விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க பாப் பாடகி ரிஹானா:
tamil.indianexpress.com : வெளிநாட்டினர் சிலர் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுதொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ”
முழு கலந்துரையாடலுக்குப் பிறகு புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள்
நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம்
செய்வதுடன், சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறது”
என்று தெரிவித்தது.
மிகச் சிறிய எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டுமே வேளாண் சட்டங்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போராடும் விவசாயிகளின் உணர்வுகளை
மதித்து மத்திய அரசு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துள்ளது.
மத்திய அமைச்சர்களை உள்ளடக்கி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு
வார்த்தை நடைபெற்று வருகிறது. பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே
நடத்தப்பட்டுள்ளன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
malaimalar : புதுடெல்லி:
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஹானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை நடிகை கங்கனா ரணாவத் சாடி உள்ளார்.
‘டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள்
இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால்
பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற
ஒரு சீனக் காலனியாக மாற்ற முடியும். முட்டாள்... நாங்கள் உங்களைப் போல
எங்கள் தேசத்தை விற்கவில்லை’ என கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில்
ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கங்கனா
ரணாவத்தின் இந்த பதிவு கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. போராடும்
விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய கங்கனா
ரணாவத்துக்கு, சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக