ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

பிரதமர் மோடியை கை கழுவும் NRIக்கள் (புலம்பெயர் இந்தியர்கள்)


ராதா மனோகர் :  75 ஆவது இந்திய சுதந்திர நினைவு நிகழ்ச்சி நேற்று கனடா மான்ரியல் நகரில் நடந்தது  
என்னதான் நடக்கிறது என்று போய் பார்த்தேன்   
கடந்த ஆறு ஏழு வருடங்களாக முழுக்க முழுக்க பனியா பார்ப்பன ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சி நிரலாகவே அது நடக்கும்  தென்னிந்தியா என்றொரு பகுதி இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டார்கள்
இம்முறையும் அப்படியேதான் நடந்தது  ஆனாலும் ஒரு வேடிக்கையான விடயம் என் கவனத்திற்கு வந்தது
வழக்கமாக காணும் இடம்தோறும் மோடி போஸ்டர்கள் மாசுபடுத்தி கொண்டிருக்கும்
ஆனால் இம்முறை மோடி படத்தை எப்படியாவது தவிர்த்து விடவேண்டும் என்று முயன்றது புரிந்தது  
எங்கோ ஒரு மூலையில் மோடி படம் ..
அதுவும் இந்திய கொடியின் பின்னணியில்   யாரவது செருப்பால் அடித்து விட கூடாதே என்ற முன்னேற்பாடாக இருக்கலாம்
போஸ்டரில் வழக்கம் போல ஆர் எஸ் எஸ் லோகமணிய திலகர் மற்றும் முழுக்க முழுக்க வடநாட்டு வெத்து வெட்டுக்கள் படங்கள் ..
இத்தனை  டம்மி பீஸுகளுக்கு  நடுவுல பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் படமும் வைத்திருந்தார்கள்!
யாருக்காக அழுதான் படத்தில் இறுதி காட்சியில் நாகேஷ் அடக்க முடியாமல் அழுவார்.
ஏன் நாகேஷ் அழுகிறார் என்ற  கேள்விக்கு அவர் சேசுவுக்காக அழுதேன் என்பார் ..
பாவம் ஜஸ்டின் 

கருத்துகள் இல்லை: