tamil.oneindia.com - Nantha Kumar R : வாஷிங்டன்: ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் ஆகியோரின் விவாகரத்து வழக்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.15,288 கோடிக்கு(1.7 பில்லியன் டாலர்) ‛பாண்ட்' தாக்கல் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் நம் நாட்டை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. நிறுவனத்தின் சிஇஓவாக செயல்பட்டார். தற்போது ஜோஹோ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார்.
ஸ்ரீதர் வேம்பு இந்தியா வருவதற்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வந்தார். அவரது மனைவி பெயர் பிரமிளா சீனிவாசன். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த 2020ம் ஆண்டில் இந்தியா வந்த ஸ்ரீதர் வேம், 2021ம் ஆண்டில் மனைவி பிரமிளா சீனிவாசனை பிரிவதாக அறிவித்தார்.
ஸ்ரீதர் வேம்பு - பிரமிளா சீனிவாசன் தொடர்பான விவாகரத்து வழக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் பிரமிளா சீனிவாசன், ஸ்ரீதர் வேம்பு மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னையும், தனது மகனையும் 2020ம் ஆண்டு நிர்கதியாக விட்டு சென்றுவிட்டார். பராமரிப்பு செலவுக்கு பணம் வழங்கவில்லை. அதுமட்டுமின்றி ஜோஹோ நிறுவனத்தில் தனது பெயரில் இருந்த பங்குகள் மற்றும் பிற சொத்துகளை அவர் சகோதரி, அவரது கணவர் பெயரில் மாற்றிவிட்டார். விவாகரத்துக்கு பிறகு சொத்தில் சரிபாதியை வழங்க ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இப்படி செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீதர் வேம்பு முற்றிலுமாக மறுத்தார்.
கடந்த 2024ம் ஆண்டில் பிரமிளா நீதிமன்றத்தில்ex-parte application தாக்கல் செய்தார். அதில் அமெரிக்காவில் வருவாய் ஈட்டும் ஒரு கூட்டுசொத்தை வெளிநபருக்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. அதனை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
Recommended For You
சார் உங்கள பாக்க முடியுமா? தனிப்பட்ட முறையில் வந்து பேசிய மோடி.. புது குண்டை வீசிய ட்ரம்ப்
இந்நிலையில் தான் ஸ்ரீதர் வேம்பு - பிரமிளாவின் விவாகரத்து வழக்கு கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்பு தனது மனைவி பிரமிளாவின் உரிமையை பாதுகாக்க வேண்டும். இதற்காக 1.7 பில்லியன் அமெரிக்க டாலரை பிணைத்தொகை பத்திரமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இன்றைய டாலர் மதிப்பில் 15,288 கோடியாகும்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது கலிபோர்னியா குடும்ப சட்டத்தின்படி, கணவன்-மனைவி திருமண உறவில் இருக்கும்போது அவர்கள் சேர்க்கும் சொத்துகள் அவர்களுக்கான சொத்துகளாகும். அந்த சொத்துகள் கணவன் - மனைவி ஆகியோர் சமமாக பிரித்து கொள்ள வேண்டும். ஆனால் கணவன் - மனைவியாக இருந்தபோது சொத்துகளை பிரிப்பது, பிறகு நடந்த சொத்து பரிமாற்றங்கள் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
இந்த வழக்கில் திருமண உறவில் கணவன் - மனைவி சொத்துகளுக்கான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது மனைவிக்கு நியாயமான முறையில் சொத்துகளை பிரித்தளிப்பதை நீதிமன்றத்தின் வழியாக தடுக்கும் வகையில் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி இந்த வழக்கின்போது ஸ்ரீதர் வேம்பு சார்பில் தெரிவிக்கப்பட்ட சில விளக்கங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக