![]() |
![]() |
ராதா மனோகர் : 1965 இல் இலங்கை தமிழரசு கட்சியை ஐக்கிய தேசிய கட்சியோடு ஒரு கூட்டணி அரசை அமைத்தது
அதில் உள்ளூராட்சி அமைச்சராக திரு முருகேசு திருச்செல்வம் பதவி வகித்தார்
உண்மையில் அந்த அரசில் தமிழரசு கட்சியின் தலைவர் ராசமாணிக்கமும் தமிழரசு கட்சியின் நல்லூர் எம்பி நாகநாதனும் அமைச்சராக பதவி ஏற்பதற்கு பெரும் முயற்சி எடுத்திருந்தார்கள்
ஊர்க்காவல் துறை எம்பியும் தமிழரசு கட்சியின் மூளை என்று கூறப்படுபவருமான திரு வி .நவரத்தினம் அவர்கள்.இந்த முயற்சியை கடுமையாக எதிர்த்து இவர்களின் மந்திரி கனவுகளளை தவிடு பொடியாக்கி இருந்தார்
இவரை 1968 இல் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்.
இலங்கை தமிழரசு கட்சியின் வீழ்ச்சி இதிலிருந்து ஆரம்பமானது.
டட்லியின் அரசில் அங்கமாக தமிழரசு கட்சி இருந்தமையானது தமிழ் காங்கிரஸ் கட்சியின் மீள்வரவுக்கு காரணமாகியது.
தங்களின் கடும் தமிழ் தேசிய ஆதரவு தளம் காலாவதியாகி கொண்டிருந்ததை அறிந்த தமிழரசு கட்சியினர் அதை மீண்டும் கவர்ச்சிகரமாக தமிழர்களுக்கு மீள் அறிமுகம் செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து பிரபல தமிழ் தேசியவாதியான சிலம்பு செல்வர் திரு மபொ சிவஞானம் அவர்களை அழைத்திருந்தார்கள்
இலங்கை பிரதமர் திரு டட்லி சேனநாயக்காவோடு நல்ல புரிந்துணர்வோடு எப்போதும் இருந்த தமிழரசு கட்சியின் மபொசி இலங்கை வருவதற்கு உரிய அனுமதியை பெற்றிருந்தார்கள்.
![]() |
அதுவரை இலங்கை தமிழரசு கட்சியினர் காட்டிய தமிழ் தேசிய அரசியலை விட அதி தீவிர தமிழ் தேசியத்தை காண்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்
ஏனெனில் தமிழ் காங்கிரஸ் எல்லா தொகுதிகளிலும் ஏறக்குறைய சமநிலையை எட்டி இருந்தது
இதில் வேடிக்கை என்னவென்றால் மபொசி அவர்களின் வரவும் தமிழ் தேசிய முழக்கமும் மக்கள் மத்தியில் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கபட்டது.
1970 இல் நடந்த தேர்தல் இதை நிரூபித்தது
தமிழரசு கட்சியின் தலைவர் செயலாளர் மட்டுமல்ல தமிழரசு கட்சியின் ஆஸ்தான அரசியல் அறிஞர் என்று கருதப்பட்ட திரு நாகநாதன் போன்றோரும் தோல்வியை தழுவினார்
தப்பி தவறி வெற்றி பெற்றவர்களும் வெறும் நூற்றுக்கணக்கான வாக்குகளால்தான் வெற்றி பெற்றனர்
குறிப்பாக திரு ஆல்பிரட் துரையப்பாவை வெற்றி கொண்ட தமிழரசு கட்சியின் சி எக்ஸ் மார்ட்டின் வெறும் 56 வாக்குகளால் தான் வெற்றி பெற்றிருந்தார்.
![]() |
![]() |
![]() |

இந்தநிலையில்தான் இவர்கள் வட்டுக்கோட்டை தனித்தமிழ்நாடு தீர்மானத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர்
ஆம் இவர்களின் தனி நாடு கோரிக்கையானது 1970 தேர்தலில் இவர்களின் அரசியலுக்கு ஏற்பட்ட வாக்கு சரிவுதான் காரணம்.
மபொசியால் முடியாமல் போனதை வட்டுக்கோட்டை தீர்மானம் மூலம் மீளுருவாக்கம் செய்தனர்
ஆனால் இதற்காக தமிழரசு கட்சி கொடுத்த விலை பெரிது.
இவர்கள் அரங்கேற்றிய வெறுப்பு அரசியல் சதுரங்கத்தில் இவர்களால் உருவேற்றப்படட இளைஞர்கள் களம் இறக்கப்பட்டார்கள்.
அந்த இளைஞர்கள் இவர்களை விட படு சுயநலவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் இருந்தார்கள் என்பதுதான் வரலாறு.
வெறும் தமிழ் தேசியம் என்பது பச்சை இனவாத வெறுப்பு அரசியல்தான் என்பதை இவர்கள் நிரூபித்தார்கள்!
இந்த தமிழரசு ஒருபோதும் சுயமரியாதை என்பது பற்றி பேசியதே இல்லை.
சமூகநீதி என்பது பற்றி மூச்சு விட்டது கூட கிடையாது.
சுயசிந்தனையின் முதல் எதிரியே இவர்களின் வெறுப்பு அரசியல்தான்.
மீள்பதிவு : 1969 ஆம் ஆண்டு சித்திரை மாதம் உடுவில் (இலங்கை) என்ற இடத்தில இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது
இம்மாநாட்டிற்கும் திரு ம பொ சி அவர்கள் வருகை தந்திருந்தார்
இலங்கையில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டில் பிரதம விருந்தினராக தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சி தலைவர் வருகை தந்திருந்தது இதுவே முதலும் கடைசியுமாகும்
இலங்கையில் எந்த ஆட்சியாளரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு விசா கொடுப்பதில் கடும் போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கிறது
வரலாற்றில் அந்த நியதியை உடைத்து கொண்டு மபொசிக்கு மட்டும் எப்படி அன்றைய டட்லி அரசு விசா வழங்கியது ஏன் என்று புரியவில்லை
மபொசியின் இலங்கை வருகை பற்றி விபரம் தெரிந்தவர்கள் பொதுவெளிக்கு கூறவேண்டும்.
முடிந்தால் அந்த தமிழரசு கட்சி மாநாட்டில் திரு மபொசி அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பொதுவெளிக்கு வைப்பது அவசியம் .
அந்த காலக்கட்டம் வரை இலங்கையின் தினசரி பத்திரிகைகளில் பெரியார் அண்ணா கலைஞர் போன்ற திராவிட தலைவர்களின் பெரிதாக செய்திகளை இருட்டடிப்பு செய்ததில்லை
அதன் பின்பு இலங்கை தமிழ் அரசியல் ஒரு தீவிர மேட்டுக்குடி தமிழ் தேசியத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது போல தோன்றுகிறது
இது பற்றி பல வரலாற்று சம்பவங்களை மீளாய்வு செய்யவேண்டும்
அது மட்டுமல்ல இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதான அரசாங்கத்தின் தடை பற்றியும் பல விடயங்களை அறிந்து கொள்ளவேண்டும்
வரலாறு முழுவதும் பல பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்க பட்டுக்கொண்டே இருக்கிறது
தமிழ் தேசியம் ஜாதியை காப்பாற்றும்
தமிழ் தேசியம் சக மனிதர்களை ஒரு துரும்பாக கருதும்
தமிழ் தேசியம் ஒரு போதும் நல்ல மனிதர்களின் வாழ்வியலாக இருக்கவே முடியாது
தமிழ் தேசியம் சில குள்ளநரிகளால் அப்பாவி மக்களை ஏமாற்றவே பயன்படும்
தமிழ் தேசியம் ஒரு போதும் சுயமரியாதையை பேசியதில்லை
தமிழ் தேசியம் ஒரு போதும் சமூகநீதியை பேசியதில்லை
தமிழ் தேசியம் ஒரு போதும் சுயமாக சிந்தி என்று கூறுயதில்லை
தமிழ் தேசியம் மக்களை கும்பல்களாக்கவே பயன்படும்..
தமிழ் தேசியம்தான் தமிழர்களை முள்ளிவாய்காலுக்குள் கொண்டு போய் மூழ்கடித்தது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக