சனி, 3 ஏப்ரல், 2010

அம்மாவிற்கு 40 ஆசனம் பிரபாகரனின் பிழைத்துப்போன ராஜதந்திர நகர்வ

பிரபாகரனின் பிழைத்துப்போன ராஜதந்திர நகர்வுகளைப்? புற்றி எழுதும் ஆய்வாளர்களுக்கு
நிதர்சனன
நடிகவேள் எம். ஆர்.ராதா ஒரு நடிகன் மட்டும் அல்ல சீர்சிருத்த கருத்துக்களை கூறி வந்ததுடன், மூடக் கொள்கைகளை தகர்த்தெறிதற்கு நகைசுவையோடு கலந்த பிரட்சாரங்களை மேற்கொண்டவர். திரைப்படம் ஒன்றில் ஒருவர் இறந்தவுடன் சிலர் இழிவாக அவரை பேச்சுவார்கள். அப்பொழுது அவர் கூறுவார்” அவனைப்பற்றி யாரும் இங்கே பேசக்கூடாது, ஒருவன் இறந்தவுடன் அவனுடைய நல்லது, கெட்டது எல்லாம் அழிந்து போச்சு, ஆகவே அவனைப்பற்றி இங்கே யாரும் பேசப்படாது” என்பார்.
இதே பொன்று பிரபாரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் பரிதாபகரமான இறப்பு நிகழ்ந்ததின் பின்னர் அவர் குறித்தோ ,அல்லது அவரின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்தோ விமர்சிப்பது நாகரீகமாக இருக்காது என்று எண்ணியிருந்தோம். இதனால் அவர் குறித்த விமர்சங்களை அடக்கி வைத்திருந்தோம். நாம் இப்படியாக இருப்பதினால் ஆய்வாளர் என்ற பெயரில் பிரபாகரன் குறித்து ஆள் ஆளுக்கு அளவிற்கு மீறி அளந்து தள்ளுகின்றார்கள். பிரபாகரன் ஒரு தீர்க்க தரிசி, அவர் மேற்கொண்ட ராஜதந்திர நகர்வுகள் என்றெல்லாம் எழுதுகின்றார்கள்.
நெருக்கடியான காலகட்டத்தில் பிரபாகரன் மேற்கொண்ட ராஜதந்திர நகர்வுகள் என்ற தலைப்பில் அண்மை ஒரு ஒருவர் , இணையதளம் ஒன்றில் எழுதியிருந்தார். நெருக்கடியான காலகட்டத்தில் அவர் ராஜதந்திரமாக நடந்து கொண்டு இருந்திருந்தால்! வட கிழக்கு மண் இன்றும் அவரின் கட்டுப்பாட்டில் அல்லவா இருந்திருக்க வேண்டும். மண்டை பிழந்து அவர் ஏன் மாண்டு போனார்.தலைவர் போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதாக அந்த ஆய்வாளர் அறிவுறுத்தி இருக்கின்றார்.வெற்றியை கொண்டுவருவதுதான் ராஜதந்திரம், அழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நகர்வை, வேண்டுமானால் அழிவுதந்திரம் என்று அழைக்கலாம். சம்மந்தர் கூறியது போன்று தம்பி பிரபாகரன் விவேகம் இல்லாது மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் அவரின் அழிவிற்கான இறங்கு படிகளாகவே அமைந்து போயின.
வட கிழக்கு மக்களை வாக்களிக்க விடாது தடுத்து, மஹிந்தாவை ஆட்சி பீடம் ஏற வைத்தது பிரபாகரனின் ராஜதந்திர நகர்வா? போரிடுவதற்கு வலு இல்லாது இருந்தவேளை மாவிலாற்றில் படையினரை வலு சண்டைக்கு இழுத்தமை,கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது மக்களையும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றமை, அரச படைகள் அவரை சுற்றி வழைப்பதற்கு இலகுவாக கடல் கரையோகமாக சென்று நின்றமை, இறுதி வரையும் தன்னோடு கடல் படை தலைவர், காவல் படை தலைவர், புலனாய்வு துறை தலைவர், அரசியல் துறை பொறுப்பாளர் போன்றோரை எல்லாம் ஒருமித்து வைத்திருந்தமை என்பதெல்லாம் இராஜதந்திர நகர்வுகளா? புலிகளின் தலைவருக்கும் ராஜதந்திரத்திற்கும் வெகுதூரம் என்பது பலருக்கு தெரியும். ஆனால் யுத்தத்தினை நடத்தும் ஒரு தலைனுக்கு இராஜதந்திரம் வேண்டாம், யுத்த தந்திரம் கூடவா இல்லாதிருக்க முடியும்.
முக்கிய தலைவர்கள் அனைவரையும் தன்னோடு வைத்திருக்கும் அளவிற்கு அவருக்கு யுத்த தந்திரம் இருந்திருக்கின்றது. முன்னணி தலைவர்களில் ஒருவரை இழந்தாலும் ஏனைய தலைவர்கள் விடுதலை போராட்டத்தினை முன்னெடுத்து செல்லும் அளவிற்கு தலைவர்கள் பல குழுக்களாக கலைந்து அல்லவா இருந்திருக்க வேண்டும். நகரும் குழுக்களாக (moving group) காட்டிற்கு புகுந்துவிட்டால் துப்பாக்கியில் கடைசி மகசீன் (magazine)இருக்கும் வரையில், நகர்ந்து கொண்டே இருக்கலாம். இதனை விடுத்து கடற்கரையோரமாக சென்று அனைத்து முன்னணி தலைவர்களும் ஒருமித்தா நின்றிருப்பார்கள். தான் அழிந்தாலும் விடுதலை போராட்டத்தினை தொடர்ந்து நிகழ்த்துவதற்கு ஏனைய தளபதிகள் இருக்க வேண்டும் என்றல்லவா ஒரு தலைவன் நினைத்திருப்பான். அப்படிப் பட்டதொரு தொலைநொக்கு சிந்தனை அல்லவா இருந்திருக் வேண்டும் . அதனை விடுத்து அழிந்தால் எல்லோரும் தன்னோடு அழியவேண்டும் என்று நினைப்பவன் ஒரு தலைவனா? இதனையா நீங்கள் ராஜதந்திர நகர்வு என்று அழைக்கின்றீர்கள்.
தலைவர் இக்கட்டான சூழலில் இருந்ததினை இவர் அறியாது எழுதுகின்றார் என்று நீங்கள் நினைக்கலாம். இறுதி நேரத்தில் அற்புதம் ஏதாவது நிகழாதா என்று தலைவர் காத்திருந்தது எமக்கு புரியும். வடமராட்சியினை படையினர் சுற்றி வழைத்த போது இந்திய படையினர் மிராஜ் யுத்த விமானத்தின் துணையுடன் வந்து சாப்பாட்டு பொதிகளை வீசி , ஜே. ஆரை பயமுறுத்தி அன்று புலிகளை காப்பாற்றி இருந்தார்கள். முல்லைதீவுக்குள் இந்திய படையினர் தலைவரை சுற்றி வழைத்து நின்ற போது, இந்திய படையே வெளியேறு என்று பிரேமாதாசா காப்பாற்றி இருந்தார். அமைதி உடன்படிக்கையினை கைசாத்திட்டு சந்திரிகா ஆட்சி காலத்தில் பிரபாரகரனை ரணில் காப்பாற்றி இருந்தார். இப்படியானதொரு சூழலை புலம் பெயர்ந்த புலி தலைவர்கள் நிகழ்த்துவார்கள் என்று தலைவர் காத்திருந்தார். தமிழகத்தில் இருக்கும் புலிகளின் பெயர்களை சொல்லி பொருளீட்டும் காகித புலிகளும், புலம் பெயர்ந்த புலிகளும் சர்வதேச அழுத்தங்களின் ஊடாக யுத்தநிறுத்தத்தினை கொண்டு வருவார்கள் என்று தலைவர் நம்பி இருந்தார். வை.கோ வேறு தன்பங்கிற்கு அம்மாவிற்கு 40 ஆசனம் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்துவேன் என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார். மற்றும் நோர்வே நாட்டு அரச சார்பற்ற நிறுவனம் , தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இலங்கை அரசுடன் திரைமறைவில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தன்னை காப்பாற்றும் என்று பிரபாகரன் நம்பி இருந்தார். ஆனால் இலங்கை அரசின் சகோதரர்கள் தாமே ராஜதந்திரிகள் என்பதினை முல்லிவாய்க்காலில் முடித்து காட்டினார்கள்.
ஈழத்தமிழ் மக்களின் பிரநிதிகள் புலிகளே என்று நோர்வே நாட்டு மந்திரி சர்வதேச அளவில் புலிகளுக்கு அங்கீகாரம் பெற்று கொடுத்திருந்தார். இதனை சரிவர பயன்படுத்த தவறிய தலைவருக்கு ராஜதந்திரம் தெரியும் என்கின்றார்கள். புலிகள் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களையும், அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து கொலைகளையும் மேற்கொண்டமையினால் ஐயிரோப்பிய ஒன்றியம் முதலில் புலிகளுக்கு பயணதடையினை விதித்து இருந்தது.இதற்காக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் பணியாற்றிய ஐயிரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் வட கிழக்கினை விட்டு வெளியேறுமாறும், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் அங்கம் வகிக்க கூடாது என்று புலிகள் உத்தரவிட்டு இருந்தார்கள்.இதுவா உங்கள் தலைவரின் ராஜதந்திரம்? (Is this call diplomacy?). இப்படியாகவா இக்கட்டான காலகட்டங்களில் உங்கள் தலைவர் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டார்?
இதுமட்டுமா, வரலாற்றில் முதல் தடவையாக வட கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் தாயக பூமி என்று சட்ட ரீதியாக , எழுத்து வடிவில் கைசாத்தான இலங்கை இந்திய உடன்படிக்கையினை நிராகரித்தமை, அது மட்டும் அல்லாது அதனை நடைமுறைப் படுத்தும் போதும் அதற்கு உபத்திரம் கொடுத்தமை, ராஜீவ் காந்தியை கொலை செய்து, எமக்கு நட்புறவாக இருந்த நாட்டினை எதிரிக்கு நண்பணாக்கியமை, என்பனவெல்லாம் உங்கள் தலைவரின் ராஜதந்திர நகர்வுகளே!
பிரபாகரனின் ஆய்வாளர்களுக்கு!
பணம் பண்ணும் நோக்கம் இல்லாது உங்களுக்கு உங்கள் தலைவர் மீது உண்மையில் மரியாதை இருக்குமானால் ! அவர் குறித்து நீங்கள் மிகைப்படுத்தி ஆய்வு செய்யாது , அவரை ஈழத் தமிழர்களின் காவிய நாயகனாக காட்டுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதே மேலாகும். இதனை விடுத்து நீங்கள் தொடர்ந்தும் அவர் குறித்து மிகைப்படுத்தி எழுதுவீர்களாயின், நாம் அதற்கு ஹொடர்ந்து இவ்வாறாக உண்மை விளக்கம் கொடுக்க நேரிடும். தன்னால் தமிழ் மக்களின் விடுதலை வெற்றெடுக்க முடியும் என்ற விறுமாப்போடு ஏனைய இயங்களை கொன்றொழித்துவிட்டு, ஈழ தமிழர்கள் குறித்து பேசும் உரிமையினை குத்தைக்கு எடுத்துவிட்டு , 40 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் தியாங்களை செல்லாக் காசாக்கிவிட்டு, ஆயிரகணக்கான அப்பாவிகளின் உயிர்களை பலி கொடுத்து விட்டு , லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கிவிட்டு, இறுதியில் சைனைற் கடிப்பதற்கு தைரியம் அற்று எதிரியிடம் மண்டியிட்ட்ய் மாண்டுபோனவரை தலைவர் என்றும், ராஜதந்திரி என்றும் எழுதுவது ஏளனத்திற்கு உரிய விடயமல்லவா?
எதிரி போருக்கு அழைக்கும் போது தனக்கு முதுமை வந்து விட்டதே என்று தயங்காது , வாலிபன் ஒருவனுடன் போரிட்டு வீரமரணம் எய்திய எல்லாளன் பரம்பரையில் வந்த இனம் எங்கள் தமிழ் இனம். அப்படியான இனத்தை கெவலப்படுத்தி விட்டு சென்றவரை காவிய நாயகனாக சித்தரிப்பது தமிழ் இனத்திற்கே இழுக்கான செயல் அல்லவா? தமிழர்களை வென்றுவிட்டோம் என்ற சந்தோசத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தினை எப்படி மறப்பது.ஆயுதம் ஏந்தாத அந்த அமிர்தலிங்கம் உங்கள் குண்டை மார்பிலும் , தலையிலும் ஏந்தி வீரமரணம் அல்லவா எய்தி இருந்தா ர். அவர் உங்கள் ஆயுதத்திற்கு பயந்து அடிபணியவில்லை. ஆனால் உங்கள் தலைவன் எதிரியிடம் உயிர் பிச்சை கேட்டு மாண்டுபோனது மானகெட்ட சாவு அல்லவா? இதனையா உங்கள் தலைவரின் தீர்க்க தரிசனம் என்கின்றீர்கள்.
ஆங்கில தெரிந்தவர்கள் எல்லோருக்கு அரசியல் அத்துபடி என்றும், பட்டதாரிகள் எல்லொரும் புத்திஜீவிகள் என்றும் எமது சமுகத்தில் ஒர் பகுதியினர் மட்டில் விளங்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே பிரபாகரனை ராஜதந்திரி என்றும், தீர்க்கதரிசி என்றும் எழுதும் ஆய்வாளர்களுக்கு சில ஊடகங்கள் முத்தியத்துவம் கொடுத்து அவர்களை ஆய்வாளர்களா காட்டுகின்றது. லண்டனில் இருந்து முழங்கும் ஓசையும் இதற்கு விதிவிலக்கானது அல்ல. தமிழ் விஞ்ஞானிகள், அறிஞர்கள், பேராசிரியர்கள் போன்றோரை எல்லாம் செவ்வி காணும் ஓசை, பிரபாகரனை ராஜதந்திரி என்று கூறும் ஆய்வாளர்களுடனும் அலசுகின்றது. உலகெங்கிலும் வாழும் மில்லியன் கணக்காண தமிழ் பேசும் மக்களின் அபிமான வானொலியாக முழங்கும் ஓசையின் தரத்தினையும் , மக்கள் அதன் மீது கொண்டிருக்கும் நம்பகதன்மையினையும் தொடர்ந்து பாதுகாகவேண்டும். கீத பொன்கலன் போன்ற பேராசிரியர்களை செவ்வி காணும் ஓசை தனது தரத்தை தாழ்த்தி விடக்கூடாது.

கருத்துகள் இல்லை: