90 வருட காத்திருப்பிற்கு பின் பார்பனிய பனியா கூட்டம் (ஆர்எஸ்எஸ்)அதிகாரத்திற்கு வந்த பிறகு தங்கள் சுயரூபத்தை வெளிபடுத்துகிறார்கள்.. கிரிக்கெட் கூட தன் புகழுக்காக விளையாடியவர் தான் 50ம் 100ம் எடுக்க வேண்டுமென்பதற்காக நிறைய இழப்பை தந்து நாடு (அணி)தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்ற மனபான்மை கொண்டவர்தான் ..இவருக்கு வழங்கபட்ட வாய்ப்புகள் பிறருக்கு வழங்கபட்டிருந்தால் நிறைய வெற்றிகளை பெற்றிருக்கலாம் .. எப்போதும் தனக்காகவே சிந்தித்தவர் நாடுபற்றியெல்லாம் கவலை கொள்ளாதவர் இப்போது குரல் கொடுக்கிறார்
..
எது தேசபற்று .. போராடுகிறவன் யார் இந்த நாட்டின் முதுகெலும்பாய் நிற்பவன் .. இந்த தேசம் பசியால் வாடாமல் பொருளாதார நெருக்கடிகளை பல்வேறு நாடுகள் சந்தித்தபோதும் இந்தியாவில் அதன் நிழல்கூடபடாமல் காத்துநின்ற விவசாயி .. தேசத்தின் உணவை படைக்கும் கடவுள் .. அவன் தெருவில் இறங்கி போராடுகிறான் .. அவனுக்கு ஆதரவு தர மனமில்லையென்றாலும் மனிதநேயத்தோடு சிலர் தரும் ஆதரவையும் விமர்சிப்பது எந்தவகை நியாயம் ..
..
பாசிச அரசு பதவியேற்றதிலிருந்து அரசு லாபகரமான நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பதும் ஒரு சில பெரும் முதலாளிகளுக்காக எல்லா துறைகளையும் நுழைய அனுமதிப்பதும் எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி ..அவர்களின் காலை கழுவி தன் இனத்தை சேர்ந்தவனை உயர்பதவியில் அமர்த்த பாசிச பாஜக அரசு செயல்படுகிறது
நாம் ஒவ்வொன்றாய் இழந்து வருகிறோம் ..இந்நிலையில் விவசாயத்தின் கார்ப்பரேட்களை அனுமதிப்பது பெரு சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே நாசமாக்கி நாளடைவில் நிலங்களை இழந்து சொந்த நிலத்தில் கூலிபணிக்கு செல்கிற நிலை வந்துவிடுமென விவசாயிகள் அஞ்சுகிறார்கள் அரசு செவிசாய்க்க மறுத்து வீம்படியாக பெரு முதலைகளுக்கு குண்டி கழுவும் வேலையை செய்கிறது .. முன்பு கிழக்கிந்திய கம்பெனி வியாபார நோக்கோடு வந்து அரசாட்சி நடத்தியதை போல வருங்காலங்கில் அரசை பெரும் முதலாளிகள் இயக்குவார்கள் ஜனநாயத்தின் பெயரில் ..
நாட்டை ஒரு சிலருக்காக விற்க துணிந்த இந்த நாகரீக கோமாளிகள் பயங்கரமானவர்கள்
..
அமெரிக்க கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாயட் காவல்துறை அதிகாரியால் கழுத்தை மிதித்து கொன்ற போது இந்தியா உட்பட உலகமே கண்டித்தது யாரும் உள்நாட்டு விவகாரமென சொல்லவில்லை ..அதே போல்தான் இன்று பன்னாட்டு சமூகம் கண்டிக்கிறது
போராடும் விவசாயிகளுக்கு தண்ணீரை நிறுத்தி மனித உரிமைகளை கூட தடுத்திடுவதை உலகம் கேள்வி கேட்கதான் செய்யும்.. என்ன நடக்கிறதென்பதை உலகம் அறிய கூடாதென்பதற்காக இணைய தொடர்பை துண்டிப்பதும் இந்த அரசு மனிதநேயமற்றதென்பது என்பதை பறைசாற்றுகிறது.. பன்னாட்டு சமூகம் கவனித்துக்கொண்டுதானிருக்கிறது.. சச்சினும் லதாமங்கேஷ்கரும் வாய்பொத்தி இருந்திருக்கலாம்
பயமும் இனபாசமும் அவர்களை இப்படி பேச வைக்கிறது
..
விவசாயிகளுக்கு துணை நிற்போம்!
விவசாயிகளை காப்போம்!!
சங்கிகளை துரத்துவோம்!!!
#FarmersProtest
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக