சனி, 25 பிப்ரவரி, 2023

புத்தர் சிலை முன்பு திருமாவளவன் தியானம்! தேசிய அரசியல் கட்சியாக விசிக!

tamil.oneindia.com  - Arsath Kan ; புத்தர் சிலை முன்பு திருமாவளவன் திடீர் தியானம்! தேசிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் விசிக!
புத்தர் சிலை முன்பாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட திருமாவளவன்
தெலுங்கானா: கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என மாநிலம் வாரியாக தொடர்ந்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விசிக தலைவர் திருமாவளவன், கவுதம புத்தர் சிலை முன்பாக திடீரென தியானத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்த்திருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் 274 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புத்த வனத்துக்கு தெலுங்கானா மாநில விசிக நிர்வாகிகளுடன் சென்ற அவர் இந்த தியானத்தை மேற்கொண்டிருக்கிறார்.
தமிழகம் கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேசியக் கட்சியாக அடுத்தக் கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் பணிகளில் திருமா ஆர்வம் காட்டி வருகிறார்,


திருமாவளவன் தியானம்
இதனிடையே தாம் தியானத்தில் ஈடுபட்டது பற்றி திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு; ''தெலங்கானாவில் புத்தவனம் 274 ஏக்கர் பரப்பளவில் 71 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது கேசிஆர் ஆட்சியின் போது நிறைவுபெற்றுள்ளது. தாமரை வடிவ பிரமாண்டமான தியான மண்டபத்தில் நிறுவப் பெற்றுள்ள கௌதம புத்தர் சிலையின் முன்பு அமர்ந்து தியானம் செய்தோம்.''
 புத்த வனம்


புத்த வனம்
''இந்த புத்தவனம் கிருஷ்ணா நதிக்கரையில் நாகார்ஜூனா சாகர் அணைக்கட்டு அருகே அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும். இது உலகளாவிய அளவில் பௌத்தர்களைக் கவரும் மகத்தான சுற்றுலாத் தலமாகப் புகழ்பெறும். உணவு, குடிநீர் ஏதும் ஏற்காமல் கடுந்தவமிருந்தார் கௌதம புத்தர். உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் உருக்குலைந்தார். எனினும் மானுடவாழ்வு குறித்த அவரது தேடலுக்கு விடை கிட்டவில்லை என்பதால் அத்தவத்தைக் கலைத்தார். அது அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி. அத்தோற்றத்தைக் குறிக்கும் உருவச்சிலை.''

தொடர் சுற்றுப்பயணம்
இவ்வாறு திருமாவளவன் பதிவில் கூறியிருக்கிறார். இதனிடையே இவர் கடந்த சில நாட்களாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என மாநிலம் வாரியாக தொடர்ந்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கர்நாடக சட்டசபைத் தேர்தலில் விசிகவை களமிறக்க காய் நகர்த்தி வருகிறார். அதேபோல் அடுத்தாண்டு நடைபெறும் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவும் இப்போதே விசிகவை ஆந்திராவில் கட்டமைத்து வருகிறார்.

தெலுங்கானாவில் அமைப்பு
இதேபோல் தெலுங்கானா மாநிலத்திலும் விசிகவின் கட்டமைப்பை நிறுவி இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். திருமாவளவனின் பாய்ச்சலை பார்த்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே விசிகவை தேசிய அரசியல் கட்சியாக உருவெடுக்க வைத்துவிடுவார் போல் தெரிகிறது.

VCK leader Thirumavalavan, who has been on a state-wise political tour of Karnataka, Andhra Pradesh and Telangana, has suddenly attracted attention by meditating in front of the Gautama Buddha statue.
 

கருத்துகள் இல்லை: