Vimalaadhithan Mani : மிகவும் வருத்தத்திற்குரிய திமுகவில் நிலவும் உள்கட்சி அரசியல்.
சமீபத்தில் திமுக அயலக அணி சார்பில் (NRTIA) பஹ்ரைனில் நடந்த விழாவில் குறிப்பிட்ட சில திமுக அபிமானிகள் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் என்னை போன்ற உடன்பிறப்புகளுக்கு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு இல்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் Most Privileged உடன்பிறப்புகள் மட்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் PEN நிறுவனம் "திராவிடத்தால் நான்" என்ற தலைப்பில் நான் பேசிய ஒரு நிமிட வீடியோவை மாநிலங்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மூலம் வெளியிட்டு இருக்கிறது.
சமீபத்தில் முரசொலியில் கூட எங்கள் குடும்பம் திமுக குடும்பம் என்ற செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் நான் வாழும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் திமுக அயலக அணி பொறுப்பாளருக்கு, 10 வருடங்களாக அமீரகத்தில் வசிக்கும் வெகு தீவிரமாக களமாடும் திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திமுக அபிமானியான என்னை பற்றிய எந்த அறிமுகமும் கிடையாது.
கழகத்துக்காக களமாடும் என்னை போன்ற படித்தவர்களும், ரொம்பவும் சிந்திப்பவர்களும் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறார்கள் (PTR போல) என்பதை நான் ஒரு குற்றச்சாட்டாகவே வைக்கிறேன். இந்த டெக்நாலாஜி யுகத்தில் அறிவார்ந்த படித்தவர்கள்தான் கட்சியை வலுவாக்குவதில் நவீன அரசியலை முன்னெடுப்பதில் உண்மையில் தலைமைக்கு உதவ
முடியும். இப்படி அறிவுள்ள சித்தாந்த பிடிப்புள்ள கழக அபிமானிகள்தான் கழக தலைமை கேட்காமலேயே, தன்னார்வலர்களாக கழகத்தின் சாதனைகளை தரவுகளுடன் பொதுமக்களிடம் தினமும் கொண்டு சேர்க்கிறோம், கழகத்தின் எதிரிகளுடன் சளைக்காமல் தரவுகளுடன் வாள் சுழற்றுகிறோம்.
ஆனால் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுவதை பார்த்தால், படித்தவர்கள் என்றாலே கழகத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அலர்ஜி போல தோன்றுகிறது. கழகம் நடத்தும் வருடாந்திர டெக்நாலாஜி நிகழ்வான UMAGINE நிகழ்ச்சியிலும் என்னை போன்ற தொழில்நுட்ப நிபுணர்கள் இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்து இருக்கிறோம்.
இப்படி கட்சிக்குள்ளாகவே நடக்கும் உட்கட்சி அரசியல் என்பது என்னை போன்றவர்களுக்கு மிகவும் மனசோர்வை கொடுக்கிறது. கட்சியின் மீதான என்னுடைய அபிமானத்துக்கான அங்கீகாரம் மற்றும் அடையாளம் கொடுக்க மறுக்கும் கட்சியை நான் ஏன் தூக்கி கொண்டாட வேண்டும் என்ற நியாயமான கோபமும் எழுகிறது.
இப்படி உள்கட்சி அரசியல் காரணமாக படித்தவர்களின், அரசியல் தெளிவு உள்ளவர்களின் அபிமானத்தை திமுக இழக்குமே தவிர வேறு ஒரு நன்மையையும் நிகழப்போவதில்லை என்பதை திமுக தலைமையும் திமுக அயலக அணி தலைமையும் புரிந்துகொண்டால் சரி 🤔
தலைவர் கலைஞர் சொன்னதுதான் தற்போது நியாபகத்துக்கு வருகிறது "திமுக எவன் அப்பன் வீட்டு சொத்துமில்லை, அது தொண்டர்களுக்கானது "😎
M.M. Abdulla
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக