விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வசதியான செயற்பாடுகளைச செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கடல் கடந்த தமீழம் நாடு கடந்த தமீழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என்று சொல்லிக் கொண்டிருக்க இங்கு மகிந்த இங்கு ‘புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள்’ என்று அவர்களை விடுதலை செய்ய பின்னடிக்கிறார். இது வெளி நாட்டில் உள்ளவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. அவர்களுக்கு இங்குள்ள மக்களின் நிலமைகளை சரியாகத் தெரியும். இங்குள்ள போராட்டத்தின் நிலை தெரியும். அவர்கள் தாங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்பதிற்காக செய்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கு எத்தனையோ வித்தில் உதவிகளைச் செய்ய முடியும். தேவையான அதிகாரப் பரவலாககம் சம்பந்தமான பல வேலைகளைச் செய்யலாம். அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
இது மகிந்தவுக்கு வசதியை அமைத்து கொடுக்கின்றது. சிறார்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கிறோம் என்று மகிந்த சொல்லும் பொழுது சிறார்களுக்கு புனர்வாழ்வை பெற்றோர்களால் தான் கொடுக்க முடியும் என்று நான் குறிப்பிட்டேன். இன்று அரச கட்சியில் போட்டியிடும் கனகரத்தினம் போன்றவர்கள் அவர்களை விதலை செய்வதற்காக என்று கூறி விண்ணப்ப படிவம் நிரப்புகிறார்கள். அரச கட்சியில் போட்டியிடுவர்கள் ஏன் விண்ணப்ப படிவம் நிரப்ப வேண்டும்? இங்கு இவர்களது தேர்தலுக்காக அந்த மக்களின் வேதனைகள் எல்லாம் பாவிக்கப்படுகிறது. நாங்கள் படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். ஆனால் முதலில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.
உலகம் முழுவதிலும் யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதானம் எதரிர்பார்க்கப்படும். எனவே இப்படியான விடயங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.
சம்பந்தன் அய்யா என்னை வந்து தங்களுடன்தான் கேட்க வேண்டும் எனக் கேட்டார். நானும் அதற்கு சம்மதித்திருந்தேன். புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் விலக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு இவ்வளவு காலமும் பேராட்டத்துடன் நின்ற சிலருக்கு ஆசனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்திருக்கலாம். இது பற்றி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் நான் தெளிவாக சொல்லியிருந்தேன். அவர் பேசி விட்டு சொல்லுவதாக சென்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு பொது இணக்கத்திறகு வர முயற்சி செய்தோம். ஆனால் எல்லா கட்சிகளும் முற்று முழுதாக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றையே செய்து கொண்டன. அத்தோடு தத்தமது கட்சிகளின் நலன்களை பார்க்கும் பொழுது நாங்கள் எங்கள் கட்சியின் நலநனை பார்க்க வேண்டியிருந்தது. மற்றும்படி ஒன்றிணைந்து செயற்படுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. பொதுவான வேலைத் திட்டத்திற்கு உரியவர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டு அவர்களை நேர்காணல் ஊடாக நியமனம் கொடுத்திருக்கலாம். இறுதி வரை நாங்கள் அவர்களது பதிலுக்கு காத்திருந்தோம். செல்வம் அடைக்கலநாதன் எங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அதனால் நாங்கள் இறுதி நேரத்திலேதான் இப்படி போட்டியிடுவது என தீர்மானித்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக