tamil.oneindia.com - Mani Singh S : டெல்லி: லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி: 366 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
தேர்தல் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் படு பிசியாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
NDA Register Hat Trick win India alliance Crosses 100 Times now Lok sabha prediction surveyமறுபக்கம் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் பாஜக எளிதில் வென்றுவிடுவதாகவும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் ஓருங்கிணைந்து போட்டியிட முடிவு செய்து இதற்காக இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின.
கலைந்த இந்தியா கூட்டணி: இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா கூட்டணி கட்சிகள் மீளும் முன்பே, கூட்டணியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த நிதிஷ்குமார், திடீரென்று பாஜகவுடன் கூட்டணிக்கே திரும்பினார்.
இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஷாக்-ஐ கொடுத்தது. நிதிஷ்குமார் போனாலும் பரவாயில்லை.. வலுவாக நின்று பாஜகவை வீழ்த்துவோம் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. அண்மையில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக ஹாட்ரிக் வெற்றி: அதேபோல், காங்கிரஸ் கட்சி 40 - 50 இடங்களிலாவது வெல்ல வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்று கலாய்த்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் மல்லுக்கட்ட தயாராகி வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து கருத்துக்கணிப்புகளையும் செய்தி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் - Matrize ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 366 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் இந்தியா கூட்டணி 104 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மொத்த தொகுதிகள்: 543
தேசிய ஜனநாயக கூட்டணி : 366
இந்தியா கூட்டணி : 104
பிற கட்சிகள் : 73 tamil.oneindia.com - Mani Singh S : டெல்லி: லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி: 366 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
தேர்தல் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் படு பிசியாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
NDA Register Hat Trick win India alliance Crosses 100 Times now Lok sabha prediction survey
மறுபக்கம் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் பாஜக எளிதில் வென்றுவிடுவதாகவும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் ஓருங்கிணைந்து போட்டியிட முடிவு செய்து இதற்காக இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின.
கலைந்த இந்தியா கூட்டணி: இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா கூட்டணி கட்சிகள் மீளும் முன்பே, கூட்டணியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த நிதிஷ்குமார், திடீரென்று பாஜகவுடன் கூட்டணிக்கே திரும்பினார்.
இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஷாக்-ஐ கொடுத்தது. நிதிஷ்குமார் போனாலும் பரவாயில்லை.. வலுவாக நின்று பாஜகவை வீழ்த்துவோம் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. அண்மையில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக ஹாட்ரிக் வெற்றி: அதேபோல், காங்கிரஸ் கட்சி 40 - 50 இடங்களிலாவது வெல்ல வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்று கலாய்த்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் மல்லுக்கட்ட தயாராகி வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து கருத்துக்கணிப்புகளையும் செய்தி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் - Matrize ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 366 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் இந்தியா கூட்டணி 104 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மொத்த தொகுதிகள்: 543
தேசிய ஜனநாயக கூட்டணி : 366
இந்தியா கூட்டணி : 104
பிற கட்சிகள் : 73
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக