madawalaenews.com : இலங்கையில் LGBTQ+ உரிமைகளை அங்கீகரிப்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பிரேம்நாத் சி டோலவத்த எம்.பி சமர்ப்பிக்க உள்ள நிலையில் அதன் நகலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் LGBTQ+ சமூகம் அனுபவிக்கும் துன்புறுத்தல்களைத் தடுப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் மற்றுமொரு நோக்கம் இலங்கையை நவீன உலகிற்கு இணையாக மாற்றுவது எனவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“LGBTQ வாழ்க்கை முறைகள் விக்டோரியன் காலத்தில் ஒரு குற்றமாக கருதப்பட்டது,ஆனால் அது நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
நவீன உளவியலில் இது ஒரு குற்றமாக கருதப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LGBQT உரிமைகளை அங்கீகரிப்பதற்கான திருத்த சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. LGBQT உரிமைகளை அங்கீகரிப்பதற்கான திருத்த சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக