புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர்களடங்கிய சுமார் 1300பேர் இன்று முதலாம் திகதி விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளனர். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி சிறுவர் பேராளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர். புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு தொகுதி சிறுவர் போராளிகள் பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலுமொரு தொகுதி சிறுவர் போராளிகள் விடுவிக்கப்படவுள்ளதாக புளொட் தலைவர் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்மை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக