ஞாயிறு, 4 ஜூன், 2023

ரயில்வே அமைச்சரே நீங்களாகவே பதவி விலகுங்கள்’: சுப்பிரமணிய சுவாமி

minnambalam : ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சாமி இன்று (ஜூன் 4) தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதிய ரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 294ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது >more-->இந்நிலையில் இந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். >இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கோரமண்டல் ரயில் செல்ல முற்பட்ட லூப் தண்டவாளம் மெதுவான ரயில்களுக்கானது என்பது இப்போது நமக்கு தெரியவந்துள்ளது.  வேகமாக சென்ற கோரமண்டல் ரயில் அந்த தண்டவாளத்தில் சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

எனவே ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். பிரதமர் சொன்னால்தான் பதவி விலகுவேன் என இருக்கக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “திறமையற்ற அல்லது பொருத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் மோடி உலகப் புகழ் பெற்றவர் என்பது மீண்டும் தற்போது தெரியவந்துள்ளது.

அதற்கு அவர் சரியான விலையை இப்போது கொடுத்து வருகிறார். இதற்கு இன்னொரு உதாரணம் தான் மணிப்பூர் விவகாரம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜகவை சேர்ந்த ஒருவர், “இது அரசியலுக்கான நேரம் அல்ல. அஸ்வினி தனது முன்னோடிகளை விட சிறந்தவர்.” என்று கூறினார்.

அதற்கு, ”லால் பகதூர் சாஸ்திரியும் திறமையானவர் தான். ஆனால் ஒரு விபத்துக்காக அவர் ராஜினாமா செய்தார்.” என்று பதிலடி சுப்பிரமணிய சாமிகொடுத்துள்ளார்.கிறிஸ்டோபர் ஜெமா<

கருத்துகள் இல்லை: