபாத்: தெலங்கானா மாநிலம் முழுவதும் சுமார் 84 லட்சம் குடும்பங்களிடம் பல்வேறு தகவல்களை பெறும் முழு கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கியது. அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியுள்ளதால், பந்த் நடைபெறுவது போல் நகரங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. தெலங்கானா புதிய மாநிலம் பிரிக்கப்பட்டதும் முதல் முதலமைச்சராக டி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். அரசின் நலத்திட்டங்கள் முறையாக மக்களுக்கு போய் சேருவதை உறுதி செய்வதற்காக, மக்களின் குடும்ப பொருளாதார நிலை உள்பட தகவல்களையும் சேகரிக்க மெகா சர்வே நடத்தப்படும் என அவர் அறிவித்தார். சீமாந்திர பகுதியை சேர்ந்த மக்களை அடையாளம் கண்டு, அவர்களை புறக்கணிக்கவே இந்த மெகா சர்வே நடத்தப்படுவதாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஒரு அசல் பாசிஸ்டு மாதிரிதான் சந்திரசேகர ராவு தெரியிறார் .இவரால் இன்னும் பல துன்பங்கள் வருமோ என்று பயப்படவேண்டி இருக்கிறது ? சீமாந்த்ரா மக்களுக்கு எதிராக இவர்காட்டும் குரோதம் அழிவுக்கு வழிகாட்டும் .


சீமாந்திரா பகுதியை சேர்ந்த ஏராளமானோர், தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருப்பதுடன், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தங்களது சொத்துகளுக்கும், தொழில்களுக்கும் பாதிப்பு வருமோ என்ற பீதி ஏற்பட்டது. அதனால், கணக்கெடுப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சில நிபந்தனைகளுடன் சர்வே எடுக்க ஐதராபாத் ஐகோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து, கணக்கெடுப்பில் மக்களின் சொந்த ஊர் விவரங்கள் தொடர்பான கேள்வி மட்டும் நீக்கப்பட்டது.  இந்நிலையில், இன்று தெலங்கானா மாநிலம் முழுவதும் சர்வே தொடங்கியது.

இதற்காக இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் இருந்து கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென அரசு கேட்டு கொண்டுள்ளது. மேலும், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பஸ், டாக்சி, ஆட்டோ போக்குவரத்துகளும் முடங்கின. இதனால் பந்த் நடப்பது போல் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.மேலும், வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தெலங்கானாவை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் மட்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்களிலும், வேன்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கி கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர் உள்பட 4 லட்சம்  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள விவரம், வீட்டில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட  பொருட்கள், சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு, வங்கி கணக்கு, பாஸ்போர்ட், ஆதார், கல்வி தகுதி போன்றவை குறித்த தகவல்கள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே, முதல்வர் சந்திரசேகரராவ் கூறுகையில், ‘மக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம். யாரையும் குறிவைத்து இந்த சர்வே நடத்தப்படவில்லை. அரசு நலத்திட்டங்கள் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பதால் சரியான, உண்மையான தகவல்களை பொதுமக்கள் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை: