வியாழன், 29 ஜூன், 2023

ம.பி.யிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு.. வெளியான கருத்து கணிப்பு முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக

kalaingar seythikal -Praveen  : பாஜக ஆட்சி நடத்திவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியுடம் ஆட்சியை பறிகொடுக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது.
தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாஜவுக்கான தென்னிந்திய கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கர்நாடகாவில் பாஜக அடைந்த தோல்வி பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் தரப்பிலும் எதிர்க்கட்சி தரப்பிலும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பாஜக ஆட்சி நடத்திவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியுடம் ஆட்சியை பறிகொடுக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2018-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது.
ம.பி.யிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு.. வெளியான கருத்து கணிப்பு முடிவுகளால் அதிர்ச்சியில் பாஜக !

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

அங்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரபல C voters நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 108-120 இடங்களும், பாஜகவுக்கு 106-118 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது என்றும், சிறிய கட்சிகளில் ஆதரவை பெரு கட்சியே வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரம் நாள் செல்ல செல்ல காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம் முன்னதாக Navbharat Samachar என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், மத்திய பிரதேசத்தில், பாஜகவுக்கு 55 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை: