tamil.oneindia.com - Jeyalakshmi C : சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு போட்டியிடும் இடங்கள் குறித்து திமுக காங்கிரஸ் இடையே இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 10க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு வரும் நிலையில் அதை தருவதற்கு திமுக தர தயாராக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அரசியல் களம் அனலடிக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்துள்ளன. திமுக கூட்டணி வலிமையான கூட்டணி என்று சொன்னாலும் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை தருவதற்கு திமுக தயாராக இல்லை.
Lok sabha election 2024: DMK Congress Alliance talks Postponed behind the reason
பெங்களூரில் கதறும் மக்கள்.. திடீரென 4 டிகிரி வரை அதிகரித்த வெயில்! காரணமான ‛எல்-நினோ’.. அப்படினா? பெங்களூரில் கதறும் மக்கள்.. திடீரென 4 டிகிரி வரை அதிகரித்த வெயில்! காரணமான ‛எல்-நினோ’.. அப்படினா?
கடந்த லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற இடங்களைக் கூட தரக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக விருதுநகர், சிவகங்கை, கரூர் போன்ற தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தரக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.
திமுக சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி காங்கிரசின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் திமுக தலைமை அலுவலகத்தில் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் 15 தொகுதிகள் வரையில் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், 10க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவித்ததாகவும் இதனால், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட தொகுதிகளையே கேட்டுப்பெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி 9ஆம் தேதி இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. - காங்கிரஸ் இடையே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்தில் நடத்த 2 கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
2ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது குறைந்தபட்சம் 12 தொகுதிகள் வரை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஒற்றை இழக்க எண்களில்தான் காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் தென் மாவட்டங்களில் இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக கறார் காட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் அவர்கள் கேட்கும் இடங்களையோ, தொகுதிகளையோ ஒதுக்க யாரும் தயாராக இல்லை. இதனால் பல மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தனித்து போட்டி என்று அந்தந்த மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுமா? கேட்டது கிடைக்குமா அல்லது திமுக தருவதை பெற்றுக்கொண்டு பேசாமல் போட்டியிடுமா? அல்லது 2014 லோக்சபா தேர்தல் போல காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனித்து களமிறங்குமா பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக